கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்…..

காதலின் புதிய குரல் மகிழினி மணிமாறனுக்கு…
மரியாதைகள்…. வாழ்த்துக்கள்!

எந்தப்பக்கம் திரும்பினாலும்…. இந்தக் குரல்தான்.

சொய் சொய்… சொய் சொய்….

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்… சொய் சொய்…

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்

சொய் சொய்… சொய் சொய்…

தானே தந்தானே… தானே தந்தானே…
தானே தந்தானே… தானே… நானே…

தானே தந்தானே… தானே தந்தானே…
தானே தந்தானே… தானே… நானே…

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்… சொய் சொய்… 

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்… சொய் சொய்… 
சொய் சொய்… சொய் சொய்…

Advertisements

வசனமா முக்கியம்? படத்தைப் பாருடா!

 

என்னம்மா குஷ்பூ….

நீங்க நடிக்கிற தொழிலை விட்டுட்டீங்க தெரியும். ஆனா….

பாம்பு பிடிக்கிற தொழிலுக்கு எப்பத் தாயீ போனீங்க?

வசனமா முக்கியம்?

படத்தைப் பாருடா!

காசுதான் முக்கியம். கௌரவமோ, கற்போ அல்ல!

கனவுத் தொழிற்சாலை என்று கௌரவமாக அழைக்கப்படுகிறது சினிமாத் தொழில்……

அது- கேமராவுக்கு முன்னால் மற்றும் கேமராவுக்குப் பின்னால் என்று இரண்டு முகம் கொண்டது.

பளிச் காட்சிகள், நல்ல கதை, சூப்பர் ஒளிப்பதிவு, அருமையான எடிட்டிங், அசத்தலான கிராபிக்ஸ் என……

70 எம்.எம் திரையிலும் கூட ரசிக்க வைக்கக்கூடிய விஷயங்கள் கேமராவின் முன் பக்கம்.

ஆனால்- கேமராவின் பின்பக்கமும் இது போலவே நல்லதான விஷயங்களும், நாகரிகமான விஷயங்களும்தான் இருக்கின்றவா என்றால்……

இல்லை என்கிற கசப்பான விடைதான் பதிலாகக் கிடைக்கும்.

இருள் கவ்விக் கிடக்கும் அந்தப் பகுதியிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த விஷயங்கள் நூறில் ஒரு பங்குதான்.

நடிக்கும் ஆசையில் வந்து சிக்கிகொள்கிற இளம்பெண்கள் மட்டுமல்ல, நடித்துக் கொண்டிருப்போரும் கூட….. அட்ஜஸ்ட் பண்ணிப் போனால் மட்டுமே அங்கே குப்பை கொட்ட முடியும் என்பதுதான் எதார்த்தமான நிலை.

பல நடிகைகள்….. இதைப் பகிரங்கமாகவே, வேதனையோடு வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

என்னதான் திறமையும் கவர்ச்சியும் இருந்தாலும் கூட, அட்ஜஸ்ட்மெண்ட் மட்டும் இல்லாவிட்டால் அங்கு அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக் கிடைக்காது,

இப்படி ஒவ்வொரு நடிகைக்குப் பின்னாலும் ஒவ்வொரு “இழந்த கதை” இருப்பது ஊருக்கே தெரிந்த கதைதான்.

தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ என…. ஆசைப்பட்ட இடங்களில் எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிப்போனால் போதும்…… அந்த வருஷத்தின் நம்பர் ஒன் ஆர்ட்டிஸ்ட் என்கிற ரேஞ்சுக்கு ஆட்டம் காட்டிவிடலாம்.

கோடம்பாக்கத்துப் படுக்கைவிரிப்புகளை உதறிப்பார்த்தால்தான் தெரியும்….. பலப்பல வி.ஐ.பி.க்களின் முகவரிகளும் பஞ்சராகிவிடும்.

ஒன்றை இழந்து, இன்னொன்றைப் பிடிக்கும் சூதாட்டத் தளம்தான் சினிமாக் களம்.

