அவள் அப்படிச் சொன்னது எனக்கு சரியாகப் படவில்லை!

அவள் பணக்காரப் பத்தினியாகவுமில்லை….

சீமாட்டியாய் இருந்து
பரத்தையாகவுமில்லை….
 
மண் தின்ற உடம்பை
மனிதர்கள் தின்னட்டுமே!
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்கு
சரியாகப்படவில்லை
 
அவள் சொல்லும் மனிதர்கள்-
அவளை
மனுசியாகவே பார்க்கவில்லை….
போகப் பொருளாகத்தானே பார்த்தார்கள்.
அவள்
அப்படிச் சொன்னது
எனக்கு சரியாகப்படவில்லை……..
 
தன் தொழில் தர்ம்ம் காக்க-
மனிதர்களை மண்ணைவிட
மேலானவர்களாக ஒப்பிடுகிறாளே!
 
பல உடலோடு படுத்து
அந்த உடல்தரும் வேக்காட்டைப் பெற்று-
நோய் வாய்ப்பட்டு இறக்கும்போது…
அந்த மேலான மனிதர்களா தாங்குகிறார்கள்?
மண்தானே தாங்குகிறது.
 
மண் தின்ற உடம்பை
மனிதன் தின்னட்டுமே
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்குச்
சரியாகப்படவில்லை.
நன்றி – வலிப்போக்கன்.
color
படுத்து எழுந்து 
பசிதீர்த்துக் கொண்டவன் –
பறைசாற்றுகிறான் உன்னை …..

மிதமாய் சொல்லும்போது 
விபச்சாரி.

 
நாகரிக மொழிகளில் 
விலைமாது, பரத்தை.
 
வசைபாடும்போது 
தேவடியாள்.
வசதிகேற்றாற்போல் வைத்துக்கொண்டான் 
வார்த்தையிலும்..படுக்கையிலும்..
நன்றி- படைப்பாளி.
Advertisements

“ஒரு இரவுக்கு நானூறு மட்டும் !”

ஜெர்மனி என்கிற நாட்டைப்பற்றி யாரும் கேள்விப்படாமல் இருக்கமுடியாது.

ஜெர்மனி என்கிற பெயரைச் சொல்லும்போதே…. ஹிட்லர் என்கிற சர்வாதிகாரியின் நினைவு நமது நெஞ்சுக்குள் வந்து உட்காரும். ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த பன்னிரண்டு வருட காலத்தில்…. ஒன்றல்ல, நூறல்ல, பதினாறு லட்சம் கொலைகளைச் செய்திருப்பதாக வரலாறு சொல்கிறது.

என்ன காரணத்திற்காக இத்தனை கொலைகள்?. ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கு மட்டுமே சொந்தமானது. ஜெர்மனியர் அல்லாதவர்கள், ஜெர்மனிக்குள் மட்டுமல்ல…. உலகத்திலேயே இருக்ககூடாது என்கிற தீராத வெறி. கிட்டத்தட்ட ஆறு லட்சம் யூதர்களை ஹிட்லரும், ஹிட்லரைச் சந்தோஷப்படுத்த அவரது விசுவாசிகளும் கொன்று குவித்தனர்.

அவர்களுக்குப் பொழுதுபோக்கே…. எழுந்தவுடன் டீ சாப்பிடுகிற மாதிரி இவர்களைப் பிடித்துவந்து கொல்வதுதான். அதுவும் விதவிதமான ஸ்டைல்களில்…. ஒரு பெரிய அறை ஒன்றுக்குள் எல்லோரையும் கொண்டுவந்து நிர்வாணமாகப் பூட்டிவைத்து, விஷவாயு செலுத்தித் துடிதுடிக்க வைத்துக் கொல்வது அதில் ஒரு ஸ்டைல்.

சரி விடுங்கள்…. அப்போதைய ஜெர்மனியை மறந்துவிட்டு, இப்போதைய ஜெர்மனிக்கு வருவோம்…

ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் நைட் கிளப்புகள் மற்றும் விபச்சார விடுதிகளிடமிருந்து அதற்காக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்…. கிளப்புகளுக்கோ விடுதிகளுக்கோ செல்லாமல் தெரு ஓரங்களில் விபச்சாரம் செய்பவர்களிடம், வரியை எப்படி வசூல் செய்வது என்று யோசித்து– அதற்கென ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது ஜெர்மனின் பான் நகர நிர்வாகம்.

