யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?

நேபாளத்தில் விமான விபத்து, 19 பேர் பலி என்று முதலில் செய்தி வந்தபோது….. வழக்கமான வலியும் வருத்தமுமே மிஞ்சி நின்றது.

ஆனால், அதற்குப் பிறகு…..

அவர்கள் அனைவருமே நம் ஊர்க்காரர்கள் என்று அடையாளம் காணப்பட்டபிறகு வலி இரட்டிப்பானது.

என்ன ஒரு கொடுமையான செய்தி? தில்லைநகர் மட்டுமல்ல, திருச்சியே இன்னும் அந்த வலியிலிருந்து மீளமுடியாத நிலை.

நேபாளத்தில் உள்ள “புத்தா ஏர்’ என்ற தனியார் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான, பி.ஹெச்.ஏ. 103 என்ற சிறிய ரக விமானத்தில் 19 சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பயணித்தனர்.

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை ஒட்டிய சிகரங்களையும், மலையழகையும் சுற்றிப் பார்க்க இவர்கள் சென்றனர்.

இந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது, காலை 7.30 மணியளவில், கோதண்ட மலையில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது.

விமான நிலையத் தொடர்பு அறையுடன் தொடர்பை இழந்த சில மணித்துளிகளில், விமானம் விபத்துக்குள்ளானது.

வெடிப்பதற்கு முன்பாக விமானம் பற்றி எரிந்ததாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தெரிவித்தன.

விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவுக்கு கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணு நாராயணர் கோயிலுக்கு அருகில் உள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 19 பேரும் உயிரிழந்தனர். இதில் 10 இந்தியர்கள், 2 அமெரிக்கர்கள் , ஒரு ஜப்பானியர் உள்ளிட்ட 13 வெளிநாட்டினர் அடங்குவர். 3 நேபாள நாட்டவர்களும், 3 விமான ஊழியர்களும் உயிரிழந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், காத்மாண்டுவில் இருந்து ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் அங்கு வந்து சிதறிக் கிடந்த உடல்களை மீட்டிருக்கின்றனர்.

விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் உருக்குலைந்து இருந்ததால், உடனடியாக அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான், இறந்தவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்த கட்டுனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எனத் தெரியவந்திருக்கிறது.

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23ம் தேதி நடந்தது. இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி கிளைத் தலைவர் இன்ஜினியர் மணிமாறன் (58), ரோகினி பில்டர்ஸ் உரிமையாளர் இன்ஜினியர் மருதாசலம் (68), ஜோதி பைல் பவுன்டேசன் உரிமையாளர் தியாகராஜன் (48), மெர்க்குரி பில்டர்ஸ் உரிமையாளர் தனசேகரன் (44), பாலக்கரை மாரியப்பா ஜவுளி கடை உரிமையாளர் கிருஷ்ணன் (72), மீனா பிராபர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் (50), கான்ட்ராக்டர் காட்டூர் மகாலிங்கம் (55), கட்டிட மதிப்பீட்டாளர் இன்ஜினியர் கனகசபேசன் (70) உள்பட 12 பேர் டெல்லி பொதுக்குழுவில் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின் 4 பேர் மட்டும் அங்கிருந்து திருச்சி திரும்பிவிட்டனர். மற்ற 8 பேரும் டெல்லியில் தங்கி இருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போதுதான் இந்தக் கோரவிபத்து நடந்துவிட்டது.

விபத்தில் இறந்த 8 பேரின் உடல்களும் உருக்குலைந்து இருப்பதால், அவர்களை அடையாளம் கண்டு திருச்சி கொண்டு வர முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் திருச்சி எம்.பி.குமார் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் என 10 பேர் காத்மாண்டு சென்றுள்ளனர். (தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவும் உடன் இணந்து ஆவண செய்து வருகிறார்).

