அப்படி எதுவும் ஐடியா இருக்குங்களா மேடம்?

 

மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னுதானே மக்களும் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. மக்களோட ஆசையை நிறைவேத்தறதுதானே முதல்வரோட முதல் வேலை. அதனால, தலைமைச் செயலகத்தை மாற்றம் செய்தீங்க. அண்ணா நூலகததை மாற்றம் செய்யப் போறேன்னு அறிவிப்பு செஞ்ச்சீங்க. பஸ் கட்டணத்தில மாற்றம் செய்தீங்க. பால் விலையில மாற்றம் செய்தீங்க. கரண்டு பில்லிலும் மாற்றம் கொண்டுவரப் போறீங்க……. அதெல்லாம் விடுங்க மேடம், சும்மா கொசுறு மேட்டர்….. 

இப்ப நீங்க கொடநாடு கிளம்பறதாக் கேள்விப்பட்டோம். (எல்லாரும் கோடையிலதான் அங்கே போவாங்க….. நீங்க மட்டும் குளிர் காலத்தில அங்கே போறீங்களே….. உங்களைப் பத்தி ஒண்ணுமே புரிஞ்ச்சுக்க முடியலே மேடம்). காஷ்மீர் மாதிரி அப்படியே தலைநகரை கோட்டையில ஆறு மாசம், கொடநாட்டில ஆறு மாசம்னு மாற்றம் செய்கிற ஐடியா ஏதும் இருக்குதுங்களா மேடம்?

இதுவரை இல்லாத அளவுக்குப் பஸ் கட்டணத்தை இரண்டு மடங்கு அதிகமாக உயர்த்திப் புதிய வரலாறு படைச்சிருக்கிற நீங்க, வேலைக்காகப் பஸ்சுல தினமும் 50 கி.மீ., 60 கி.மீ., தூரம் வரைக்கும் போயிட்டு வருகிற ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் சிரமப்படாமல் பஸ் டிக்கெட் எடுப்பதற்கு வசதியாக, கூட்டுறவு வங்கிகளில் “பஸ் டிக்கெட் லோன்” கொடுக்கும் திட்டத்தை ஆரம்பிக்கிற ஐடியா எதையாவது கைவசம் வெச்சிருக்கீங்களா ஜெயலலிதா மேடம்?

நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு அமைச்சர், விலைவாசி ஏற்றும் துறை அமைச்சர், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்யும் துறை அமைச்சர், கருணாநிதியின் குடும்ப விவகாரங்களைக் கவனிக்கும் துறை அமைச்சர், விஜய்காந்த் கட்சியை உடைக்கும் துறை அமைச்சர் போன்ற பதவிகளை இன்னும் காலியாகவே வைத்திருக்கிறீர்களே……. அவைகளை உடனடியாக நிரப்பும் ஐடியா ஏதும் இருக்கா மேடம்?

பொதுவாகவே, உங்ககிட்ட யாரும் கேள்வி கேட்டா அது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பேட்டி கொடுக்கும்போது கூட நிருபர்கள் எக்ஸ்ட்ரா இரண்டு கேள்வி கேட்டு விட்டாலே முறைப்பீங்க…. அதெப்படி ஜெயலலிதா மேடம், பெங்களூருக்குப் போய் ஆயிரம் கேள்விகளுக்கு மேல அவரு பாட்டுக்குக் கேட்டுக்கிட்டே இருக்காரு….. நீங்களும் பதில் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. கட்டாயமா உங்களுக்குக் கோபம் கன்னா பின்னான்னு வந்திருக்குமே. அவரு மேல ஏதாவது நடவடிக்கை எடுக்கிற ஐடியா இப்போதைக்கு இருக்குதா மேடம்? 

Advertisements

நல்லவேளை, பஞ்சர் ஆகாமல் தப்பித்தது!

“பல்லாவரத்தில் இளம்பெண் நிர்வாணம்”– நேற்றைய பத்திரிகைகள் அனைத்திலும் இதுதான் பரபரப்பான செய்தி.

“ஒருவேளை பைத்தியமாக இருக்குமோ?’ என்கிற பரிதாபத்தோடு செய்தியைப் படிக்க ஆரம்பித்தால்…… எத்தனை பெரியார்கள் வந்தாலும் இப்படிப்பட்ட ஜென்மங்களைத் திருத்தவே முடியாதோ? என்கிற கோபம் மட்டுமே மிஞ்சி நின்றது.

