கரூரிலிருந்து பில்கேட்ஸுக்கு ஒரு கடிதம்…..

நம்ம கரூர் அண்ணாச்சி புதுசா ஒரு கம்ப்யூட்டர் வாங்கினார்.

அதுல இருக்கும் சில குறைகளை நீக்க நம்ம பில்கேட்ஸ்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கூத்த நீங்களே பாருங்க ……….

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்கப் பெருமிதம் அடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜி-மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள். 

2. விண்டோஸில் “Start” என்னும் பட்டன் உள்ளது. ஆனால் “Stop” பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள். 

3. “Recycle Bin” என்பதை “Rescooter Bin” என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது. 

4. “Find” பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் “Find” மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள். 

5. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு. 

6.என்னுடைய குழந்தை “Microsoft word” கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது “Microsoft sentence” ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான். 

7. என்னுடைய கம்ப்யூட்டரில் “My pictures” என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்? 

8. “Microsoft Office” இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி “Microsoft Home” கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்? 

இப்படிக்கு 
பெயர் வெளியிட விரும்பாத சங்கர் வீரப்பன்.
ஊர் கரூர்னு சொல்ல மாட்டேன். கண்டுபுடிங்க பார்க்கலாம்.

புத்தாண்டு…. ரிலாக்ஸ்…..

malena-original

இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த மனைவியை புருஷன் எழுப்பினான்.

பொண்டாட்டி : என்னங்க இந்த நேரத்துல.?

புருஷன் : ஒரு அதிசயம் நடந்துடிச்சு டி .

பொண்டாட்டி: ஆ என்ன நடந்திச்சு?

புருஷன் : ஒன்னுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, அப்போ தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒன்னுக்கு இருந்துட்டு கதவை மூடினால் தானாவே லைட் நின்னுடிச்சு.
என்ன ஒரு அதிசயம் பார்த்தியா!!!

பொண்டாட்டி : அறிவு கெட்ட முண்டம் தூக்க கலக்கத்தில பாத்ரூம்னு நினச்சு பிறிஜ்ஜ துறந்து ஒன்னுக்கு இருந்திட்டு கதை சொல்றியா கதை. மூடிட்டுப் படு…..

புருஷன் : ????? ))))) ???

 

goa_honeymoon_tour

மனைவி எனும் பெண்ணுக்குள்,  

ஒரு பர்சனல் செக்ரடரி,

ஒரு குக்,

ஒரு வேலைக்காரி,

ஒரு படுக்கைத் துணை,

ஒரு நிர்வாகி,

ஒரு கணக்குப்பிள்ளை,

ஒரு நீதிமன்றம்,

ஒரு ஹாஸ்டல்,

ஒரு சினிமா தியேட்டர்,

ஒரு மினி பார்,

ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்,

இத்தனையும் அடங்கி இருக்கிறது…!

 

சண்டே ஸ்நாக்ஸ்… ரசிப்பதற்கு மட்டுமே!

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள். அதில் கடைசி மருமகன் நம்ம கரூர் கருப்புசாமி.

அவளுக்குத் தன் மருமகன் 3 பேரும் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டுப் படகுப் பிரயாணம் போனாள்.  நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.

அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது. “மாமியாரின் அன்புப் பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.

அவரும் ஒரு மாருதி கார் வென்றார். ” மாமியாரின் அன்புப் பரிசாக..”

மூன்றாவது நம்ம கருப்புசாமிக்கும் இந்த சோதனை நடந்தது.

அவர் கடைசி வரை மாமியாரைக் காப்பாத்தவே இல்ல..

மாமியார் கடைசியா பரிதாபமா “‘லுக்கு” விட்டப்ப- நம்ம கருப்புசாமி சொன்னார்,

“போய்த் தொலை… எனக்குக் காரும் வேணாம், ஒண்ணும் வேணாம்…. சாவுற வரைக்கும் சைக்கிள்லயே போயிக்கிறேன்… நீ என்ன பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?”

மாமியார் செத்துட்டா.

ஆனாலும்- மறுநாள் காலையில் கருப்புசாமியின் வீட்டு வாசலில் ஒரு பளபளக்கும் வெளிநாட்டுக் கார் நின்னுச்சு..