இறந்தவர்களில் 4 பேரின் சட்டை பாக்கெட்டில் வாக்காளர் அடையாள அட்டை இருந்ததால் சுலபமாக அவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டனர். மற்ற 4 பேரை அவரது உறவினர்கள் அடையாளம் காண்பார்கள். இன்றிரவே உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நாளை திருச்சிக்குக் கொண்டுவரப்படும் என்றும், 8 பேரின் உடல்களும் திருச்சி தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும்பொருட்டு 2 மணி நேரம் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில்….. ஒட்டுமொத்தமாக எட்டுப்பேரைப் பறிகொடுக்க வைத்து, கட்டுனர்கள் சங்கத்தையே கலகலத்துப் போகவைத்துவிட்ட காலனை எவ்வகையிலும் மன்னிக்கமுடியாது.

யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?

Advertisements

மரித்துப்போய் விட்டதா மனித நேயம்?

நெல்லைச் சீமையில் காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்….
அதைக் காண நேர்ந்திராதவர்களையும் காயப்படுத்தி,​​  எல்லோருடைய மனதையும் எவ்வளவு பீதிக்குள்ளாக்கி விட்டது?
இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை.​ ஒரு மனிதர்,​​ ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு,​​ ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார்.​ ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.​
பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.​ விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன.​ தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள்,​​ படை,​​ வாகனங்களுடன் நிற்கிறார்கள்.​ ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.​ இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
​​
தன்னை காப்பாற்றும்படி கைகளை தூக்கி வெற்றிவேல் மன்றாடினார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர், தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினார். வெற்றிவேல் கையை நீட்டவும், அவரின் ரத்தம் தன் மீது பட்டுவிடுமோ என உதவியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். நடுரோட்டில் இரண்டு முறை எழ முயற்சித்தும் முனகல் சத்தத்துடன் முடியாமல் வெற்றிவேல் வீழ்ந்தார். அவரின் உயிர் போராட்டம், பார்த்தவர்களை சங்கடப்படுத்தியது
வலது கால் துண்டான நிலையில்,​​ ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை,​​ அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும்,​​ எதிர்ப்படும் 108 ஆம்புலன்சுக்கு அவரை மாற்றி,​​ முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும்.​
அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்?​ கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே!​ அல்லது,​​ காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா?​ எதற்காகக் கடைசிவரை காத்திருந்து,​​ 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.
“ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம்.​ இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை’ என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.​ கே.​ பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும்,​​ பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம்.​ இத்தகைய ஒரு பதிலை,​​ சாதாரண மனிதர்கள் சொல்லலாம்.​ ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா?​ ​
108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை.​ ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் ​ கட்டளையிட்டால்,​​ செயல்பட ஆள்,​​ படை,​​ வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது.​ அணிவகுத்து நிற்கும் வாகனங்களுடன் வேடிக்கை பார்க்கும் சுகாதரத்துறை அதிகாரிகள்! ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்……சப்-இன்ஸ்பெக்டர் உயிர் வலியில் துடிக்க, உடனடியாக அவருக்கு உதவி செய்யும் வகையில், தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முனையாத இரு அமைச்சர்களையும், அங்கிருந்த அதிகாரிகளையும் என்னச் சொல்வது?
சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால்,​​ அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும்.​ ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை.​
அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர,​​ சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.இந்தக் கோரக் காட்சிகள் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி.​ சானல்களில் ஒளிப்பரப்பாகின.​
அமைச்சர்களின் இந்தச் செயல்…. மரித்துப்போய் விட்டதா மனித நேயம்? என்கிற கேள்வியை மறுபடியும்  மறுபடியும் எழுப்பிவிட்டது.

ரத்தோரின் திருவிளையாடல்!