இளமையும் அழகும்தான் இங்கு மூலதனம். இரண்டையும் காட்டினால்…. அதுவே அங்கு ஆளும் இனம்.

பெண்வர்க்கம், ஆண்வர்க்கம் என்கிற பேதமெல்லாம் இங்கு இல்லை. அத்தனை குப்பைகளும் கொட்டிக்கிடக்கும் இடம் அது.

கனவுகள் மட்டுமில்ல…. கற்பும் இங்கு அப்படித்தான். நான் யோக்கியம் என்று அவர்களைச் சொல்லச் சொன்னால்…. நாலைந்து பேர்தான் தேறுவார்கள்.

படத்தில் ஹீரோ வேஷம் போட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்- நிஜத்தில் வில்லனாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

நடிகைகள் இழந்த கதை இது என்றால், நடிகைகளால் இழந்த கதை இதைவிட மோசம்.

ஓஹோ என்று உச்சத்தில் இருந்த ஒரு டெக்ஸ்டைல் தொழிற்சாலையை, ஒழித்துக் கட்டிய நடிகையிலிருந்து….. கப்பல் வியாபாரத்தையே காணாமல் போகச்செய்த நடிகை வரை….. கதைகள் ஏராளம்.

அவர்களுக்குத்தான்- நம் ரசிகர்கள் கோயில் கட்டுகிறார்கள். பாலாபிஷேகம் பண்ணுகிறார்கள்.

அவர்களுக்கு- காசுதான் முக்கியம். கௌரவமோ, கற்போ அல்ல.

ஆனால்- நமக்கு?……..

 

கடைசிவரை இப்படியே!

 

என் உறக்கத்தை ரசிப்பதற்காக
உறங்காமலிருந்தவன் நீ!!
நீ ரசிப்பது தெரிந்தே 
உறங்குவதாய் நடித்தவள் நான்!!

எத்தனை செல்லப் பெயர்களில்

நீ என்னை அழைத்தாலும்…..

நீ கோபத்தில் அழைக்கும் “ஏய் லூசு“விற்கு இணை எதுவும் கிடையாது!

கடைசி வரை…

இப்படியே இருக்கவேண்டும்!

சும்மா டைம் பாஸ்?…

அப்பாடா…. மண்டைக் குடைச்சலுக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது.

சினேகாவும் தானும் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் நடிகர் பிரசன்னா தெ‌ரிவித்திருந்தார்.

ஆனால், சினேகாவோ இதுநாள்வரை இதுகுறித்து எதுவும் வாய்திறக்காமல் மௌனமே கதியாக இருந்தார்.

சிநேகாவா? பிரசன்னாவையா? நோ சான்ஸ்….. (எழுத முடியாத காரணங்கள்…)

சலூன் கடையிலும், டீக்கடையிலும் தினத்தந்திப் பேப்பரைக் கையில் வைத்துக்கொண்டு…… இதைப் பற்றித்தான் பேச்சு.

உண்மையிலேயே சிநேகாவும் லவ் பண்ணுதா? அல்லது பிரசன்னா பாட்டுக்குப் பிட்டைப் போட்டுட்டுப் போயிட்டாரா?

சிநேகாவின் பெற்றோர்களைவிட, இவர்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாகக் கவலைப்பட்டிருப்பார்கள்.

முல்லைப் பெரியாறை விட முக்கியமான பிரச்னையாக இது அவர்களுக்கு மாறிவிட்டது.

நல்லவேளையாக….

சினேகா தனது திருமணம் குறித்து முதல் முறையாக வாய் திறந்துவிட்டார்.

பிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான், ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை, காலதாமதமாகும் என்று கூறியிருக்கிறார்.

அய்யய்யோ….. உடனே கல்யாணம் இல்லையா? தள்ளிப்போடறாங்களா? எதனாலேன்னு தெரியலையே?…..ன்னு சொல்லி, ம்றுபடியும் விவாதிக்க ஆரம்பிப்பார்கள். சிகரெட்டும் டீயும் சிநேகாவின் பெயரைச் சொல்லிக் கொஞ்சம் அதிகமாகும்.

