“ராஜாவைக் கைது பண்னியாச்சு, ராணியை ?”….

 ( போங்கடா நீங்களும், உங்க ஸ்பெக்ட்ரமும் )

 
17,60,00,00,00,000 ரூபாய்( எத்தனை சைபர்சரியா? ) ஸ்பெக்ட்ரம் ஊழல்வழக்கு தொடர்பாக ராஜா கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிற பரபரப்புப் பரவிய நேரம். 
 
 இந்த செய்திஉண்மைதானா? கலைஞர்டிவிசெய்தியில்வரவே இல்லையேஎன்கிற சந்தேகத்தோடு, சன் டிவி பக்கம் போனால்அங்கு விலாவாரியாக ஊழலைப்பற்றி விவரித்துக்கொண்டு இருந்தார்கள். 
 
அரசியல் நாடகம்அரேங்கேறஆரம்பித்துவிட்டது. 
 
எல்.ஐ.சி., தொடர்பான முந்திரா ஊழல் காரணமாக, நேரு அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியில் இருந்து, தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்தார். வாஜ்பாய் அரசில், சாலை போக்குவரத்து அமைச்சராக இருந்த சேடப்பட்டி முத்தையாவும், தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தமிழகத்தில் இருந்து, ஊழல் குற்றச்சாட்டுக்காகப் பதவியை ராஜினாமா செய்தவர்களில் மூன்றாவது நபராக இருந்தாலும், கைது செய்யப்படும் முதல் நபர் ராஜாவே .
  
ராசா வெறும்அம்புமட்டுமே, எய்தவர்இருக்கஅம்பைநொந்து என்ன பயன்? நொங்குதின்னவன்ஓடிட்டான்நோண்டித்தின்னவன்மாட்டிகிட்டான் என்கிற கதைதான். 
சி.பி.. யின்இந்தநடவடிக்கையைப்பாராட்டுவதற்குஒன்றுமேஇல்லை. “அண்ணனுக்குப்பொண்ணுபார்த்தமாதிரியும்இருக்கும், ஆடுமேய்ச்சமாதிரியும்இருக்கும்என்பதுபோலத்தான்இந்தநடவடிக்கையும்.  

 ஏற்கெனவேஉச்சநீதிமன்றம்கெடுவிதித்துஇருப்பதால்எதையாவதுசெய்துநீதிமன்றத்தின்கண்டனங்களில்இருந்துதப்பிப்பதற்கானமுயற்சிதான்இது.   இந்தஉலகசாதனையானஊழலில்தொடர்புடைய, பங்குபெற்ற , பெரியமுதலைகளில்ஒருவர்கூடகைதுசெய்யப்படவில்லையே என்கிற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. 

கைது செய்யும் போதுநன்றாகத்தான்இருக்கிறதுஆனால்இதுவரை இந்தியாவில்எந்தஅமைச்சராவதுழல்புகாருக்காகத் தண்டனைஅடைந்துஉள்ளனராஎன்றால் பதில்௦பூஜ்ஜியம்தான். 
 
எங்களுக்குத் தெரியாதாப்பாகைதுபண்ணுவீங்க, ஜாமீனில்விடுவீங்க , அப்புறம் 10000 பக்கம் 20000 பக்கம்னு குற்றபத்திரிக்கைதாக்கல் செய்வீங்க, அதுதமிழிலவேணும்இங்கிலீசிலவேணும்இந்தியிலவேணும்ன்னுகேப்பாங்க, வாய்தாவுக்குமேலவாய்தான்னு ஓடும் . பாதிசாட்சிபல்ட்டிஅடிப்பாங்க.அப்புறம்கேசு ஏழெட்டு வருஷம் இழுக்கும். பிறகுவிசாரணைமுடிஞ்சுது , நாள் குறிப்பிடப்படாமல்தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதும்பீங்க. அப்புறம் கோர்ட்டையே மிரட்டுறாங்கன்னு சொல்லுவீங்க..பாத்துப் பாத்துப் புளிச்சுப்போச்சு.
  
கலைஞர் டிவி கலைஞர்டிவின்னு எல்லாருக்கும் இலவசமாக் கொடுத்தா…. அதை வச்சே ஆப்பு அடிக்கிற மாதிரி வீட்டுவீட்டுக்கு ஸ்பெக்ட்ரம் ஈசியாப் போய் சேந்துருச்சுன்னு கவலையா இருக்கு.