அரியானா மாநிலத்தின் டி.ஜி.பி.,யாக இருந்த ரத்தோர். போலீஸ் துறைக்கே உரிய கண்டிப்பான முகம். முறுக்கு மீசை. காக்கி உடை அணியும்போதே மனிதாபிமானத்தை கழட்டிப் போட்டவர் போன்ற இறுக்கமான தோற்றம். இவற்றின் அடையாளம் தான், ரத்தோர்.
1990ல் சண்டிகாரில் சாதாரண போலீஸ் அதிகாரியாக இருந்தார் ரத்தோர். அங்குள்ள ஒரு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்த வந்த மாணவி தான் ருச்சிகா. அப்போது அவருக்கு வயது 14 தான். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். படிப்பில் படு சுட்டியான ருச்சிகாவுக்கு, புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனையாக வேண்டும் என்பது கனவு. இதனால், சண்டிகார் டென்னிஸ் சங்க மைதானத்துக்கு சென்று தினம் தோறும் பயிற்சி பெற்று வந்தார். இவரது உயிர்த்தோழி ஆராதனா. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் செல்வர். ஒரு நாள், டென்னிஸ் விளையாடப் போகும்போது, அங்கு வந்த ரத்தோரின் கண்ணில் பட்டு தொலைத்தது தான் ருச்சிகா செய்த ஒரே பாவம்.
டென்னிஸ் விளையாட வந்த ருச்சிகாவிடம், ரத்தோர் தவறாக நடக்க முயற்சித்தார். தன் மகளின் வயதே உள்ள ஒரு இளம் சிறுமியை இம்சிக்கிறோமே என்ற குற்ற உணர்வு, அந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரியிடம் கொஞ்சம் கூட இல்லை. இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த ஒரே சாட்சி ஆராதனா. 14 வயது தான் என்றாலும், ருச்சிகாவுக்கு தைரியம் அதிகம். நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, ரத்தோர் மீது புகார் கொடுத்தார். ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவர்கள், இதை பொருட்படுத்தவில்லை. ரத்தோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
தன் மீது, ருச்சிகா போலீசில் புகார் கொடுத்த விவகாரம் ரத்தோருக்கு தெரிய வந்தது. அன்றில் இருந்து ருச்சிகாவை மன ரீதியாக சித்திரவதை செய்ய துவங்கினார். ருச்சிகாவின் சகோதரர் மீது பொய்யான திருட்டு வழக்கு போட்டு உள்ளே தள்ளினார். ருச்சிகாவின் தந்தை, தோழியின் தந்தை மீதும் பொய் வழக்கு போடப்பட்டன. ருச்சிகா வீட்டுக்கு முன்னால், எப்போதும் ஒரு ரவுடி கும்பல் ரவுண்டு கட்டி நிற்கும். ருச்சிகா வீட்டை விட்டு வெளியில் வந்தால், இந்த கும்பல் அவரை பின் தொடரும். மிகவும் மோசமான வார்த்தைகளால் ருச்சிகாவை திட்டுவது தான், இந்த கும்பலின் வேலை. சில நாட்களில், கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி, ருச்சிகாவை பள்ளியில் இருந்து நீக்கி விட்டது, பள்ளி நிர்வாகம். (ரத்தோரின் உத்தரவுப் படி தான், அவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டாரா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது). பதினான்கு வயதே ஆன பிஞ்சு நெஞ்சம், எத்தனை நாளைக்குத் தான், இதுபோன்ற சித்திரவதைகளைத் தாங்கும். கடந்த 1993ல்ருச்சிகா தற்கொலை செய்து கொண்டார். ருச்சிகாவிடம், ரத்தோர் தவறாக நடக்க முயற்சித்தது தொடர்பாக 2000ம் ஆண்டில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை தொடர்ந்தது.
கடந்த மாதம் 21ம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், ரத்தோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜாமீன் பெற்று வெளியில் வந்து விட்டார், ரத்தோர். இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு தற்போது எழுந்துள்ளது.

*************************************************************

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு, இந்தியா. இதில், பதவி,பணம் ஆகியவற்றின் உதவியுடன்,காம வெறி பிடித்து இன்னும், எத்தனையோ வி.ஐ.பி.,க்கள் நடமாடிக் கொண்டிருக்கலாம். இவர்களின் அட்டூழியத்துக்கு எத்தனையோ ருச்சிகாக்கள் பலியாகி இருக்கலாம். அதே போல், பெரிய மனிதர்கள் தோரணையில் இன்னும் எத்தனையோ பேர், காமக் களியாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கலாம். இவை எல்லாம் எப்போது வெளிச்சத்துக்கு வரப் போகிறதோ தெரியவில்லை.