“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோடு…!

color

தூங்குவதற்கு முன் கணவன் மனைவியிடம் சொல்வது…

அமெரிக்காவில் “good night my love “

இங்கிலாந்தில் “sleep well my love “

ஆஸ்திரேலியாவில் “sweet dreams my love “

இந்தியாவில் —- கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூட்டியாச்சா???????

color

 

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக்கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!
colorஓடோடி வந்து காவல் நிலையத்துக்குள் நுழைந்த கருப்புசாமி அங்கிருந்த காவலரிடம்,

“இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் ல‌ வையுங்க..” என்று கெஞ்சினார்.

காவலருக்கோ ஆச்சரியம்…

“ஏன்.. என்ன ஆச்சு..?… நான் எதுக்காக உங்களை லாக்‍கப்ல வைக்கணும்… அப்படி என்ன தப்பு பண்ணுனீங்க?”

“என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..”

“ஓ…செத்துட்டாங்களா..?”

“இல்லே ஐயா… கோபமா என்னை துரத்திகிட்டு வந்துகிட்டு இருக்கா.. அவள் கையில நான் மாட்டிடக்கூடாது…அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!
color

 

வியர்க்க விறுவிறுக்க தபால் அலுவலகம் நோக்கி வேகமாக ஓடி வந்தார் கருப்புசாமி. 

அங்கே இருந்த போஸ்ட் மாஸ்டரிடம், 

“என் மனைவி மீண்டும் காணாமல் போய் விட்டாள்… நீங்கள் தான் எப்படியாவது எனக்கு உதவ வேண்டும்” என்றார்.

போஸ்ட் மாஸ்டருக்குக் கோபம் வந்துவிட்டது. 

“உன் மனைவி காணாமல் போய் விட்டால் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் கொடு. இது தபால் அலுவலகம்…இங்கே வந்து ஏன் சொல்கிறாய்?

அதற்குக் கருப்புசாமி சொன்னார்,

“அது எனக்குத் தெரியும் சார்! போன தடவை காணாமல் போன போது போலிஸ் ஸ்டேசனில்தான் புகார் கொடுத்தேன். அவர்கள் உடனே கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்”

color

 

பேருந்து பயணத்தில் இரண்டு பெண்கள். நடு இரவு. மார்கழி பனி.

இருவருக்குள்ளும் பயங்கர வாய்த் தகராறு.

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி…இன்னொரு­த்தி ஜன்னலை திறக்க சொல்லி!

ஒருத்தி சொன்னாள், “பனிக்காற்று எனக்கு ஒத்துக் கொள்ளாது…ஜன்னலை திறந்தால் நான் செத்துவிடுவேன்”

மற்றவள் சொன்னாள், “எனக்கு மூச்சு திணறுகிறது… இப்போது ஜன்னலை திறக்காவிட்டால் மூச்சு திணறி செத்து விடுவேன்”

யாராலும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. 

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்,

“ஐயா…முதலில் ஜன்னலை மூடுங்கள்…ஒருத்தி செத்து விடுவாள்..பிறகு ஜன்னலை திறங்கள்… இன்னொருத்தியும் செத்துவிடுவாள்… அதன்பின் நாம் நிம்மதியாக வீடு போய் சேரலாம்”

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

“எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது?” என்று அந்த பெரியவரிடம் கேட்க அவர் சொன்னார்,

“அந்த ரெண்டு பேருக்கும் நான்தாங்க புருஷன்”

“ஐயா…தெய்வம்யா நீங்க…உங்க பேரு என்னங்கையா?”

“கரூர் கருப்புசாமி!”

ஸாரி, ஸாரி, ஸாரி……

ஸ்கூல் மணியடித்து பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார் டீச்சர்.
அப்போது +2 படிக்கும் ஒரு மாணவி வகுப்பறைக்குத் தாமதமாக வருகிறார்.MISS : ஏன் லேட்டு?
GIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்!MISS : இப்போ டைம் என்ன தெரியுமா? 9.30…. அரைமணி நேரம் லேட்டு.

koyil 
GIRL : ஸாரி மிஸ்….MISS : நீ தினமும் இப்படித்தான் வர்ற?….  பீரியடடோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு?

GIRL :  தெரியும் மிஸ்….
MISS : தெரியுமா? என்ன தெரியும்……  சொல்லு!

GIRL : அது வந்து மிஸ், அது வந்து மிஸ்…..  ஒரு தடவை எங்க அக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா.  அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க……  எங்கப்பாவுக்கோ ஹார்ட் அட்டாக்கே வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு….  எங்க வீட்டுக் கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டடே ஓடிட்டான்!

