அவள் அப்படிச் சொன்னது எனக்கு சரியாகப் படவில்லை!

அவள் பணக்காரப் பத்தினியாகவுமில்லை….

சீமாட்டியாய் இருந்து
பரத்தையாகவுமில்லை….
 
மண் தின்ற உடம்பை
மனிதர்கள் தின்னட்டுமே!
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்கு
சரியாகப்படவில்லை
 
அவள் சொல்லும் மனிதர்கள்-
அவளை
மனுசியாகவே பார்க்கவில்லை….
போகப் பொருளாகத்தானே பார்த்தார்கள்.
அவள்
அப்படிச் சொன்னது
எனக்கு சரியாகப்படவில்லை……..
 
தன் தொழில் தர்ம்ம் காக்க-
மனிதர்களை மண்ணைவிட
மேலானவர்களாக ஒப்பிடுகிறாளே!
 
பல உடலோடு படுத்து
அந்த உடல்தரும் வேக்காட்டைப் பெற்று-
நோய் வாய்ப்பட்டு இறக்கும்போது…
அந்த மேலான மனிதர்களா தாங்குகிறார்கள்?
மண்தானே தாங்குகிறது.
 
மண் தின்ற உடம்பை
மனிதன் தின்னட்டுமே
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்குச்
சரியாகப்படவில்லை.
நன்றி – வலிப்போக்கன்.
color
படுத்து எழுந்து 
பசிதீர்த்துக் கொண்டவன் –
பறைசாற்றுகிறான் உன்னை …..

மிதமாய் சொல்லும்போது 
விபச்சாரி.

 
நாகரிக மொழிகளில் 
விலைமாது, பரத்தை.
 
வசைபாடும்போது 
தேவடியாள்.
வசதிகேற்றாற்போல் வைத்துக்கொண்டான் 
வார்த்தையிலும்..படுக்கையிலும்..
நன்றி- படைப்பாளி.
Advertisements

பாதை எதுவரை? பயணம் எதுவரை?…

hema

பெண்களின் அங்கங்கள் இங்கு உறுப்புகளாக அல்லாமல்-

செக்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்களாகவே பார்க்கபடுவதும் பேசப்படுவதுமாக ஆக்கப்பட்டு விட்டன. 

ஆணுலகு கற்பனை செய்யும் பெண்ணுடம்பின் பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சினிமா உருவாக்குகிறது. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதை ஒளிவட்டம் போட்டுக் கவனப்படுத்துகிறது.

தொடைக்கு ரம்பா, இடுப்புக்கு சிம்ரன் – ஐஸ்வர்யா ராய், மார்பகத்துக்கு மந்த்ரா – நமீதா, கண்களுக்கு பானுப்பிரியா – சிலுக்கு, அப்புறம் மூக்கு, உதடு, கை – கால்கள் என்று ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் அத்தனை உறுப்புகளும் மிகையான கற்பனையால் கிளர்ச்சியூட்டும் விதத்தில் பதிந்து போகின்றன.

பொது இடங்களில் சந்திக்கும் போதெல்லாம் ஆண்கள் வெறித்துப் பார்ப்பதும், அல்லது நாகரிகமான முறையில் பட்டும் படாமலும் பார்ப்பதும், பெண்கள் ஜாக்கெட்டை இழுத்து விடுவதும்,மாராப்பைச் சரி செய்வதும் இயல்பான சமூக நடைமுறைகளாகி விட்டன.

ஆண்களுக்காக அடுப்புக் கரண்டியைப் பிடிப்பதில் அதிக நேரம் செலவழிக்கும் பெண்களின் கைகள், அதற்கடுத்து உடைகளைச் சரிசெய்வதிலேயே ஓய்ந்து போகின்றன.

வயதான கணவனிடம் வாடிப்போன மனைவி, ஆண்மையற்ற கணவனிடம் பெருமூச்சு விடும் மனைவி, வெளிநாட்டில் கணவன் – வாய்ப்பில்லாத மனைவி, கேபிள் டி.வி., விற்பனைப் பிரதிநிதிகள் மயக்கும் குடும்பப் பெண்கள், உடம்புச் சுகத்துக்கு ஏங்கும் மலையாளப் பெண்கள் – கிறித்தவக் கன்னியாஸ்திரீகள், உறவுக்கு ஒத்துழைக்கும் வேலைக்காரப் பெண்கள், மாணவனைக் காதலிக்கும் டீச்சர்கள், உறவை மறக்க முடியாமல் தவிக்கும் விதவைகள், வெளியூரில் தங்கி லீலை செய்யும் பெண்கள், சாமியார்களின் நிர்வாண பூசைக்குச் சமர்ப்பணமாகும் வீட்டுப் பெண்கள்…

இவைகள் அல்லாமல்- மெரினா, முக்கொம்பு, மருதமலையில் அவசரமாகத் தழுவும் காதலர்கள்.. ..

எனப் பார்வையில் பழக்கத்தில் தென்படும் அத்தனைப் பெண்களும் பத்திரிக்கைச் செய்திகளின் உதவியால் இளைஞர்களின் அக உலகுக்குள் சென்று ஆசை காட்டுகிறார்கள்.

இருபால் உலகமும்- எந்தத் திசை என்று தீர்மானம் இல்லாமலேயே பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

பாதை எதுவரை? பயணம் எதுவரை? என்பது- இயற்கைக்கே வெளிச்சம்.

பொட்டைக் குழந்தை பொறந்திருச்சாம்…

“அண்ணா இன்னிக்குக் காலையிலே 3.15 மணிக்குக் குழந்தை பிறந்திருக்கு… பொண்ணு…”

“…..”