************************************************************

உன்னோட அதிகாரத்த வைச்சுக்கிட்டு ருச்சிகா வீட்டினரை எப்படியெல்லாம் மிரடிருப்ப, துன்புறுத்திருப்ப,அவமானப்படுத்திருப்ப……உன்னிய எல்லாம் நிக்கவச்சு…….. நீ  துபாயில் மாட்டி இருக்கணும். அப்போ தெரியும் உன் ஜாதகம் எப்படின்னு….

**********************************************************

மெல்ல….. தமிழ் இனி சாகும் ?

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, தமிழ் சொற்களை பிழைகளுடன் உச்சரித்து, பார்வையாளர்களை அழச்செய்துவிட்டார். அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார், முதலமைச்சர் கருணாநிதி.

‘வள்ளுவர்’ என்று சொல்வதற்கு பதிலாக ‘வலுவர்’ என்றும், ‘குத்தகைதாரர்’ என்பதற்கு பதிலாக ‘குத்துகைகாரர்” என்றும் “பெரியாரின் கொள்கைகளை” என்று சொல்வதற்கு பதிலாக “பெரியாரின் கொள்ளைகளை” என்றும்  ‘உளியின் ஓசை’ என்பதற்கு ‘ஒளியின் ஓசை’ என்றும் தொகுத்து வழங்க அரங்கமே அதிர்ந்தது.

பார்வையாளர்களிடம் இருந்து கூச்சல் எழவே, “இது தமிழுங்க. 30 பேஜ் இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க,” என்று கெஞ்சினார் குஷ்பு.

அப்போது, சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்காக முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கும் நேரத்தில், சற்றே உஷாரான அமைச்சர் பரிதிஇளம்வழுதி, அவசரம் அவசரமாக குஷ்புவின் பேச்சை இடைமறித்து, முதலமைச்சர் பற்றிய முன்னுரையை தானே அறிவித்தார். அப்போது மேடையில் இருந்து குஷ்பு சென்றுவிட்டார். அதன்பிறகு, நிகழ்ச்சியின் இறுதிவரை அமைச்சரே தொகுத்து வழங்கினார்.
இந்த தமிழ் குளறுபடியை தனது உரையில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கருணாநிதி, “நான் எழுதிய வசனங்களை வைத்துக் கொண்டே ஒரு கற்பனை நாடகத்தை இங்கே நடத்தினார்கள். அதில் வசந்த சேனைக்கு பதிலாக இப்போது ஆங்கிலம் வந்து அமர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி, தமிழைக் காப்பாற்றியே தீருவோம் என்றனர்.
தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழின் அந்த மொழி வல்லமை எத்தகையது என்பதை நாம் உணரலாம். தமிழுக்கு அத்தகைய சக்தி உண்டு. அதனால் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கின்றது,” என்றார் முதலமைச்சர் கருணாநிதி

கடவுளுக்கே நேரடி ஒளிபரப்பா? சபாஷ்….