வேறு ஒண்ணும் காரணம் இல்லீங்க….

ரஜினியின் கோச்சடையான் படத்தில், ரஜினிக்குத் தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது…..

இதைத் தவிர, வெளியே தெரிஞ்சு வேறு எதுவும் காரணம் இருக்கிறமாதிரி காணோம்.

அதென்னமோ தெரியலை…. கரூருக்கும் சிநேகாவுக்கும் கனெக்சன் இருந்துக்கிட்டே இருக்கு!

கணவனைப் பிரிந்த மனைவி்யின் கஷ்டம் புரிகிறது!…

நயன்தாரா……

பிரபுதேவாவை ரம்லத்திடமிருந்து பிரித்தெடுத்துச் சென்றபோது அறியாத ஒரு உணர்வை இப்பொழுது புரிந்துகொண்டிருக்கிறாராம்.

அதாவது….. கணவனைப் பிரிந்த ஒரு மனைவியின் சோகம் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொண்டுவிட்டாராம். அதுவும் கூட ஒரு சினிமா அனுபவத்தில் இருந்துதானாம்…..

ஸ்ரீராம ராஜ்ஜியம் என்னும் ஒரு தெலுங்குப் படத்தில், சீதையாக(?) நயன்தாரா நடித்திருக்கிறார். தெலுங்கில் அவர் கடைசியாக நடித்த அந்தப் படம் சமீபத்தில்தான் ரிலீசானது.

இந்தப் பட அனுபவம்தான் தன்னை மனதளவில் வெகுவாகப் பாதிததாகவும், பெரிய மாற்றத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தை எனது பிறந்த நாளான கடந்த 18-ந்தேதி பார்த்தேன். இந்தப் படம் எனது சிறந்த பிறந்தநாள் பரிசு. சீதை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, என்னால் நடிக்க முடியுமா? என்று பயந்தேன். அஞ்சலி தேவி போன்ற நடிகைகள் செய்யவேண்டிய வேடம் அது.

அதில் இயக்குனர் எனது ஸ்டைலில் சுதந்திரமாக நடிக்க வைத்தார். சில நாட்களிலேயே கேரக்டரில் ஒன்றிப்போனேன்.

விரதம் கூட இருந்தேன்.(என்ன விரதம் என்றும் சொல்லியிருக்கலாமே நயன்?) சீதையாகவே வாழ்ந்தேன்.(அப்படீன்னா? அது கூட உங்களுக்குத் தெரியுமா? சபாஷ்!)

படத்தில் பர்ணசாலை காட்சிகளைத்தான் முதலில் படமாக்கினார்கள். அதனால் நான் முழுமையாக சைவத்துக்கு மாறினேன்.(அடங்கமாட்டே போல இருக்கே?)

தினமும் கோவிலுக்குச் சென்றேன். பூஜைகள் செய்தேன். (அடக் கடவுளே….. இது வேறயா?)…..

அப்போதுதான், ஒரு கணவனை இழந்த மனைவியின் வலியை, கஷ்டங்களை, வேதனைகளை…… என்னால் உணர முடிந்தது.

சரிம்மா… அதுக்கு என்ன இப்போ? சொல்ல வருவதைத் தெளிவாச் சொன்னாத்தானே புரியும்.

ரம்லத்தோட வலி புரியுதுன்னு சொல்ல வர்றீங்களா? இப்போ புரிஞ்சு என்னம்மா பிரயோஜனம்?

ஒருவேளை…. பிரபுதேவாவுக்கு ஏதாவது சிம்பாலிக்காகச் சிக்னல் காட்டறீங்களோ?….

குட்டைப் பாவாடையும், கோவணமும்!

பெரும்பாலான சினிமா நடிகைகள், தாங்கள் கலந்து கொள்ளும் சினிமா தொடர்பான விழாக்களில் குட்டைப் பாவாடை அணிந்துவந்து பங்கேற்பது என்பது தற்போது ஃபேஷனாகிவிட்டது.

