பாட்டு வைத்தியம்?

 

எங்க பக்கத்து வீட்டுல ஒரு தாத்தா இருக்கார். அவரு ரொம்ப நாளாகவே கால் முட்டி ரெண்டும் வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

அவங்க வீட்டு சனங்களும் எத்தனையோ எலும்பு-முறிவு டாக்டர்களிடம் அவரைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்தாங்க.

எங்கு பார்த்தும், எவ்வளவோ செலவு செஞ்சும் ஒன்னும் சரியான மாதிரித் தெரியல.

இந்த நிலைமையில்- போன வாரத்தில ஒரு நாள்……

அந்தத் தாத்தா எங்க வீட்டில உட்கார்ந்து டிவி பார்த்திக்கிட்டு இருந்தார். அப்புறம் என்னடான்னா இந்த ரெண்டு நாளா ஆளையே காணோம்.

இன்னைக்கு திடீர்னு வீட்டுக்கு வந்து முட்டிவலி எல்லாம் ஓடியே போச்சுன்னு எங்க வீட்டு டி.வி.க்கு ஆரத்தி எடுத்தார்.

எனக்கு ஒண்ணுமே புரியல….. என்னாச்சு தாத்தான்னு கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்….

“நான் நடந்தால் அதிரடி, என் பேச்சு சரவெடி”ன்னு ஒரு பாட்டை அன்னைக்கு உங்க வீட்டு டி.வி.யில பார்த்தேன். அதிலே அணில் விஜய்ன்னு ஒரு டாக்டராம், அவரு மூட்டுவலிக்கான எக்ஸர்சைஸ் செஞ்சிக்கிட்டு இருந்தார், அதே மாதிரி நானும் செஞ்சேன். இப்போ சரியாகிடுச்சு, தேங்க்ஸ் டூ அணில் விஜய்!” என்றார்.

நடிகர் விஜய்- டாக்டர் விஜய் ஆகிவிட்டார். கூட ஆடிய தமன்னா?…..

அடக் கடவுளே!