“கொடுமை கொடுமையின்னு கோவிலுக்கு போனா, அங்கே ரெண்டு கொடுமை அவுத்துப் போட்டுக்கிட்டு ஆடுச்சாம்” என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இப்போது அது தான் நடந்து கொண்டிருக்கின்றது.
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
டாக்டர் மனைவி, ஆசிரியர் மனைவி, நர்சு, டி.வி. நடிகை விபச்சார அழகிகளுடன் கருவறையிலும், பல லாட்ஜூகளிலும் அர்ச்சகர் தேவநாதன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். பல பெண்கள் குடும்பத்துடன் தலைமறைவு ஆகினர்.
போலீசாருக்கு கிடைத்த வீடியோ ஆதாரத்திலும், நேரடி விசாரணையிலும் தேவநாதன் பின்னால் ஒரு சதி கும்பலே உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள்.
சாதாரண கோவில் அர்ச்சகருக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்தது எப்படி? பழயசீவரத்தில் பங்களா, ஆடம்பர வீடு கட்டியது எப்படி? அர்ச்சகர் தேவநாதனின் பின்னால் இருந்து செயல்பட்டது யார்? என்று போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
—————————————————————————————–
அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. தற்போது கூடுதலாக கல்லூரிமாணவி ஒருவருடன் அர்ச்சகர் நடத்தும் கூத்துக்கள் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த சி.டி.க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மச்சேஸ்ரவரர் கோயில் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலைகள் அம்பலத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயில் கருவறை, லாட்ஜிகளில் குடும்ப பெண்கள் மற்றும் மாணவிகளுடன் தேவநாதன் உல்லாசமாக இருந்த சி.டி.க்கள் தமிழகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகி கொண்டு இருக்கின்றன.
இளம்பெண், நர்ஸ், விபசார பெண் உள்ளிட்டோருடன் அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இதில் இடம்பெற்று உள்ளன. சுமார் 1 மணி நேரம்வரை சி.டி. ஓடுகிறது. பெண்களிடம் பேசுவதில் தொடங்கி அவர்களின் ஆடைகளை களைந்து உல்லாசமாக இருப்பது வரை படமாக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகைகளின் ஆபாச சி.டி.க்களை விட இப்போது அதிகளவில் அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் தான் விற்பனையாகி இருக்கின்றன. சில முக்கிய தொழிலதிபர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சி.டி.க்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வதாக சி.டி. கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
—————————————————————————————-
“என்ன ஓய்…. செய்றதை எல்லாம் செஞ்சிட்டு இப்போ ஏதும் செய்யாத அப்பாவி மாதிரி போலீஸ் பொய் வழக்கு போட்டிருக்குனு பசப்புரேல்….
ஒண்ணு மட்டும் உண்மை.  நீர் எப்படியும் தப்பிச்சிடுவீ.ர்… ஏண்ணா உங்களுக்கு வக்காலத்து வாங்க நிறைய போ் வருவாங்க… ஒருத்தன் தப்பு செஞ்சானா இல்லையானு பார்க்குறத காட்டிலும் அவன் எந்த சாதினு பார்த்து வக்காலத்து வாங்குறது தானே நம்ம வழக்கம்.  அதனால் நீர் எப்படியும் தப்பிச்சுடுவீ ர்…உன்னைவிட சாமிகருவறைனு தெரிஞ்சும் உன் கூட கூத்தடிச்சவங்களுக்கு என்ன தண்டனைனு தெரியல இதுக்கு ஆம்பள மட்டும் தப்பு செஞ்சான்னு ஒத்துக்க நான் தயாரா இல்ல. அவன் பழகின எல்லாரையும் கற்பழிச்சான்னு ஒத்துக்கவும் முடியாது. ஒரு சிலர் விரும்பியும் போய் இருக்கலாம் ஆக எல்லாருக்கும் த்ண்டனை கிடைக்கனும்!….”
—————————————————————————
கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா?

ஆசிரியை சுகந்தி!……

வேதாரண்யம் பள்ளிக்கூட வேன் விபத்தில், நீரில் மூழ்கவிருந்த 11 குழந்தைகளை காப்பாற்றிய நிலையில் 12வது தூக்கி வீசப்பட்ட குழந்தை நீருக்குள் மூழ்கிதால் அதைக் காப்பாற்றப் போய் தானும் உயிரிழந்தார் ஆசிரியை சுகந்தி என்ற உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி வேன் ஒன்று கத்திரிப்புலம் என்ற இடத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில் குளத்தி்ல் பாய்ந்து விழுந்தது.இதில் 9 குழந்தைகளும் 21 வயதான ஆசிரியை சுகந்தியும் உயிரிழந்தனர்.இந்தக் கோர விபத்தில் உயிரிழந்த ஆசிரியை சுகந்தியின் செயல் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.வேன் தண்ணீருக்குள் மூழ்கியபோது அதன் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் உள்ளே சிக்கிய ஆசிரியை, கிளீனர் மற்றும் குழந்தைகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.பின்னர் கிளீனரும், ஆசிரியையும் வேன் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர்.

