கரூரிலிருந்து பில்கேட்ஸுக்கு ஒரு கடிதம்…..

நம்ம கரூர் அண்ணாச்சி புதுசா ஒரு கம்ப்யூட்டர் வாங்கினார்.

அதுல இருக்கும் சில குறைகளை நீக்க நம்ம பில்கேட்ஸ்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கூத்த நீங்களே பாருங்க ……….

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்கப் பெருமிதம் அடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜி-மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள். 

2. விண்டோஸில் “Start” என்னும் பட்டன் உள்ளது. ஆனால் “Stop” பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள். 

3. “Recycle Bin” என்பதை “Rescooter Bin” என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது. 

4. “Find” பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் “Find” மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள். 

5. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு. 

6.என்னுடைய குழந்தை “Microsoft word” கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது “Microsoft sentence” ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான். 

7. என்னுடைய கம்ப்யூட்டரில் “My pictures” என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்? 

8. “Microsoft Office” இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி “Microsoft Home” கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்? 

இப்படிக்கு 
பெயர் வெளியிட விரும்பாத சங்கர் வீரப்பன்.
ஊர் கரூர்னு சொல்ல மாட்டேன். கண்டுபுடிங்க பார்க்கலாம்.

Advertisements

உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

 

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

பெண்: …………….???????

அங்கேயும் இந்தக் கூத்தை ஆரம்பிச்சுட்டீங்களா?

 

எது எதுக்குத்தான் விளம்பரம்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சே….

காலம் இப்படியுமா மாறணும்?

இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு விளம்பரம்…..

அதில் போஸ் கொடுப்பது யார் தெரியுமா?

சாதனை புரிந்த ராணுவ வீரர்கள் என்று நீங்கள் நினைத்தால்- அது மடத்தனம்.

கலங்கடிக்கும் பாலிவுட் நடிகைகள் போஸ் கொடுக்கும் விளம்பரம் அது.

வெளியிட்டது யார் தெரியுமா?.

நமது ராணுவத்துக்கு ஆள் தேர்வு செய்யும் மையம் ஷில்லாங்கில் உள்ளது. அந்த மையத்தின் சார்பில்தான் இந்த விளம்பரம்.

பாலிவுட் நடிகைகள் குல் பனாக், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், செலினா ஜெட்லி உள்ளிட்ட நடிகைகளின் படங்களுடன்….

அழகான மற்றும் வெற்றிகரமான பெண் குழந்தைகள் வேண்டுமா?  இந்திய ராணுவத்தில் சேருங்கள் என்ற வாசகத்துடன் விளம்பரம் வெளியாகியிருந்தது.

அடக் கடவுளே…. அங்கேயும் இந்தக் கூத்தை ஆரம்பிச்சுட்டீங்களா?

மலரும் நினைவுகள்….

அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தில் லிஃப்ட்டில் பயணம் செய்தார்..

லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னைவேலைக்கு வர வேண்டாமென்று சொன்னதாய் முறையிட்டு வருந்தினான்.

அவர் அரசாணையைக் காட்டினார்.

அவனை விட குறைவா படிச்ச நான் முதலமைச்சரா இருக்கலாம், 
எட்டாவது படிச்ச பையன் லிஃப்ட் பொத்தானை அமுக்கக் கூடாதாண்ணேன்! சட்டத்தை மாத்துங்கண்ணேன்!” 

சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர்.

அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார்.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார்.

வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும் பரிசோதித்தார்.

மருந்தை எழுதித் தரச் சொன்ன தலைவர், 

ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார்.

பிறகு சொன்னார்,

“இது உனக்கு ஆசீர்வாதமாய் தரப்படுவது மட்டுமல்ல

. ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்று நீ நினைவில் வைக்கவே உன் முதல் நோயாளியின் கட்டணம் இது” என்றார்.

அவர் பேரறிஞர் அண்ணா!

 

பொண்ணுங்க நினைச்சா….

பொண்ணுங்க நினைச்சா….

சின்ன விஷயத்தைக் கூட

பெருசா ஆக்கிடுவாங்கன்னு சொல்றாங்களே…..

அது இது தானா?

யம்மாடி!….

girls

(ரெண்டாவது படத்தை மட்டும் பாருங்க!)

அவள் அப்படிச் சொன்னது எனக்கு சரியாகப் படவில்லை!

அவள் பணக்காரப் பத்தினியாகவுமில்லை….

சீமாட்டியாய் இருந்து
பரத்தையாகவுமில்லை….
 
மண் தின்ற உடம்பை
மனிதர்கள் தின்னட்டுமே!
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்கு
சரியாகப்படவில்லை
 
அவள் சொல்லும் மனிதர்கள்-
அவளை
மனுசியாகவே பார்க்கவில்லை….
போகப் பொருளாகத்தானே பார்த்தார்கள்.
அவள்
அப்படிச் சொன்னது
எனக்கு சரியாகப்படவில்லை……..
 
தன் தொழில் தர்ம்ம் காக்க-
மனிதர்களை மண்ணைவிட
மேலானவர்களாக ஒப்பிடுகிறாளே!
 
பல உடலோடு படுத்து
அந்த உடல்தரும் வேக்காட்டைப் பெற்று-
நோய் வாய்ப்பட்டு இறக்கும்போது…
அந்த மேலான மனிதர்களா தாங்குகிறார்கள்?
மண்தானே தாங்குகிறது.
 
மண் தின்ற உடம்பை
மனிதன் தின்னட்டுமே
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்குச்
சரியாகப்படவில்லை.
நன்றி – வலிப்போக்கன்.
color
படுத்து எழுந்து 
பசிதீர்த்துக் கொண்டவன் –
பறைசாற்றுகிறான் உன்னை …..

மிதமாய் சொல்லும்போது 
விபச்சாரி.

 
நாகரிக மொழிகளில் 
விலைமாது, பரத்தை.
 
வசைபாடும்போது 
தேவடியாள்.
வசதிகேற்றாற்போல் வைத்துக்கொண்டான் 
வார்த்தையிலும்..படுக்கையிலும்..
நன்றி- படைப்பாளி.

புத்தாண்டு…. ரிலாக்ஸ்…..

malena-original

இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த மனைவியை புருஷன் எழுப்பினான்.

பொண்டாட்டி : என்னங்க இந்த நேரத்துல.?

புருஷன் : ஒரு அதிசயம் நடந்துடிச்சு டி .

பொண்டாட்டி: ஆ என்ன நடந்திச்சு?

புருஷன் : ஒன்னுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, அப்போ தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒன்னுக்கு இருந்துட்டு கதவை மூடினால் தானாவே லைட் நின்னுடிச்சு.
என்ன ஒரு அதிசயம் பார்த்தியா!!!

பொண்டாட்டி : அறிவு கெட்ட முண்டம் தூக்க கலக்கத்தில பாத்ரூம்னு நினச்சு பிறிஜ்ஜ துறந்து ஒன்னுக்கு இருந்திட்டு கதை சொல்றியா கதை. மூடிட்டுப் படு…..

புருஷன் : ????? ))))) ???

 

goa_honeymoon_tour

மனைவி எனும் பெண்ணுக்குள்,  

ஒரு பர்சனல் செக்ரடரி,

ஒரு குக்,

ஒரு வேலைக்காரி,

ஒரு படுக்கைத் துணை,

ஒரு நிர்வாகி,

ஒரு கணக்குப்பிள்ளை,

ஒரு நீதிமன்றம்,

ஒரு ஹாஸ்டல்,

ஒரு சினிமா தியேட்டர்,

ஒரு மினி பார்,

ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்,

இத்தனையும் அடங்கி இருக்கிறது…!