மலரும் நினைவுகள்….

அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தில் லிஃப்ட்டில் பயணம் செய்தார்..

லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னைவேலைக்கு வர வேண்டாமென்று சொன்னதாய் முறையிட்டு வருந்தினான்.

அவர் அரசாணையைக் காட்டினார்.

அவனை விட குறைவா படிச்ச நான் முதலமைச்சரா இருக்கலாம், 
எட்டாவது படிச்ச பையன் லிஃப்ட் பொத்தானை அமுக்கக் கூடாதாண்ணேன்! சட்டத்தை மாத்துங்கண்ணேன்!” 

சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர்.

அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார்.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார்.

வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும் பரிசோதித்தார்.

மருந்தை எழுதித் தரச் சொன்ன தலைவர், 

ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார்.

பிறகு சொன்னார்,

“இது உனக்கு ஆசீர்வாதமாய் தரப்படுவது மட்டுமல்ல

. ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்று நீ நினைவில் வைக்கவே உன் முதல் நோயாளியின் கட்டணம் இது” என்றார்.

அவர் பேரறிஞர் அண்ணா!

 

One comment on “மலரும் நினைவுகள்….

Leave a comment