“ஆமாண்ணா சுகப்பிரசவம்தான்… சிசேரியன் இல்லை.”

“…..”

“இல்லன்னா, பாக்கப் போகலை, அப்புறமாப் போய்க்கிடலாம்னு இருக்கேன்…”

“…..”

“என்னண்ணா பண்ணறது? ஆம்பளைக் குழந்தைதான் பொறக்கும்னு எல்லாரும் எதிர்பார்த்துக்கிட்டிருந்தோம். பொண்ணாப் பொறந்துருச்சு… அதான் மெதுவாப் போய்க்கிடலாம்னு…”

தான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட எல்லோரிடமும் இதையேதான் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

அவரிடம் நான் பேச்சுக்கொடுத்தேன். என்னிடமும் இதையேதான் சொன்னார்.

“ஜாதகத்திலே கூட ஆண்குழந்தை பொறக்கும்னுதான் இருக்கு சார். அதனால ரொம்பவும் நம்பினோம் சார்…”

ஓங்கி ஒரு அடி விடலாமா என்று கோபம் வந்தது.

பொதுவாகவே- ஒரு பெண் கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா எனத் தீர்மானிப்பது, அவளுடைய கனவனின் உயிரணுதானே தவிர,  மனைவியின் பங்கு ஒன்றுமில்லை.

ஆனால்- அறிவியலையும் தாண்டி அநியாயப் பழி மட்டும் எப்போதும் அவள் மீதுதான்.

திருந்தாத உலகம்….

பயணத்திற்கு மட்டுமல்ல…..

பைக் என்பது…..

பயணத்திற்கு மட்டுமல்ல!

காணாமல் போய்விட்ட கரண்டுக்குப் பதிலாக….

டெக்னிக்கலாக தண்ணீர் இறைக்கவும் பயன்படுத்தலாம்!

புயலுக்குப் பெயர் சூட்டுவது யார்?

புயல் வருகிற பொழுதெல்லாம்….. அந்தப் புயலுக்குச் சூட்டப்படுகிற பெயரும் பரபரப்பாகிவிடுகிறது.

அதிலும் குறிப்பாக- நிஷா, லைலா, கத்ரீனா என பெண்களின் பெயரையே அதிகமாக அதற்குச் சூட்டுகிறபொழுது……

ஏன் அதற்குப் பெண்களின் பெயர்களையே அதிகமாகச் சூட்டுகிறார்கள் என்கிற சந்தேகமும்….

நமீதா, ஷகீலா போன்ற பொருத்தமான பெயர்களை ஏன் சூட்டுவதில்லை வருத்தமும்…… வந்துபோவதில் வியப்பில்லை.

(நாம் எத்தனை பேருக்குப் பெயர் வைத்திருக்கிறோம்? கண்ணாடி வாத்தியார், வெத்தலைப் பொட்டி வாத்தியார்னு பாடம் சொல்லிக் கொடுத்தவங்களுக்கும்…… கொத்தவரங்கா கோகிலா, ஆம்லெட் அபிநயா, காலிடப்பா கவிதான்னு ஒண்ணாப் படிச்சவங்களுக்கும்….. அப்படி வையுங்கப்பா!)

புயலுக்குப் பெயர் சூட்டுகிற பொறுப்பு யாருடையது? எங்கிருந்து, எப்படி இதைத் தீர்மானிக்கிறார்கள்? நீங்களோ, நானோ பெயர்களைச் சிபாரிசு செய்யமுடியுமா?……

இப்படிப் பல கேள்விகள் புயலைப்போல நமக்குள் சுழன்றடிக்கும்.

இப்போது அதுபற்றிச் சிறிதளவு தெரிந்துகொள்ள முயல்வோம்.

முதன்முதலில் புயலுக்குப் பெயர் சூட்டும் பழக்கம் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவில்தான் அறிமுகமானது.

அப்போது வானிலை அதிகாரிகள் தங்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களைப் புயலுக்குச் சூட்டிப் புளகாங்கிதம் அடைந்துகொண்டார்கள்.

அதற்குப்பிறகு, 1953-ல் புயல்களுக்குப் பெயர் சூட்டுவதை அமெரிக்கா முறைப்படுத்தியது.

இந்தியாவைத் தாக்கும் புயல்களுக்குப் பெயரிடும் பழக்கம் 2004ம் ஆண்டுதான் தொடங்கியது.

இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த வானிலை ஆய்வு மையம் என்பதால், இந்தியா தவிர- வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கும் வானிலை தொடர்பான முன் அறிவிப்புகளை வழங்கும்.

அப்படி வானிலை பற்றிய தகவல்களைத் தரும்போது, புயல்களுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதைத் தெரிவிக்கும்படி, அந்த நாடுகளைக் கேட்டது.

அதன்படி,  உறுப்பினர் நாடுகள் தெரிவித்த பெயர்களை அகர வரிசைப்படி பட்டியலிட்டுள்ளது.

இந்த பெயர்கள் சிறிய வார்த்தை கொண்டதாவும், உச்சரிப்பதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். பண்பாட்டிற்கு எதிரானதாகவோ, மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.

வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலைத் தயாரித்தன.

வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு,  இந்தப் பட்டியலில் இருந்துதான் ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன.

ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன.

இப்போது வந்துள்ள “தானே” புயலின் பெயர் மியான்மர் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் சூட்டியது. இதற்குக் “குறுநில மன்னர்” என்று பொருள்.

இனி அடுத்து வரும் புயலுக்கு,ஓமன் நாட்டைச் சேர்ந்த “முர்ஜான்” என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.

ம்…. நாம் நினைத்த பெய்ர் எப்போது வருமோ?…பார்க்கலாம்!.