பா‌லி‌ன் மக‌த்துவ‌ம் !

பா‌லி‌ல் தா‌ய்‌ப்பால‌், பசு‌ம்பா‌ல், எரு‌மை‌ப்பா‌ல், ஆ‌ட்டு‌ப்பா‌ல் என ‌சில வகைக‌க‌ள் உ‌ண்டு. ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ஒ‌வ்வொரு குண‌ம் உ‌ள்ளது.
தா‌ய்‌ப்பா‌ல் எ‌ன்பது ஒ‌வ்வொரு குழ‌ந்தை‌க்கு‌ம், தா‌யிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் முத‌ல் ம‌ற்று‌ம் ஈடு இணைய‌ற்ற உணவாகு‌ம்.
அடு‌‌த்து பசு‌ம்பா‌ல் எ‌ன்பது இயல்பாகவே இனிப்பானது, உடலு‌க்கு குளிர்ச்சி தருவது. ஆனா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாகாது. எருமை‌ப் பா‌ல் அ‌திக‌க் கொழு‌ப்பு ‌நிறை‌ந்தது. உடலு‌க்கு ந‌ல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
ஆ‌ட்டு‌ப் பா‌‌லி‌ல் ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான ‌‌நிறைய ச‌த்து‌க்க‌ள் உ‌ள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால்அதை உடனே கட்டுப்படுத்தும்!
பா‌ல் குடி‌த்தது‌ம் புத்துணர்வு தர‌க் கூடியது. பசு‌ம்பா‌ல் குடி‌த்து வ‌ந்தா‌ல் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலா‌ம். சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மா மரு‌ந்தாக உ‌ள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!
பால், மா‌ட்டி‌ன் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.
Advertisements

எங்கும் எப்போதும் “பரசிட்டமோல்”…..

“பரசிட்டமோல்” (Paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சல் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது. உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.
இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.
Paracetamol  என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள் குறைவானவர்களே. ஆனால் பனடோல்(panadol) என்றால் என்னவென்று தெரியாத எவரும் இலங்கையில் இருக்க முடியாது. உண்மையில் பனடோல் என்பது அந்த இந்த பரசிட்டமோல் என்ற மாத்திரையே , அதை தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனி அதன் அந்தத் தயாரிப்புக்கு வைத்துக் கொண்ட brand name பனடோல் என்பதாகும். அதாவது பரசிட்டோல் அல்லது பனடோல் என்பது வேறு வேறல்ல , இரண்டுமே கொண்டிருப்பது பரசிட்டமோல் என்ற பதார்த்தத்தை, ஆனால் வேறு வேறு கம்பனிகளால் தயாரிக்கப் படும் போது அவை வேறு பெயரை வைத்துக் கொள்கின்றன. அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன.
பரிந்துரைக்கப் பட்ட அளவுகளிலே பயன் படுத்தப்பட்டால் இந்த மாத்திரையால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சொற்பமே.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும் போது இதுவும் விஷமாகலாம். குறிப்பாக தற்கொலை செய்ய எண்ணி இந்த மாத்திரைய அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்துக் கொண்டால் முதல் நாளில் அவருக்கு எதுவும் நடைபெறாது ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில்
அவரின் ஈரல் பழுதடைந்து முழுதாக செயலிழக்கலாம் .எனவே ஒருவர் தற்கொலை முயற்சியாக இந்த மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று ஈரல் பாதிப்படையாமல் தடுக்க மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.
அதே போல நோய்கள் ஏற்படும் போதும் இது அளவுக்கதிகமாக எடுக்கப் படுமானால்

அதுவும் இந்தப்பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் நிறைகளுக்கு ஏற்பவே இந்த மாத்திரை கொடுக்கப் பட வேண்டும். பெரியவர்கள் உட் கொள்ளும் அளவில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கும் ஈரல் பாதிப்பு ஏற்படலாம். ஆகவே ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை மாத்திரை பாவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகள் எத்தனை பாவிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமாகும்.