இந்தியா 2020 ம் – ஸ்பெக்ட்ரம் 2010 ம்!

இரண்டாயிரத்து இருபதில்
வல்லரசாகும் என்கிற
கலர்கலரான கனவுகளோடு
மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்
இந்தியாவில்--

2010 ம் ஆண்டு .......
உதடுகள் அனைத்தாலும்
உச்சரிக்கப்பட்ட வார்த்தை-
இந்தியாவின் சீரழிவிற்காய்
எச்சரிக்கப்பட்ட வார்த்தை-
எதிர்கட்சிகளால் நீதிகேட்டு
நச்சரிக்கப்பட்ட வார்த்தை-
பத்திரிகைகளில் நெருப்போடு
ச்சடிக்கப்பட்ட வார்த்தை-
"ஸ்பெக்ட்ரம் !"

அகிலம் முழுவதுமே அலறும்
"அரசியல்" என்கிற வார்த்தையைக் கண்டு! -அந்த
அரசியலையே அலற வைத்த வல்லமை
"ஸ்பெக்ட்ரம்" என்கிற வார்த்தைக்கு மட்டுமே உண்டு!

பூஜ்யத்தை அறிமுகம் செய்து - இந்த
பூமிக்குத் தந்தவர்கள் இந்தியர்கள்.
அவர்களுக்கே தெரியவில்லை -
ஸ்பெக்ட்ரத்தில் அடித்த கொள்ளைக்கு
பூஜ்யம் எத்தனை போடுவதென்று?

அழகு ததும்பும் ஸ்பெக்ட்ரம் என்கிற
ஆங்கில வார்த்தையை --
கேட்டாலே மூளைக்குள் கிறுகிறுக்கவைக்கும்
அருவெறுக்கத்தக்க வார்த்தையாக்கிய பெருமை
ஆவன்னா ராஜாவுக்கே சொந்தம்!

"ராஜாராம் " காலம் முத்ற்கொண்டே
ராஜாக்களுக்கும் தி.மு.க.வுக்கும்
ராசியில்லை போலிருக்கிறது.
இந்தத் தடவை.......
ஈரோடு ராஜா என்பதில் தொடங்கி
ஆண்டிமுத்துராஜா என்பதில் அடங்கி
"ராஜாத்தீ" க்களாகத் தொடர்கிறது!

ஆதர்ஷ் என்கிறார்கள்.....
அலைக்கற்றை என்கிறார்கள்....
காமன்வெல்த் என்கிறார்கள்....
கனிமொழி என்கிறார்கள்....
கருமம் ஒன்றுமே புரியவில்லை.

கேசுன்னும் கோர்ட்டுன்னும்
கிடைக்காது ஜாமீனுன்னும்
அங்க இங்க அலையவிட்டு
ஆகப் போறது ஒண்ணுமில்லே...

அடிச்ச கொள்ளையிலே
ஆளுக்கு எவ்வளவுங்கோ?
பிரிச்சுக் கொடுத்திட்டீங்கன்னா
பேசாம போயிடுவங்கோ!

அடுத்த கொள்ளை நீங்க
அடிச்சுப்புட்டுச் சிக்கும் போது...
அப்புறமாப் பேசிக்கலாம்
அதுவரைக்கும் இது போதும்.

அண்Nணாச்சி....
சீரியசாகவே கேக்கறேன்.
பத்மநாபா கோயில்
பாதாள அறைப் பொக்கிஷத்துக்கும்,
நமக்கும்
ஒண்ணும் தொடுப்பு இல்லீங்களே...