பான் நகரில் இரவு 8.15 முதல் அதிகாலை 6 மணி வரை விபசாரம் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் தெரு ஓரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளிகள் வரி செலுத்துவதற்காக செக்ஸ் வரி மெஷின்கள் பொருத்தப்படும். விபசாரம் பரவலாக நடக்கும் சாலைகளில், இந்த மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் 400 ரூபாய் செலுத்தி பாலியல் தொழிலாளர்கள் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த ரசீதை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் அன்று இரவு முழுவதும் பாலியல் தொழில் செய்யலாம். போலீசார் பிடிக்கும்போது அவர் இந்த ரசீதை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர் மீண்டும் இந்தத் தொழில் செய்வதற்குத் தடையும் விதிக்கப்படும். பான் நகரில் மட்டும் சுமாராக 200-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.

உலகின் மிகப் பழமையான தொழில் எனப்படும் பாலியல் தொழிலுக்கு வரி வசூலிக்க, உலக நாடுகளிலேயே முதன் முறையாக ஜெர்மனியில்தான் வரி வசூலிக்கும் மெஷின் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

செக்ஸ் தொழிலுக்கே முறையாக வரி செலுத்தும் ஜெர்மனியை…. எந்தத் தொழிலாக இருந்தாலும் வரி ஏய்ப்புச் செய்யத் துடிக்கிற இந்தியா கொஞ்சம் கவனிக்கட்டும்!

இது குறித்து — இந்தத் தொழிலில் தொடர்புடையவரும், ரெட் லைட்டர்ஸ் புரட்டெக்சன் கவுன்சிலைச் சேர்ந்தவருமான பம்பாய் துவாரகாவின் கருத்து….

“வரவேற்க வேண்டிய திட்டம். பயந்து பயந்து தொழில் செய்யவேண்டிய தொல்லை இல்லை. சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. வரி செலுத்துவோர் பட்டியலிலும் அவர்கள் வந்துவிடுகிறார்கள். இந்தியாவிலும் இதைச் செய்ய வேண்டும். இங்கு மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பொய் முகமூடி அணிந்துகொண்டு புத்தர் வேஷம் போட்டு அலைவதால் நமக்குத்தான் நஷ்டம். வருமானத்துக்கு வருமானமும் வரும். குற்றங்களும் சமுதாயத்தில் குறையும்….

எந்த ஊரில் இந்தத் தொழில் இல்லாமல் இருக்கிறது? இங்கிருக்கிற 100 கோடிப் பேரும் ராமன்கள்தானா? மும்பைக்கு வந்து பாருங்கள்… தெரியும். அவ்வளவு ஏன்? சென்னையிலிருக்கும் என் நண்பர்களே சொல்லிக் கேட்டிருக்கிறேன்… இரவு பத்துமணிக்கு மேல் எல்லாமே கிடைக்குமென்று. பிறகு எதற்கு இந்த வேஷம்?

எங்களது படுக்கை விரிப்புகளை உதறிப்பாருங்கள்… முக்கியத் தலைவர்கள் எத்தனை பேருடைய முகவரிகள் சிதறுகிறது என்று…..”

போதுமடா சாமி !

“விபச்சாரமோ, அபச்சாரமோ…. என்ன சாரமோ?”

விபச்சாரம், அபச்சாரம், விகிதாச்சாரம், கலாச்சாரம், சம்சாரம், சமாச்சாரம். ….  என்ன சாரமோ, என்னென்ன சாரமோ, ஒரு சாரமும் விளங்கவில்லை.

விபச்சாரம்னா என்ன? எங்கே செய்தால் அது விபச்சாரம்? யார் யாரெல்லாம் செய்தால் அது விபச்சாரம் என்கிற வட்டத்துக்குள் வரும்? எந்தெந்த சூழ்நிலைகளில் விபச்சாரம் விபச்சாரமாகாது? இதெல்லாம் ஒண்ணுமே விளங்காத ஒரு புதிராகவே இன்னும் இருந்து வருகிறது.

மும்பையிலும், கொல்கத்தாவிலும் விபச்சாரம் செய்தால் அதை சட்டம் எதுவும் செய்யாதாம். ஆனால் சென்னையில் மட்டும் விபச்சாரம் செய்தால் அது பாவமாம். சட்டப்படி குற்றமாம். என்ன சட்டமோ என்ன வெங்காயமோ, ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது.

