பாதை எதுவரை? பயணம் எதுவரை?…

hema

பெண்களின் அங்கங்கள் இங்கு உறுப்புகளாக அல்லாமல்-

செக்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்களாகவே பார்க்கபடுவதும் பேசப்படுவதுமாக ஆக்கப்பட்டு விட்டன. 

ஆணுலகு கற்பனை செய்யும் பெண்ணுடம்பின் பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சினிமா உருவாக்குகிறது. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதை ஒளிவட்டம் போட்டுக் கவனப்படுத்துகிறது.

தொடைக்கு ரம்பா, இடுப்புக்கு சிம்ரன் – ஐஸ்வர்யா ராய், மார்பகத்துக்கு மந்த்ரா – நமீதா, கண்களுக்கு பானுப்பிரியா – சிலுக்கு, அப்புறம் மூக்கு, உதடு, கை – கால்கள் என்று ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் அத்தனை உறுப்புகளும் மிகையான கற்பனையால் கிளர்ச்சியூட்டும் விதத்தில் பதிந்து போகின்றன.

பொது இடங்களில் சந்திக்கும் போதெல்லாம் ஆண்கள் வெறித்துப் பார்ப்பதும், அல்லது நாகரிகமான முறையில் பட்டும் படாமலும் பார்ப்பதும், பெண்கள் ஜாக்கெட்டை இழுத்து விடுவதும்,மாராப்பைச் சரி செய்வதும் இயல்பான சமூக நடைமுறைகளாகி விட்டன.

ஆண்களுக்காக அடுப்புக் கரண்டியைப் பிடிப்பதில் அதிக நேரம் செலவழிக்கும் பெண்களின் கைகள், அதற்கடுத்து உடைகளைச் சரிசெய்வதிலேயே ஓய்ந்து போகின்றன.

வயதான கணவனிடம் வாடிப்போன மனைவி, ஆண்மையற்ற கணவனிடம் பெருமூச்சு விடும் மனைவி, வெளிநாட்டில் கணவன் – வாய்ப்பில்லாத மனைவி, கேபிள் டி.வி., விற்பனைப் பிரதிநிதிகள் மயக்கும் குடும்பப் பெண்கள், உடம்புச் சுகத்துக்கு ஏங்கும் மலையாளப் பெண்கள் – கிறித்தவக் கன்னியாஸ்திரீகள், உறவுக்கு ஒத்துழைக்கும் வேலைக்காரப் பெண்கள், மாணவனைக் காதலிக்கும் டீச்சர்கள், உறவை மறக்க முடியாமல் தவிக்கும் விதவைகள், வெளியூரில் தங்கி லீலை செய்யும் பெண்கள், சாமியார்களின் நிர்வாண பூசைக்குச் சமர்ப்பணமாகும் வீட்டுப் பெண்கள்…

இவைகள் அல்லாமல்- மெரினா, முக்கொம்பு, மருதமலையில் அவசரமாகத் தழுவும் காதலர்கள்.. ..

எனப் பார்வையில் பழக்கத்தில் தென்படும் அத்தனைப் பெண்களும் பத்திரிக்கைச் செய்திகளின் உதவியால் இளைஞர்களின் அக உலகுக்குள் சென்று ஆசை காட்டுகிறார்கள்.

இருபால் உலகமும்- எந்தத் திசை என்று தீர்மானம் இல்லாமலேயே பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

பாதை எதுவரை? பயணம் எதுவரை? என்பது- இயற்கைக்கே வெளிச்சம்.

Advertisements

பொட்டைக் குழந்தை பொறந்திருச்சாம்…

“அண்ணா இன்னிக்குக் காலையிலே 3.15 மணிக்குக் குழந்தை பிறந்திருக்கு… பொண்ணு…”

“…..”

“ஆமாண்ணா சுகப்பிரசவம்தான்… சிசேரியன் இல்லை.”

“…..”