 

கைகட்டிச் சேவகம் பண்ணிக்கிட்டிருந்த காங்கிரஸ்கூட, இப்போ இதை வச்சே மிரட்டுற கூத்தையும் பாக்கறப்போ…. எப்படி இருந்த தி மு க இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தமாவும் இருக்கு. 

 இதிலிருந்து மீண்டுவர…..

நீரா ராடியாதான்ஒருநல்லயோசனைசொல்லவேண்டும் !

 


“வரங்களே சாபங்கள் என்றால், தவங்கள் எதற்காக ?”

 

கடந்த 16-12-2010 –ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8  பேர் லஞ்சப் பேர்வழிகள்என்கிற குற்றச்சாட்டைமுன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பாகாதா என்று சாதாரணப் பொதுஜனம்கூட வியந்தனர். வேறு யாராவது இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருந்தால், நீதிபதிகள் கொதித்தெழுந்திருப்பார்கள். நீதிமன்ற அவமதிப்புக்காக அவர் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும்.  
 
 குற்றம் சுமத்தியவர் விவரமில்லாதவர் அல்ல. அவரைக் கூண்டில் ஏற்றினால், என்னென்ன பூதங்கள் கிளம்புமோ? உச்ச நீதிமன்றம் மௌனம் சாதித்தது.  
இப்போது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் இன்னொரு விஷயம் வெளிவந்திருக்கிறது. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இப்போது தேசிய மனித உரிமைக் கமிஷனின் தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்கள் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள்தான் இதற்கெல்லாம் காரணம்.   
நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ஜி. பாஸ்கரன், இவர், கே.ஜி. பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும் வாங்கிக்குவித்த அசையாச் சொத்துகள் பற்றிய விவரம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது.  பிரச்னை இதோடு முடிந்துவிடவில்லை. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மூத்த மருமகன் பி.வி.ஸ்ரீநிஜன். . இவர் மீதும் கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்க்குப் பொருத்தமின்றி சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பத்திரிகைகளில் வெளியாகியது. திடீர் கோடீஸ்வரரானது இவர் மட்டுமல்ல, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் இளைய மகளின் கணவரான பின்னியும்தான்.
  
 
தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் நீதிபதிகளைப் பற்றிய, குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றிய விவரங்களைத் தரவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டவர் அன்றைய தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன். நீதிபதிகள் தங்கள் சொத்துக் கணக்கை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுகூறி நிராகரித்தவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போதல்லவா தெரிகிறது, அதன் பின்னணியும் காரணமும்!
  
சாந்திபூஷண் குறிப்பிட்ட 8 ஊழல் தலைமை நீதிபதிகளில் ஒருவர் யார் என்பது தெரிந்துவிட்டது. மீதி 7 பேர் யார்யார் என்பதும் வெளியாகக்கூடும். அதுவல்ல முக்கியம். நீதித்துறை களங்கப்படுகிறது. அதன் மீதான நம்பிக்கை தகர்கிறது. இது தேசத்துக்கு நல்லதல்ல.
 
 திரு. .வி. வி. கிரி அவர்கள் ஜனாதிபதியாய் இருந்தபோது பம்பாய் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவரும் டெல்லிக்கு வந்து ஒரு மனு ஜனாதிபதியிடம் கொடுத்தார்கள். அதாவது அந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் அங்குள்ள பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டு தீர்ப்பு கூறுகின்றார்கள் என்று சமர்ப்பித்த மனுவை பார்த்து ஜனாதிபதி தலையில் அடித்து கொண்டதாக கூறுவார்கள்.
 
 நீரா ராடியா பதிவுகளில் திரு ஜெயின் என்கிற உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு 9 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சாதகமான தீர்ப்பு பெற்ற விவரம் அலசப் படுகிறது.  நாட்டின் தலையாய நீதிமன்ற நீதிபதிகளின் லட்சணம் இப்படியுள்ளது பாலகிருஷ்ணன் விவகாரம் ஊர் சிரிக்கிறது. .நாட்டில் நீதித் துறை ஒன்றுதான் மக்களின் கடைசி ஆயுதம். அதில் ஊழல் கறை படிய விட்டால் ஜனநாயகம் மரணத்தை சந்திக்கும். சமுதாய அமைதியும் அப்போது கேள்விக்குறியாகிவிடும்
 
“வரங்களே சாபங்கள் என்றால்., தவங்கள் எதற்காக ?” – என்கிற கவிக்கோ அப்துல் ரஹ்மானின் வார்த்தைகள்தான் நினைவிற்கு வருகிறது.
 எனது மருமகன்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்றும், தனக்கு அதில் தொடர்பே இல்லை என்பது போலவும் அறிக்கை வெளியிட்டுத் தப்பித்துக் கொள்ள முயல்கிறார் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். சட்டப்படி, அவரது கூற்றில் நியாயமிருக்கலாம். ஆனால், மனசாட்சிப்படி அவர் தனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று கூறுவாரேயானால், உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நாம் ஒரு பொய்யரை அமர்த்தி அழகு பார்த்திருக்கிறோம் என்று தலைகுனிந்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.  