ஒவ்வொரு குழந்தையாக வெளியே தூக்கி வீசினர். கடைசி குழந்தையை தூக்க ஆசிரியை முயற்சித்தபோது அந்த குழந்தை 15 அடி ஆழத்திற்கு போய் விட்டது.ஆசிரியை சுகந்திக்கு நீச்சல் தெரியாது என்றபோதிலும், எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மளமளவென நீருக்குள் போயுள்ளார்.ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து அவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் தான் உயிரிழப்பதற்கு முன்பு 11 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி விட்டார் சுகந்தி.கும்பகோணம் தீவிபத்தில் பிஞ்சுக் குழந்தைகள் கருகி உயிரிழந்தபோது அவர்களைக் காக்க முயலாமல் ஆசிரியர்கள் தப்பிச் சென்றதால் ஆசிரியர் குலத்திற்கே பெரும் அவமானம் ஏற்பட்டது. ஆனால் ஆசிரியை சுகந்தியின் செயல் அனைவரையும் உருக்கியுள்ளது.

‘குலுக்காட்ட’ நக்மாவின் இயேசு ஊழியம்….

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்” என்பது கிறிஸ்துவ வேதவாக்கியம்.
ஆனால், இன்றைய நிலையில் கிறிஸ்துமார்க்கம் என்பது கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய இழிவுத் தொழிலாகிவிட்டது!
ஏழைகளுக்கு இரங்கச் சொன்ன இயேசு வழியை விட்டுவிட்டு, ஏழை எளியோரை ஏமாற்றிக் காணிக்கை பெற்று, கோடிஸ்வரன்களாகும் ‘திருட்டுத் தினகரன்’ வழியில் போய்விட்டார்கள், கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொள்கிறவர்கள்.
கிறிஸ்துவ ஊழியம் என்பதே இந்திய ஏழைப் பாமரக் கிறிஸ்துவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதும், கூடும் கூட்டத்தைப் படம் எடுத்து மேல்நாட்டுப் பணக்காரக் கிறிஸ்துவர்களிடம் காட்டிப் பணக் கொள்ளை நடத்துவதும்தான் என்றாகிவிட்டது!
“ஒரே ஒரு இயேசு பிறந்தான்; அவனும் சிலுவையில் அறையப்பட்டு மாண்டான்” என்று சொல்லிப் புலம்பவேண்டிய நிலையிலேயே கிறிஸ்துவ மதத்தின் இன்றைய நிலை ஆகிவிட்டது!
எல்லோரையும் நோய்களிலிருந்து விடுவித்து ‘அற்புத சுகம்’ கொடுப்பதாக ஏமாற்றி – மோசடி செய்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் குடும்பத்தாரை வாழவைத்தத் திருட்டுத் தினகரன், பல நோய்கள் பீடிக்கப்பட்டு சாவுநாள் வருவதற்கு முன்பே ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற கிறிஸ்துவ வாக்கியத்துக்கு ஏற்ப செத்துப் போனான்!
அந்தப் பாவி அற்ப ஆயுளில் செத்தபின்பு, அவனது வழியில் மற்றொரு திருடன் ‘புகழ்’ பெற்றுக் கொண்டிருக்கிறான்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரை அடுத்துள்ளது நாலுமாவடி என்ற சிற்றூர். இந்தச் சிற்றூரில் மிகச் சாதாரண ஏழை மனிதனாக – ‘கோயில் குட்டி’ பணி செய்து கொண்டிருந்தவர், சி.லாரன்ஸ் என்பவர். இவர் திருடன் தினகரன் கூட்டங்களுக்கு அடிக்கடி போய் வந்ததன் விளைவு, இவரும் தினகரனைப் போல் ஒரு ‘கம்பெனி’ தொடங்கக் காரணமாயிற்று!
திருட்டுத் தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் எமாற்றியதுபோல, நாலமாவடி சி.லாசரஸ் என்பவரும் “இயேசு விடுவிக்கிறார்” என்ற பெயரில் திருட்டுத் தொழிலை ஆரம்பித்தார்! தன் பெயரையும் கவர்ச்சியாக மோகன் சி.லாசரஸ் என்று வைத்துக் கொண்டார்.
