சர்தார்ஜி ஜோக்ஸ்….

டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) “இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்”.
சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) “டீச்சர், உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதைத்தடுத்து நிறுத்தவேண்டும்”.
*************************************************************
சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்”.
**************************************************************

ஏப்ரல் 1ம் தேதி சர்தார்ஜி பேருந்தில் ஏறி, டிக்கெட் ஒன்று கேட்டார். நடத்துனரும் காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்தார். உடனே சர்தார்ஜி சொன்னார், “ஏப்ரல் பூல். என்னிடம் பாஸ் இருக்கிறதே!

************************************************************

சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?

*************************************************************

ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு ‘கொலஸ்ட்ரால் கொடுங்க’ என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை’ என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, ‘நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?’ என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், ‘இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது’ என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் “Colestrol FREE” ன்னு எழுதியிருக்கு..”

*****************************************************************
சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்…..
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.
வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.
கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்………..
சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக………..
*************************************************************
பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.
************************************************************
சர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “
இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”
“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”
**********************************************************
பழுது பார்க்கும் சர்தார்ஜி: சர்தார்ஜி ஒருவர் எலக்ட்ரீசியனாக இருந்தார். அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார். சர்தார்ஜி, “நாளை வருகிறேன்” என்றார். ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் அவர் வரவில்லை. அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்தார். “ஏன் வரவில்லை..? “ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை.
*********************************************************
வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.
” அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?”
” இல்லையே… 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு..”
” யோவ்… அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி
பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?”
” கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்… அதான்….”
************************************************************
நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்…
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!
**********************************************************