மாண்புமிகு முதல்வரின் கவனத்துக்கு…!

பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத் துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.
முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன் அனுமதித்தார் என்பதுதான் கேள்வி.
விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள் இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா?

கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு. கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி – மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம் தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், “நீங்கள் நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்’ என்பதாக இருந்தது.

முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும் சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார் முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக் கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன?

 

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி இருக்கும் காலகட்டத்தில், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக்கிடக்கிறது, ஊழல் தலைவிரித்தாடுகிறது, முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான் கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும், “கும்பி எரியுது, குடல் கருகுது…’ வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு வருகிறது.

சினிமாவுக்கு வசனம் எழுதுவது முதல்வருக்குத் தேவையில்லாத வேலை என்று யாரும் எடுத்துக்கூறுவதாக இல்லை. மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி??
 
 

ஜனவரி…..பிப்ரவரி…. வருமானவரி !

அரசு வேலையோ, தனியார் வேலையோமாதச் சம்பளத்தை நம்பிப் பட்ஜெட் போடும் குடும்பதாரர்களுக்கு, இந்த மாதங்கள் என்றாலே கொஞ்சம் அலர்ஜிதான். காரணம், இழுத்துக்கோ பிடிச்சுக்கோ என்று வருகிற சம்பளத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமான வரிக்காகக் காவு கொடுக்க வேண்டியிருக்குமே என்பதால் !   
 
                  அதுசரிஅவர்கள் பிடித்தம் செய்தால் நாங்கள் விட்டுவிடுவோமா என்ன?. அத்ற்கென சில சந்து பொந்துகள் இல்லாமலா இருக்கும்?
 வருமான வரியிலிருந்து விலக்குப் பெறும் சட்டம் 80 சியின் கீழ் பலவிதமான சேமிப்புகள் மற்றும் செலவினங்களுக்கு விலக்குக் கிடைக்கிறது. அதன்படி  வரியின்றித் தப்பிக்கத் தெரிந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகள்…..
 

  # தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கும், அதனுடன் சேர்ந்து வழங்கப்படும் பென்ஷனுக்கும்

# பொதுத்துறை மற்றும் போஸ்ட் ஆபீசில் தொடங்கப்படும் பொது பிராவிடண்ட் பண்டுகளுக்கும் 
 
# தேசிய சேமிப்புப் பத்திர முதலீடு மற்றும் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் முதலீடு மற்றும் அனத்துவகையான இன்சூரன்சுகளுக்கும் செலுத்தப்படும் பிரீமியம்— (ஒருவர் எத்தனை ஆயுள் இன்சூரன்ஸ் வைத்திருந்தாலும்).

 

# வீட்டுக்கடனுக்காகச் செலுத்தப்படும் தவணைத்தொகை, (அதிக அளவில் அனைவராலும் து பயன்படுத்தப்படுகிறது) பத்திரப்பதிவு செலவு, பதிவுக்கட்டணம் உட்பட எல்லாமே 

# குழந்தைகளின் படிப்புச் செலவிற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டணத்திற்கு 
 
 # வங்கியில் 3 ஆண்டுகளுக்கு மேற்பட்டு செய்யப்படும் நிரந்தர வைப்பு நிதிகளுக்குஇப்படி எத்தனையோ வழிகள் ஏமாற்றுவதற்கு.  
 
   சம்பளத்துக்கு மட்டும்தான் இது.– மறைமுகமாகக் கை நீட்டி வாங்கும் கிம்பளத்துக்கெல்லாம் இது எதுவும் இல்லை.

அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் இது.– ஆயிரம் கோடி என அடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது எதுவும் இல்லை.

  அது சரிஉங்களுக்கெல்லாம் வருமானவரிதான் பிரச்னை. 
 
  எங்களுக்கோ ?…… வருமானமே பிரச்னை !

 நடத்துங்க சார் !!!