கவர்ச்சி நடிகைகள் மட்டுமின்றி, முன்னணி நடிகைகளும் கூட இது போலவே அரைகுறையில் வந்து இம்சைப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்..

நடிகை ஸ்ரேயா சிவாஜி பட விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே குட்டைப் பாவாடை அணிந்துவந்து பங்கேற்றதும், பளிச்செனப் போஸ் கொடுத்ததும் சர்ச்சைக்குள்ளானது.

இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்துப் பிரச்சினை கிளப்பியது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரேயா மன்னிப்பு கேட்டார்.

இதுபோலவே நமீதாவும் கலக்கலான கவர்ச்சி ஆடைகள் அணிந்துதான் விழாக்களுக்கு வருகிறார். இருக்கையில் அமர்ந்து இருக்கும் போது போட்டோ கிராபர்கள் படம் எடுப்பதைத் தவிர்க்க கால்களுக்கு மேல் கச்சிதமாகத் துண்டைப் போட்டு மறைத்துக் கொள்கிறார். இதற்காகத் துண்டுத் துணி ஒன்றைக் கையிலேயே எப்போதும் எடுத்து வருகிறார்.

(அப்படி எதுக்கும்மா அவஸ்தைப் படவேண்டும்? வரும்போதே மறைச்சுக்கிட்டு வர வேண்டியதுதானே?).

இப்படியெல்லாம் நடிகைகள் ஆடை அணிந்து வருவதை எதிர்ப்பவர்கள்- இந்து மக்கள் கட்சியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி….. அப்படி எதிர்ப்பவர்கள் அனைவரும் சுயநல சக்திகள் என்று நடிகை குஷ்பு கடுமையாகக் கண்டித்துப் பேட்டி அளித்திருக்கிறார்.

(காட்டறவங்க காட்டுனா… இவங்களுக்கு என்ன சார்? பார்க்க விருப்பமிருந்தா பாருங்க, இல்லேன்னா பேசாம இருங்க. நாங்க பார்க்கிறதுக்கும் வேட்டு வச்சுடுவீங்க போலிருக்கேன்னு எவ்வளவு பேர் அங்கலாய்க்கிறாங்க தெரியுமா?).

குஷ்பு சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்….

“நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டைப் பாவாடை அணிவதை எப்போதுமே விரும்புவார். (அப்புறம் என்ன சார் பிராப்ளம்?) அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச் செல்வார். (அது எதுக்குத் தேவையில்லாம? அதையும் வேண்டாம்னு சொல்லமுடியாதா குஷ்பு மேடம்?)

ஒருவர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட விருப்பத்தையும் வசதியையும் பொருத்தது. அதுகுறித்து மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. அப்படி அணிந்து வருவதை சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் மட்டும்தான் விளம்பரத்திற்காகவும், இரண்டு நிமிடப் புகழுக்காகவும் எதிர்ப்புக் காட்டுவதுபோல் நடிக்கிறார்கள்.”

சரி…. குஷ்புவோட கருத்து இது. இந்தத் தத்துவார்த்தமான கருத்துக்கு இந்து மக்கள் கட்சி சார்பில என்ன சொல்றாங்க?

அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையையும் பார்ப்போமே…..

“தமிழகம் கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம். அதனால்தான் கற்புக்கரசியான கண்ணகிக்குக் கூட இங்கே சிலை வைத்து அழகு பார்க்கிறோம். குஷ்பு சொல்வது போல இரண்டு நிமிடப் புகழுக்காக வேண்டிக் குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் வேண்டுமானால் நீங்கள் அது போல அணியலாம். ஆனால், பொது விழாக்களுக்கு வரும்போது அப்படி வரக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.

கிராமப் பகுதிகளில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களைக் குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா?

அதைப் போலத்தான் கவர்ச்சி ஆடையில் நடிகைகள் பொது விழாக்களில் பங்கேற்பதையும் நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அந்த மாதிரி நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும்”.

இரண்டு கருத்துக்களையும் படிச்சுப் பார்த்த நீங்க என்னங்க சொல்லப் போறீங்க?….