நீங்களும் அந்தக் கதையைப் படியுங்கள்…..

நேற்று முன்தினம் நிறைந்த அமாவாசை. இரவு 1 மணிக்கு, சென்னை பல்லாவரம் பகுதியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ரோந்துப்பணியில் இருந்திருக்கிறார். பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அங்கிருந்து மிகுந்த பதட்டத்துடன் நால்வர் ஓடிவந்தனர். ஜீப்பைப் பார்த்ததும் நின்ற அவர்கள் இன்ஸ்பெக்டரிடம்,”” சார் மார்க்கெட்டில் தலைவிரி கோலத்துடன் பேய் உலா வருகிறது,” என்று கூறினர். அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், அவர்களைப் போகச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேய் உலவுவதாகக் கூறிய மார்க்கெட் பகுதிக்குள் தன் ஜீப்பைச் செலுத்தினார்.

அப்போது அங்கே தலைவிரிகோலத்துடன் முகத்தை மறைத்தபடி முழு நிர்வாண நிலையில் ஒரு உருவம் எதிரே வந்துள்ளது. இதைக்கண்டு முதலில் பயந்தாலும், பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், தன்னிடம் இருந்த டார்ச் லைட்டை எடுத்து, அந்த உருவத்துக்குக் கால் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்திருக்கிறார். (கால்கள் இல்லாவிட்டால் பேய், இருந்தால் பெண் என்பது அவருடைய கணிப்பு. சபாஷ்!).. அப்போது தான், அது பேயல்ல… இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து வருகிறார் என்பது புரிந்திருக்கிறது.

உடனடியாக, அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், அங்கிருந்த பெண் போலீசாரிடம், அவர்களது மாற்று உடையை எடுத்து வருமாறு கூறினார். அவர்களும் உடனே, உடையுடன் ஜீப்பில் வந்திறங்கினர். போலீசைப் பார்த்ததும் அந்த நிர்வாணப் பெண் அங்கிருந்து ஓட ஆரம்பித்துவிட்டார்.. அரை கிலோமீட்டர் தூரம் விரட்டி மடக்கிப் பிடித்து, அந்தப் பெண்ணுக்கு உடைகளை மாட்டிப் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், அந்த பெண் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதும், அப்பகுதியில் உள்ள ஒருவரை அவ்ர் காதலித்துள்ளார் என்பதும், நன்றாகப் பேசிக் கொண்டிருந்த காதலன், திடீரெனக் கம்பி நீட்டிவிட்டான் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

அவனை மறக்கமுடியாத நிலையில், அங்குள்ள குறிசொல்லும் சாமியார் ஒருவரை அந்த பெண் சந்தித்துள்ளார். அவர், “நிறைந்த அமாவாசை இரவில், குளித்துவிட்டு, உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈர உடம்புடன் ஊரைச் சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறும்’ என்று கூறியுள்ளார்.

(சாமியார் நிறைய செக்ஸ் படம் பார்ப்பவர் போலிருக்கிறது. ஈரம் சொட்டச் சொட்ட நிர்வாணமாக நடந்தால்தான் கடவுள் அருள் கிடைக்குமோ?. நல்லவேளை, தன்னுடன் ஒரு இரவு தங்கினால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லாமல் விட்டாரே…. அதுவரை உத்தமம்!).

இதை நம்பிய அந்தப் பெண், திருவண்ணாமலையிலேயே அப்படி செய்தால், ஊரில் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்று கருதி, பம்மலில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கியவுடன், 11 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, ஈர உடையுடன் பொழிச்சலூர் – பம்மல் சாலையில் நடந்து வரும்போதே, உடைகளை ஒவ்வொன்றாகக் களைந்துள்ளார். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நிர்வாணமாகவே பல்லாவரம் வரை நடந்து வந்ததாகத் தெரியவந்தது.

இது போன்று ஊர்வலமாகப் போனால், எப்படியும் போலீஸ் பிடித்துவிடும். அப்பொழுது போலீசார் காதலனுடன் பேசித் தன்னை எப்படியும் சேர்த்து வைத்துவிடுவார்கள் என்று நினைத்து இப்படி நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார். (அப்படின்னா, சாமியார் சொன்னது உடான்ஸ்தான் என்பது அந்தப் பெண்ணுக்கும் தெரிந்து விட்டதோ?).