விபச்சாரம்னா என்னதான் அர்த்தம்? மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணுடன், உடல் ரீதியான தொடர்பை, சுகத்தை, பணம்கொடுத்துப் பெறுவதுதான் விபச்சாரம் என்றால் ஓரளவு சரியாக இருக்குமா? அப்படியானால், சினிமாவில் நடிக்கும் அத்தனை நடிகைகளும் தேவையான அளவு பணம் பெற்றுக்கொண்டு, விபச்சாரத்திற்குண்டான அத்தனை வேலைகளையும் செய்கிறார்களே, அது எந்த வகையில் சேர்த்தி? கதாநாயகனையும், சிலசமயம் வில்லனையும் கட்டிப்பிடிக்கிறார்கள், உரசுகிறார்கள், முத்தமிடுகிறார்கள், மோகிக்கிறார்கள், பம்பரம் விடுகிறார்கள், படுக்கை விரிக்கிறார்கள், ஆம்லேட் போடுகிறார்கள், அவுத்துப்போட்டு அணுகுண்டும் வெடிக்கிறார்கள். இப்படி அத்தனையும் செய்கிறார்களே…. அதெல்லாம் என்ன சாரம்??

அரசியல்வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தில்லியிலிருந்து திவாரிகள் வரை அத்தனையும் அப்படித்தான். இரண்டு மூன்று மனைவிகள், மூன்று நான்கு குடும்பங்கள், நான்கு ஐந்து தொடுப்புகள்….. எல்லாமே சர்வ மயம். அவர்களுக்கெல்லாம் இந்த “சாரம்” பொருந்தாதோ?

“திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் தனியறையில் தகாத முறையில் தங்கி இருந்தால் அது விபச்சாரமாகுமா?”–“விபச்சாரத்தில் பெண்ணுக்கு மட்டும்தான் தண்டனை, ஆணுக்குக் கிடையாதா?”–இதுமாதிரியான கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில் கிடைத்தபாடில்லை.

முதலில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் விபச்சாரம் என்பது எந்தச் சட்டத்திலும் குற்றம் என்று சொல்லப்படவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தாங்களாக விருப்பப்பட்டு, இசைந்து உறவு கொள்ளும் பட்சத்தில் – அது எந்தவிதத்திலும் சட்டப்படி குற்றமாகாது. ஆனால்…இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், அந்த இருவரும் கட்டாயம் மேஜராக இருக்கவேண்டும். ஒருவேளை-பெண் பதினாறு வயதுக்குக் குறைவானவளாக இருந்து, அந்தப்பெண்ணின் முழுசம்மதத்துடனே நீங்கள் அவளுடன் உறவு கொண்டாலும்கூட, சட்டத்தின் பார்வையில் அது கற்பழிப்புக் குற்றமாகிவிடும் என்பதயும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அப்படியானால், இன்னும் ஒரு கேள்வி எழுகிறது. பலருடைய மனதிலும் இருந்து வாட்டிவதைக்கிற கேள்வி இது. ஒரு லாட்ஜில் ஆணும் பெண்ணும் தனியாக ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள். திடீரென போலிஸ் வந்து சோதனையிடுகிறது. இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவார்களா? இதற்கான தெளிவான பதில்…. அவர்கள் இருவரும் மேஜர் என்கிற பட்சத்திலும், அவர்களால் வெளி உலகிற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாத பட்சத்திலும் அது குற்றமுமல்ல, அவர்கள் குற்றவாளிகளும் அல்ல, போலிஸ் கைது செய்யவும் முடியாது.

அதேபோல, எனக்குச் சொந்தமான வீட்டில், எனது பாலியில் தேவைக்காக – பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணை அவளுடைய சம்மதத்துடன் அழைத்து வந்து நான் தங்கவைத்திருந்தாலும் அது சட்டப்படி குற்றமாகாது.

ஆனால்… நடைமுறையில் அப்படியா நடக்கிறது? இந்தியாவில் எந்த சட்டம்தான் சட்டவிதிகளின்படி நடக்கிறது, இந்த சட்டம் நடப்பதற்கு?

அப்படியே கைது செய்தாலும், கேஸ் போடும்போது உண்மையைப் போடமாட்டார்கள். அது செல்லாது, போடவும் முடியாது. இந்த மாதிரியான வழக்குகளை யாராவது கவனித்திருந்தால் தெரியும். அவர்கள் தினமும் எழுதிக் குவிக்கும் F.I.R. ஐப் பாருங்கள். எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான வாசகம்தான் இருக்கும்,

“நான் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய பெண்ஒருத்தி என் அருகே வந்து, ‘வருகிறாயா ஜாலியாக இருக்கலாம்’ என்று அழைத்தாள்”—“நான் ரோட்டில் நடந்து வரும்போது கண்ஜடையாலும், கைஅசைப்பினாலும் காம இச்சையைத் தூண்டும வகையில் என்னை தகாத உறவுக்கு அழைத்தாள்”- இப்படித்தான் எல்லாக் கதைவசனங்களும் ரெடிமேடாகவே இருக்கும். ‘பெண் ஓரக்கண் சாடை காட்டி அழைத்தாலே தவறு’என்று சட்டம் சொல்கிறது..(ஆனால், அந்த ஓரக்கண் அழைப்பை உதாசீனப்படுத்தாது உடன்போகும் ஆணுக்கு???)