“இல்லன்னா, பாக்கப் போகலை, அப்புறமாப் போய்க்கிடலாம்னு இருக்கேன்…”

“…..”

“என்னண்ணா பண்ணறது? ஆம்பளைக் குழந்தைதான் பொறக்கும்னு எல்லாரும் எதிர்பார்த்துக்கிட்டிருந்தோம். பொண்ணாப் பொறந்துருச்சு… அதான் மெதுவாப் போய்க்கிடலாம்னு…”

தான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட எல்லோரிடமும் இதையேதான் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

அவரிடம் நான் பேச்சுக்கொடுத்தேன். என்னிடமும் இதையேதான் சொன்னார்.

“ஜாதகத்திலே கூட ஆண்குழந்தை பொறக்கும்னுதான் இருக்கு சார். அதனால ரொம்பவும் நம்பினோம் சார்…”

ஓங்கி ஒரு அடி விடலாமா என்று கோபம் வந்தது.

பொதுவாகவே- ஒரு பெண் கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா எனத் தீர்மானிப்பது, அவளுடைய கனவனின் உயிரணுதானே தவிர,  மனைவியின் பங்கு ஒன்றுமில்லை.

ஆனால்- அறிவியலையும் தாண்டி அநியாயப் பழி மட்டும் எப்போதும் அவள் மீதுதான்.

திருந்தாத உலகம்….

இருபது வருடங்களுக்குள் இத்தனை இழப்புகளா?

அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது….. 

பேருந்துக்குள் கொணர்ந்து 
மாலைமுரசு விற்பார்கள். 

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
அமர இடம் கிடைக்கும். 

மிதிவண்டி வைத்திருந்தோம். 
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன். 

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார். 
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள். 

எல்லா வீடுகளிலும் 
முதல் மரியாதை பாடல் ஒலித்தது. 

வானொலி நாடகங்களை 
ரசித்துக் கேட்டோம். 

சாவி இதயம் பேசுகிறது 
பத்திரிகைகள் வந்தன. 

எல்லாருமே 
அரசுப் பள்ளிகளில் படித்தோம். 

சாலையில் 
எப்போதாவது ஒரு வண்டி போகும். 

மழை 
நின்று நிதானமாகப் பொழியும். 

சாராயக் கடைகள் இருந்தன 
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள் 
தந்நிகரற்று விளங்கினார்கள். 

வேலைக்குப் போகாதவன் 
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை. 

எளிதில் மணப்பெண் கிடைத்தாள். 

வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது. 

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும். 
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான். 

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர். 
சிலிண்டர் மூடுதுணிபோல் 
யாரும் நைட்டி அணியவில்லை. 

ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம். 

சுவாசிக்கக் காற்று இருந்தது
குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு வண்டி ஓட்டுவோம்…!

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன். 

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.

கடந்து தொலைந்துப் போனவை-

நாட்கள் மட்டுமல்ல…. நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்!

ஆம்… 
அந்தக் காலம் நன்றாக இருந்தது !

நன்றி- கவிஞர். மகுடேசுவரன்.

“லூசாடி நீ!…. ஸர்ப் எக்ஸல் போடு, கறை போயிடும்!”

ஒரு அழகான கிராமம்….

அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒருபெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.

அந்தப் பெண் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலித்தாள். இது தெரிந்ததும் மொத்தக் கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது. இதனால் வேறு வழி தெரியாத அந்தக் காதல் ஜோடி ஊரை விட்டு ஒடத் தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள்.

அந்தக் காதல் ஜோடிக்குப் பிரமாண்டமான முறையில் விழா எடுக்க முடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான் உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.

திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது.  இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள் அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.

அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள்.  உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள்.  இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது….,

“லூசாடி நீ!…. ஸர்ப் எக்ஸல் போடு, கறை போயிடும்!” என்றது.

(இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு? நானே இதை எனக்கு அனுப்பியவரைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்!)

உலக வரலாறு- ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது…..

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?

இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்குத் தெரியாது….  அவர்- எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்தப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

“நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்”……  தயக்கத்தில் சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்…….

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட்  நீல் ஆம்ஸ்ட்ராங் நெக்ஸ்ட்…. கட்டளை வந்த அடுத்த நொடியே ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு- ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியைப் பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவைப் பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் கூட- நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது.

நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி. அவற்றை உடைத்தெறிந்தால்…. சாதனைகள் சாத்தியமே!

சண்டே ஸ்நாக்ஸ்… ரசிப்பதற்கு மட்டுமே!

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள். அதில் கடைசி மருமகன் நம்ம கரூர் கருப்புசாமி.

அவளுக்குத் தன் மருமகன் 3 பேரும் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டுப் படகுப் பிரயாணம் போனாள்.  நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.

அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது. “மாமியாரின் அன்புப் பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.

அவரும் ஒரு மாருதி கார் வென்றார். ” மாமியாரின் அன்புப் பரிசாக..”

மூன்றாவது நம்ம கருப்புசாமிக்கும் இந்த சோதனை நடந்தது.

அவர் கடைசி வரை மாமியாரைக் காப்பாத்தவே இல்ல..

மாமியார் கடைசியா பரிதாபமா “‘லுக்கு” விட்டப்ப- நம்ம கருப்புசாமி சொன்னார்,

“போய்த் தொலை… எனக்குக் காரும் வேணாம், ஒண்ணும் வேணாம்…. சாவுற வரைக்கும் சைக்கிள்லயே போயிக்கிறேன்… நீ என்ன பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?”

மாமியார் செத்துட்டா.

ஆனாலும்- மறுநாள் காலையில் கருப்புசாமியின் வீட்டு வாசலில் ஒரு பளபளக்கும் வெளிநாட்டுக் கார் நின்னுச்சு..

“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோடு…!

color

தூங்குவதற்கு முன் கணவன் மனைவியிடம் சொல்வது…

அமெரிக்காவில் “good night my love “

இங்கிலாந்தில் “sleep well my love “

ஆஸ்திரேலியாவில் “sweet dreams my love “

இந்தியாவில் —- கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூட்டியாச்சா???????

color

 

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக்கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!
colorஓடோடி வந்து காவல் நிலையத்துக்குள் நுழைந்த கருப்புசாமி அங்கிருந்த காவலரிடம்,

“இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் ல‌ வையுங்க..” என்று கெஞ்சினார்.

காவலருக்கோ ஆச்சரியம்…

“ஏன்.. என்ன ஆச்சு..?… நான் எதுக்காக உங்களை லாக்‍கப்ல வைக்கணும்… அப்படி என்ன தப்பு பண்ணுனீங்க?”

“என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..”

“ஓ…செத்துட்டாங்களா..?”

“இல்லே ஐயா… கோபமா என்னை துரத்திகிட்டு வந்துகிட்டு இருக்கா.. அவள் கையில நான் மாட்டிடக்கூடாது…அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!
color

 

வியர்க்க விறுவிறுக்க தபால் அலுவலகம் நோக்கி வேகமாக ஓடி வந்தார் கருப்புசாமி. 

அங்கே இருந்த போஸ்ட் மாஸ்டரிடம், 

“என் மனைவி மீண்டும் காணாமல் போய் விட்டாள்… நீங்கள் தான் எப்படியாவது எனக்கு உதவ வேண்டும்” என்றார்.

போஸ்ட் மாஸ்டருக்குக் கோபம் வந்துவிட்டது. 

“உன் மனைவி காணாமல் போய் விட்டால் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் கொடு. இது தபால் அலுவலகம்…இங்கே வந்து ஏன் சொல்கிறாய்?

அதற்குக் கருப்புசாமி சொன்னார்,

“அது எனக்குத் தெரியும் சார்! போன தடவை காணாமல் போன போது போலிஸ் ஸ்டேசனில்தான் புகார் கொடுத்தேன். அவர்கள் உடனே கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்”

color

 

பேருந்து பயணத்தில் இரண்டு பெண்கள். நடு இரவு. மார்கழி பனி.