MISS : அம்மா தாயே….. பொதும், உட்காரும்மா!

தண்டவாளத்தைத் தாண்டணும்…..

train

 

ர‌யி‌ல் நிலைய‌த்‌தின் அருகில் நின்றிருந்தவரை ஒருவர் கேட்டார்….

“ஹவுரா எக்‌ஸ்‌பிர‌ஸ் எத்தனை மணிக்குப் புறப்படும்?”

“10.30 மணி”

“பெங்களூர் மெயில்?”

“11.25”

“தமிழ்நாடு எக்‌ஸ்‌பிர‌ஸ்?”

“1.15”

“சதாப்தி எக்‌ஸ்‌பிர‌ஸ்?”

பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு,

“3.00 மணிக்கு” என்றார்.

“பிருந்தாவன் எக்‌ஸ்‌பிர‌ஸ்?”

பொறுமையிழந்த அவ‌ர்,

“நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்?” என்று கேட்டார்.

ராகுல் பாபா சொன்னார்,

“நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கும் போக‌வி‌ல்லை, தண்டவாளத்தைத் தாண்டணும், அதா‌ன் கே‌ட்டேன்!

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இந்த டிசம்பரில் உலகம் அழியாது….

ஏதோ டெக்னிக்கல் பிராப்ளமாம் 
போர்டு மாட்டிட்டாங்க ……….

2012-ல் இருந்து 3012-க்கு மாத்திட்டாங்க!

21-ம் தேதி நைட்டு மெகா பார்ட்டிதான்!

(பொண்ணொட  சீப்பைத் திருடிட்டதனால

கல்யாணம் நின்னுபோயிடுமாங்கிற பழமொழியை நினைக்காதீங்க)

கல்யாண வீட்டில் செருப்பைத்தொலைத்தவன்  

எழுதிய ஒரு கவிதை:

உள்ளே ஒரு ஜோடி சேர்ந்து விட்டது….
வெளியே ஒரு ஜோடி தொலைந்து விட்டது,

சில சமயங்களில்….

கோவிலிலிருந்து வெளிவரும்    

மனிதர்களின் முகத்தைவிட….

ஹோட்டலிலிருந்து வெளிவரும்  

மனிதர்களின் முகம்……

அதிகப் பிரகாசமாக இருக்கிறது!

மனிதன் நன்றியுள்ளவன் என்பதற்கு  

சரியான உதாரணம் காட்டமுடியாமல் போனதால்தான்….

நாயை நாம் உதாரணம் காட்டுகிறோம் என்று சொன்னால்

அது சரியா? தவறா?

அச்சோ…அச்சச்சோ….
21ம் தேதி ஒலகம் அழியப் போகுதாமே….

நான் என்னென்னமோ கனவு கண்டு வச்சிருக்கேனே 
எல்லாம் போச்சே….போகப் போகுதே…

இப்படிப் பேசினா… எல்லாமே உண்மைன்னு அர்த்தம்!

“இயக்குநர் விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் இயக்கிய தெய்வத்திருமகன் படத்தில் நடிச்சேன், அவ்வளவுதான்.

அவர் எனக்குக் காஸ்ட்லியான கார் வாங்கித் தரலை, நுங்கம்பாக்கத்துல வீடு வாங்கித் தரலை, வைரத்தோடு வாங்கித் தரலை, எங்களுக்குள் அப்படி எதுவுமே இல்லை…. எல்லாமே வதந்தி” – அமலாபால்.

அரசியல்வாதி மாதிரியே ஆகிட்டீங்க அமலாபால்.

கட்சிதாவும் கடைசி நிமிஷம் வரைக்கும்… அவங்கதான் இதுமாதிரியே பேசுவாங்க.

இப்படிப் பேசினா… எல்லாமே உண்மைன்னு அர்த்தம்!

‘தொழில் சம்பந்தமாக ரூ.10 லட்சம் மட்டுமே கடன் பெற்றுள்ளேன்.

கடன் கொடுத்தவர்கள் வெற்று பேப்பரில் என்னிடம் கையெழுத்துப் பெற்று ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக பொய்ப் புகார் கொடுத்துள்ளனர்’

-விடிய விடிய நடந்த விசாரணையில் நடிகை புவனேஸ்வரி சொன்ன வாக்குமூலம் இது.

தொழில் தொடர்பாகத்தான் கடன் வாங்கினார்…. ஓ.கே.

ஆனால்- என்ன தொழில்னு ஏதாவது சொன்னாங்களா சார்?