இந்தியாவில் 1956ம் ஆண்டுதான் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திச் சுரண்டுவதைத் தடுக்கும் எண்ணத்துடன் “The Suppression of Immoral Traffic Act’1956” என்கிற சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி விபச்சாரம் என்பது குற்றமல்ல. ஆனால் விபச்சார விடுதி நடத்துவது, அதற்கு உதவி செய்வது போன்றவைதான் குற்றம்.

எது விபச்சார விடுதி என்பதை எப்படி வரையறுப்பது?                                                                                                                             எந்த ஒரு வீடோ, இடமோ, பகுதியோ விபச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு – அந்த விபச்சாரத்தின் பலன் வேறு ஒரு நபருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விபச்சாரிகளுக்கோ கிடைக்குமானால், அது விபச்சார விடுதியாகிறது. (ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாகத் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை) ஆனால் இரு பெண்கள் தங்கியிருந்து தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொண்டால் அது குற்றமாகிறது. மேலும் ஒரு விபச்சாரியை அண்டி அவர் விபச்சாரம் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் வாழும் நபர், பதினெட்டு வயது நிரம்பியவர் என்றால் அதுவே ஒரு குற்றமாகிறது. இதில் மகன், மகள் கூட அடக்கம்.(குழப்புகிறதா?)

இதிலிருந்தே இந்தச் சட்டத்தின் நோக்கம் விபச்சாரத்தைத் தடுப்பதல்ல, மறாக விபச்சாரம் செய்பவரைத் தவிர விபச்சாரத்தின் மூலம் வேறு நபர்கள் பலனடைவதைத் தடுப்பதே என்பதை அறியலாம்.எனவே இங்கு பணமளிக்கும் நபர் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எனவேதான் ஆணுக்குத் தண்டனையில்லை. ஆனால் அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக முடியும். அதாவது, விபச்சாரம் நடைபெற்ற இடம் கோவில், கல்விக்கூடம், விடுதி, மருத்துவச்சாலை போன்றவற்றிற்கு 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கையில் இரண்டு நபர்களும் குற்றவாளியாகின்றனர்.

ஒரு ஆணும் பெண்ணும் சுயவிருப்பத்துடன் உறவுகொள்வது விபச்சாரம் அல்ல என்கிறது சட்டம். விருப்பத்துடன் உறவுகொள்வது எவ்வாறு விபச்சாரமாக முடியும்? ஆனால், வழக்கம்போல நடைமுறையில் அது வேறுவிதமாகத்தான் கையாளப்படுகிறது. புரிபடுதலில் ஏற்பட்ட கோளாறா? அல்லது போலித்தனமா? புரியவில்லை. ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 


பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா?

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா, கூடாதா என்று சர்ச்சை நடக்கிறது. சிறுமிகள் கடத்தப்பட்டு இந்த தொழிலில் தள்ளப்படுவதை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்று ஒரு சேவை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உச்சநீதி மன்றம், சட்டங்கள் மூலம் எந்த நாடும் பாலியல் தொழிலை ஒழிக்க முடியாத நிலையில், சட்டபூர்வமாக அதனை அங்கீகரித்தால் அதிலுள்ள பெண்களுக்கு மரியாதை, பாதுகாப்பு, மருத்துவ பயன்கள் கிடைக்குமே என்று கேட்டனர்.

இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் பாலியல் தொழில் செய்வதாக அரசு ஆய்வு சொல்கிறது. ஒரு கோடிக்கு மேல் என்று மற்றொரு கணக்கு தெரிவிக்கிறது. பல லட்சம் சிறுமிகளும் இதில் அடங்குவர். சொந்த ஊரில் இருந்து ஏமாற்றி கடத்தி வரப்பட்டவர்கள். பாலியல் தொழிலின் அஸ்திவாரம் வறுமை. ஆண்டு தோறும் அந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வறுமையின் வளர்ச்சிக்கு சான்று.