இருவருக்குள்ளும் பயங்கர வாய்த் தகராறு.

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி…இன்னொரு­த்தி ஜன்னலை திறக்க சொல்லி!

ஒருத்தி சொன்னாள், “பனிக்காற்று எனக்கு ஒத்துக் கொள்ளாது…ஜன்னலை திறந்தால் நான் செத்துவிடுவேன்”

மற்றவள் சொன்னாள், “எனக்கு மூச்சு திணறுகிறது… இப்போது ஜன்னலை திறக்காவிட்டால் மூச்சு திணறி செத்து விடுவேன்”

யாராலும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. 

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்,

“ஐயா…முதலில் ஜன்னலை மூடுங்கள்…ஒருத்தி செத்து விடுவாள்..பிறகு ஜன்னலை திறங்கள்… இன்னொருத்தியும் செத்துவிடுவாள்… அதன்பின் நாம் நிம்மதியாக வீடு போய் சேரலாம்”

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

“எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது?” என்று அந்த பெரியவரிடம் கேட்க அவர் சொன்னார்,

“அந்த ரெண்டு பேருக்கும் நான்தாங்க புருஷன்”

“ஐயா…தெய்வம்யா நீங்க…உங்க பேரு என்னங்கையா?”

“கரூர் கருப்புசாமி!”

விற்பனையை அதிகரிக்க எதுக்கடா இவ்வளவு தள்ளாட்டம்?

தமிழக டாஸ்மாக் கடைகள் மூலம் நடப்பு நிதியாண்டுக்கான விற்பனை இலக்கு-  25 ஆயிரம் கோடி என நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நிதியாண்டு முடிய இன்னும், 28 நாட்களே உள்ள நிலையில், விற்பனையை அதிகரிக்க, அதிகாரிகள் டார்ச்சர் செய்து வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சபாஷ்…..

“நாங்கள் தள்ளாடினால்தான் கவர்மெண்ட் ஸ்டெடியாக இருக்கும். நாங்கள் ஸ்டெடியாகி விட்டால் கவர்மெண்ட் தள்ளாட ஆரம்பித்துவிடும்” எனக் குடிமகன்கள் சொல்லுவதுதான் எவ்வளவு உண்மை?

 தமிழகத்தில் 2003 நவம்பரில் டாஸ்மாக் மூலம் மது விற்பனை துவக்கப்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விற்பனை துவங்கிய, 2003 நிதியாண்டில், 3,500 கோடியாக இருந்த விற்பனை, 2004ல், 4,800 கோடியாக உயர்ந்து…..

2010 வரை ஆண்டுக்குச் சராசரியாக 1,500 கோடி ரூபாய் வரை விற்பனை உயர்ந்து வந்த நிலையில்….  நடப்பு நிதியாண்டின் விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

என்ன கொடுமைடா இது…..

மதுவிலக்கை வலியுறுத்தி ஒருத்தர் தொடர்ந்து 31 நாளா உண்ணாவிரதமிருந்து சாகக் கிடக்குறாரு. அதை யாரும் கண்டுக்குற மாதிரி தெரியல…..

விற்பனையை அதிகரிக்க எதுக்கடா இவ்வளவு தள்ளாட்டம்?

குடித்து விட்டு வந்தால்தான் ரேஷன் பொருட்கள் தருவோம்…. பள்ளியில் அட்மிஷன்…. பேருந்தில் பயணம் செய்ய அனுமதி…..  மின்சாரம், மளிகைப் பொருட்கள் எல்லாம்  என்று கட்டளை போட்டுப் பாருங்கள்….

விற்பனை ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு எகிறாதா? என்னங்கடா யோசனை? அதையும் செஞ்சிருங்கோ…. எல்லாம் சரியாயிடும்.