உண்மையில் இந்த மோகனின் தாய்-தந்தை வழி முன்னோர்கள் அனைவரும் இந்து மதக்காரர்கள்தான்! இந்த மோகன், கோடி கோடியான கொள்ளை வருமானத்திற்காக ‘பெத்தலேகமி’லிருந்து வந்த கிறிஸ்துவனைப்போல நடிக்கிறார்.
இவரது நடிப்பாற்றல் மூலம் மிக் கறுகிய காலத்துக்குள்ளேயே கோடீஸ்வரனாகி விட்டார்! இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற பட்டியலுக்கு வந்து விட்டார்!
நாலுமாவடி கிராமத்தையே விலை பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார், இயேசுவின் பெயரால்!
இவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு ஆபாசச் சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.
நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்வதில் புகழ் பெற்றவர். அடிக்கடி அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு!
அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!
நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்.
எல்லா வியாபார விளம்பரங்களுக்கும் ஆபாசப் பெண்களின் அரை நிர்வாணம் தேவைப்படும் காலம் இது! கிரிக்கெட் ஆட்டத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்த அம்மணப் பெண்களை இடையிடையே ஆட்ட விடுகிறார்கள்! ரசிகர்களும் விசிலடித்து ரசிக்கிறார்கள்!
எனவே, ஏமாற்றுத் தொழில் செய்யும் மோகன் சி.லாசரஸ் தன் தொழில் பிரபலத்துக்கு ‘குலுக்காட்ட’ நடிகை நக்மாவைக் கொண்டு வந்து, கூட்டத்தைக்கூட்டி, கூடிய கூட்டத்தை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி ‘காணிக்கை வியாபாரம்’ செய்து கொண்டிருக்கிறார்!
“ஊசியின் காதுக்குள் ஒட்டகத்தைப் புகுத்தினாலும், பணக்காரன் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்” – என்பதெல்லாம் பெத்தலேகமில் பிறந்த பழைய இயேசுவின் வழி!
இந்தியாவில் தோன்றியுள்ள தினகரன், லாசரஸ் போன்ற புதிய அப்போஸ்தலர்களோ, ‘கோடிஸ்வரன் வாழ்க்கையே பரலோக இன்பம்’ என்ற இழிவு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள்!
பழைய இயேசுவோ, “பாவப்பட்ட எல்லா மக்களும் என்னிடத்தில் வாருங்கள்” என்றார்! இந்தப் பொய் வியாபாரிகளோ, “காணிக்கை செலுத்தப்பணம் உள்ளவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்கிறார்கள்!
வியாபாரக் கவர்ச்சிக்கு நக்மாக்களைக் கொண்டுவந்து “அல்லேலூயா” போடச்சொல்லுகிறார்கள்!
தெரு ஓரத்திலே மோடி வித்தை காட்டும் ஏமாற்றுத் தொழில்காரர்களைப் போல, வித்தை காட்டி மக்களை மோசம் செய்யும் இந்த ஏமாற்றுக்காரர்களிடமிருந்து மக்கள் மீண்டும் வரவேண்டும்.
வேறு பல மாநிலங்களில் இந்த அற்புதச் சுகக்கூட்டங்களை அரசு தடை செய்திருப்பதைப் போலத் தமிழ்நாட்டிலும் அரசு தடை போடவேண்டும். தமிழக அரசுக்கு மானமும் அறிவும் வரவேண்டும்.
இயேசு பிரசிங்கித்தார் என்றால் அவர் இந்தத் திருடர்களைப்போல் காணிக்கை வாங்கி, குடும்ப டிரஸ்ட்டுகள் அமைத்து கோடிஸ்வரனாகவில்லை என்பதை கிறிஸ்துவர்கள் சிந்திப்பார்களாக

நன்றி:-

“நாத்திகம்” இதழ். ( பெரியாரின் தொண்டர் தோழர் நாத்திகம் இராமசாமி நினைவாக வந்த கட்டுரை).