விபசார அழகிகள் கைது என்று சில பத்திரிகைகள் ரசனையோடு வெளியிடும் செய்திகள் அடிக்கடி வந்தாலும், நமது நாட்டில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது அல்ல என்பது பலருக்கு தெரியாத உண்மை. இந்த செய்திகளை வாசிப்பவர்களுக்கு, ‘ஆசை காட்டி அழைத்தாராம் என்ற வாசகம் பரிச்சயமானது. அதாவது, பொது இடத்தில் ஒருவரை பாலியல் உறவுக்கு அழைப்பதுதான் சட்டப்படி குற்றம். அதற்கென விடுதி நடத்துவதும், ஆள் பிடிக்க புரோக்கர் (இதற்கும் ஒரு நல்ல சொல்லை வீணாக்கிவிட்டனர்) வைப்பதும் குற்றங்கள். ஆக, ஏதோ ஒரு சட்டத்தை மீறாமல் தொழில் செய்ய முடியாது. இருந்தும் கொல்கத்தாவில் சோனாகச்சி, மும்பையில் காமாத்திபுர, டெல்லியில் ஜி.பி.ரோடு என்று ஊருக்கு ஊர் சில பகுதிகள் பாலியல் தொழிலிடங்களாக சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. சோனாகச்சி பெண்களுக்கு சமீபத்தில்தான் எல்..சி. காப்பீடு வழங்கப்பட்டது. உடலை விற்பது சிறந்த வர்த்தகமல்ல என்றாலும், வேறேதும் இல்லாதவர்களை பழிப்பதில் அர்த்தமில்லை. போலீஸ் பயம், சமூக அவமானம், தொல்லைகளில் இருந்து அவர்களுக்கு விடுதலை தேவை. அப்படியானால் ஒழிக்க முடியாத லஞ்சம், திருட்டு, கொலைகளையும் அங்கீகரிக்கலாமா என்று ஒரு கூட்டம் கேட்கிறது. இவர்களுக்கு இந்த நாட்டில் என்றும் பஞ்சமில்லை.

தினமலர் VS நடிகைகள்…..

தினமலர் பத்திரிகையில் நடிகைகளைப்பற்றி வெளியிடப்பட்ட செய்தி – ஒரு அநாகரிகமான, அவதூறான வகையை மட்டுமே சார்ந்ததாகும்.
அந்தச் செய்தி உண்மையா, இல்லையா என்பதல்ல விஷயம். ஒரு செய்தி உண்மையே ஆனாலும், அதைப் பதிப்பிப்பதன்மூலம் பிறருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றால், அந்தச் செய்தியால் பொது நன்மை ஏதும் இல்லை என்றால், அப்போதுகூட மானநஷ்ட வழக்கு விதிக்கமுடியும். பொது நன்மை என்ற விஷயத்தின் பின்னால் நின்றுகொண்டு மட்டுமே தனிநபர்கள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடமுடியும்.
அப்படிப் பார்க்கும்போது தினமலர் செய்தி முழு வதந்தி மட்டுமல்ல, முழு அவதூறும்கூட. பாதிக்கப்பட்ட அனைத்து நடிகைகளும் ஒவ்வொருவராக அந்தப் பத்திரிகையின்மீது வழக்கு தொடர்ந்து, பெருமளவு நஷ்ட ஈடு கேட்டிருக்கலாம். அதன் விளைவாக நடக்கும் வழக்குகளில் மேலும் பல ‘அசிங்கங்கள்’ வெளிவரலாம். அப்படி வருவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அல்லது மறைப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள் தாரளமாக வழக்கு தொடர்ந்திருக்கலாம். தினமலர் நிச்சயம் தோற்றிருக்கும்; நிறையப் பணத்தையும் இழந்திருக்கும்.
அப்படிச் செய்யாமல், நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு, கூட்டத்தில் நடிகர்கள் தங்கள் சுயரூபத்தைகாட்டினார்கள்.  நடிகர் சூர்யா “இந்த மாதிரி செய்தி எழுதுபவர்கள் ஈனப்பயல்கள்” என்றும், நடிகர் சத்யராஜ் “தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள்?” என்றும், நடிகை ஸ்ரீபிரியா ” தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா?” என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
அவர்கள் தொழில் அப்படி. அவுத்துப்போட்டால்தானே வாரிக்கட்டமுடியும்! அதற்காக பத்திரிகை விபச்சாரத்தையும் அங்கீகரித்துவிட முடியாது. சில நேரங்களில் சினிமாவையும் மீறி விடுகிறது பத்திரிகை விபச்சாரம்….