வடை போனது போனதுதான் …..

இதோ அதோ என்று இரண்டு மாத காலமாக இழுத்துக் கொண்டிருந்த மத்திய மந்திரிசபை மாற்றம் ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டது.

யாரையெல்லாம் தூக்கப்போறாங்களோ என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம், ஏற்கனவே ரெண்டு மந்திரிகளைக் காவு கொடுத்திட்டுத் தவிச்சுக்கிட்டிருக்கிற தி.மு.க.வில், இந்தத் தடவை யார் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதோ என்கிற படபடப்பு இன்னொருபுறம். ஆனா, இது இரண்டையுமே புஸ்வானம் ஆக்கிட்டுப் போயிட்டார் நம்ம பிரதமர்.

தமிழகத்திலிருந்து ஜெயந்தி நடராஜன் அமைச்சராக்கப் பட்டிருக்கிறார். “விஷக்கிருமிகள் தமிழ்நாட்டில் பரவி விட்டன” என்று 1967ம் ஆண்டு தி.மு.க.வைச் சொல்லி வேதனைப்பட்ட முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தி. இன்று அவர் அந்த விஷக்கிருமிகளின் (?) தீவிர ஆதரவாளர் என்பதும்கூட மந்திரியாவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்னமோ?. ஆனால் அதைவிட முக்கியமான இன்னொரு காரணம்…. “ஜெ’ வாகக்கூட இருக்கலாம். தமிழ்நாட்டில் “ஜெய” என்கிற பெயர் இப்போதைக்கு ரொம்ப ராசியானது போல. ஜெயலலிதா, ஜெயக்குமார், ஜெயந்தி நடராஜன்…..

தி.மு.க.வைச் சேர்ந்த யாரையும் மத்திய அமைச்சராக்குமாறு கோரவில்லை என்று கலைஞரும், தி.மு.க.விற்கான இடம் காலியாகவே உள்ளது என்று பிரதமரும்– நமக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். (அல்வா கொடுத்திருக்கிறார்கள்? )

தி.மு.க.ஏன் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பதுகுறித்துப் பலவிதமான யூகங்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. கலைஞர் டி.ஆர்.பாலுவுக்கு மந்திரி பதவி கேட்டதாகவும், காங்கிரசு அதற்குத் தலையாட்ட ம்றுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி. கனியே திஹாரில் கிடக்கிறபோது காங்கிரசுடன் என்ன கொஞ்சல் என்று தற்காலிகமாக ஒதுங்கியதாகவும் ஒரு பேச்சு.

இவைகளை எல்லாம் மீறி ஒரு சுவராசியமான கற்பனை உரையாடலை– “பெங்களூரு கணேஷ் அய்யர்” என்பவர் தந்திருப்பதாக என்து நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டினார். உங்களுக்காக அது இங்கே (சென்சார் செய்யப்பட்டு) பதியப்படுகிறது.

இடம்: அண்ணா அறிவாலயம். — தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்.
மு.க:- தம்பி பாலு, நீ வேணா அமைச்சரா போறயாப்பா?
பாலு:- சும்மா இருங்க தலைவரே… எனக்கு என்ன ஸ்பெக்ட்ரமா கெடச்சுது? எதோ கடல்ல மண்ண அள்ளி நாலு கப்பல் வாங்கத்தான் முடிஞ்சுது, அதையும் கொடஞ்சு ஆப்பு வச்சுட்டாங்கன்னா?
மு.க:– தம்பி மாவீரன் நெப்போலியன், நீ போறயாப்பா?
நெப்ஸ்:– கல்யாண வீடா இருந்தா நான் மாப்பிளையா இருக்கணும், இழவு வீடா இருந்தா நான் பொணமா இருக்கணும், நாடாளுமன்றமா இருந்த நான் பிரதமராத்தான் இருக்கணும்!
முக-: அடப்பாவி, நீ எனக்கே ஆப்பு வச்சுடுவே போலிருக்கே? சரி, தம்பி கிருஷ்ணகிரி சுகவனம் நீங்க?:
சுக-: தலைவா… நான் ஏதோ ஒரு தடவ ஜெ அம்மையார சட்டமன்றத் தேர்தல்ல ஜெயிச்சதுக்காக இந்தப் பதவி வெச்சிருக்கேன், இதுக்கு மேல ஆசப்பட்டா நம்ம சோலி தாங்காதுங்க…
முக:- திருச்சி சிவா நீங்க? சிவா:- அய்யா, தலைமைக்காகவும் கனிக்காகவும் நான் இப்பவே ராஜினாமா பண்ணறேங்க!
முக:- விளங்கிடும் போ… சரி, ஜெயதுரை நீ என்னப்பா சொல்றே?
ஜெயதுரை: நான் வேணும்னா உங்களுக்கு அடுத்த படம் எழுத தெம்புக்கு லேகியம் தாரேங்க, இந்த ஜெயிலு பெயிலு எல்லாம் வேணாங்க.
மு.க:- சரி, ஜெகத்ரட்சகன் நீங்க? ஜெகத்: இப்போதான் தலைவரே நான் கட்சிலயே சேந்துருக்கேன்….பட்டிமன்றமெல்லாம் பேசறேன்… என்னப்போயி???
முக-: சரி விடு, வேற யாருய்யா இருக்கா??
ஆற்காட்டார்:– தலைவரே, நான் வேணும்னா இந்தக் கரென்ட்டுத் துறைக்கு அமைச்சராப் போகட்டுங்களா?
முக:– கொன்னே புடுவேன் படுவா, கொஞ்ச நேரம் கொயட்டா இரு. தங்கச்சி ஹெலன் நீங்க?
ஹெலன்:– அடப்போங்கய்யா எனக்கு வெக்கமா இருக்கு. நான் ஒரு கோவிலுக்குப் போனதுக்கே என்ன வறுத்து எடுத்துட்டீங்க, இப்போ மறுபடியும்?
முக: தம்பி நாமக்கல் காந்திசெல்வா, நீயாவது சொல்லுப்பா ஒரு நல்ல வார்த்தை?
காந்தி:– அய்யா, அண்ணன் அழகிரிய துணைப் பிரதமர் ஆக்கிடலாம். அது ஒண்ணே போதும்.
அழகிரி:- அப்படியே கனிமொழிய வெளியே கொண்டுவந்து சட்டம் நீதி மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் காபினெட் மந்திரியா ஆக்கிடுங்க. அதுக்குத்தானே இவ்வளவு ரூட்டுப் போடறீங்க. போடுங்க போடுங்க…..
மு.க:– சரி சரி. இப்போதைக்கு இத விடுங்க. கனி வெளிய வரட்டும். அப்புறமாப் பாத்துக்கலாம்.