இதையடுத்து, போலீசார் அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிக்குத் தகவல் அளித்தனர். அவர்கள், இப்பெண்ணை ஏற்க மறுத்ததால், மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். (உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் ஊர்வலம் போகிற அளவுக்குத் துணிந்துவிட்ட இப்படிப்பட்ட பெண்னை பெற்றோரும் சகோதரியுமே ஏற்க மறுக்கிறபோது, காதலன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வானாம்?).

காவல்துறை செய்ய வேண்டிய முதல் வேலை– இந்தப் பெண்ணை நிர்வாணமாக ஓடச்சொல்லி ஐடியா கொடுத்த, அந்தச் சாமியாரைப் பிடித்து வந்து அப்படி ஓடவிட வேண்டும். இல்லாவிட்டால்…. இன்னும் எத்தனை பெண்களை இப்படி அவர் ஓடவிடுவாரோ தெரியவில்லை.

அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் அடித்த கமெண்ட்தான்…. என்னுடைய கமெண்டும்.

“நல்லவேளை, பேய் என்று நினைத்து அங்கிருந்தவர்கள் பயந்து ஓடியதால் பரவாயில்லை…… ஒருவேளை பெண்ணென்று தெரிந்திருந்தால்?…. நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் அரங்கேறியிருக்கும்!’

யார் செய்த புண்ணியமோ, பஞ்சர் ஆகாமல் தப்பித்தது— சட்டம் ஒழுங்கு!

சின்னத்திரையில் நித்தியானந்தா – பெரியதிரையில் சத்யானந்தா….. கலக்கறே சந்துரு!

நித்யானந்தா சாமியார் + நடிகை ரஞ்சிதாவின் வித்தைகள் நிரம்பிய படுக்கையறைக் காட்சிகள் டெலிவிஷனில் ஒளிபரப்பாகிப் பரபரப்பு ஏற்படுத்தியது போய்……

இப்போது, நித்யானந்தா ரஞ்சிதா சர்ச்சையை மையமாக வைத்துக் கன்னடத்தில் எடுக்கப்பட்ட சத்யானந்தா என்கிற படம் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பா.ஜ.க பிரமுகர் என்று பன்முகம் கொண்ட மதன் பட்டேல், கன்னடத்தில் இந்தப் புதிய படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில், எனது சொந்த வாழ்க்கையை மையமாக வைத்துப் படம் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி, கன்னடத்தில் படத்தைத் தயாரிக்கும் மதன் பட்டேலுக்கும், ரவி சேத்தனுக்கும் வக்கீல் கிருஷ்ணகுமார் பகவதி மூலம் நித்தியானந்தா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் நேரத்தில், இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும், இது தனது பெயரையும் புகழையும் சீர் குலைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றும், கர்நாடக கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

மேலும், மதன் பட்டேல் மீது மூன்று கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கும் போடப்பட்டுள்ளது.

இதுபற்றி மதன் பட்டேல் அளித்துள்ள பேட்டியில்……

“இந்தப் படம் என்ன மாதிரியான படம் என்பதையே தெரிந்து கொள்ளாமல், உத்தேசமாக என் மீது வழக்குப் போடுவது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.

நானும் கடவுள் பக்தன்தான். மாநில பா.ஜ.க வில் முக்கியப் பொறுப்பிலும் இருக்கிறேன். இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்று நினைப்பவனல்ல நான். ஆனால், கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்களையும், ஜோதிடர்களையும் என் படத்தில் காட்டி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். (சபாஷ் பட்டேல் சார்….வாழ்த்துக்கள்!)

அதைத்தான் சத்யானந்தாவில் செய்திருக்கிறேன். இதை வெளியிடக் கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் நித்தியானந்தாவுக்கு இல்லை. இந்த வழக்கை நானும் சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.

தான் இப்படியொரு படத்தை எடுக்கத் துணிந்ததற்கு ஒரு மிகப்பெரிய காரணம் பின்புலத்தில் இருக்கிறது என்றும் கூறியிருக்கும் பட்டேல், அந்தக் காரணத்தையும் சுவராசியமாக விளக்குகிறார்….

“ஒருமுறை தனது புது வீட்டுக் கிரஹபிரவேசத்திற்கு சில முக்கியமான சாமியார்களை அழைத்திருந்தாராம். அப்போது அங்கு வந்திருந்த சாமியார்களிடம் தனது மகள்களை ஆசிர்வாதம் வாங்கச் சொன்னாராம். அவர்களோ யார் ஆசிர்வாதமும் வேண்டாம்,. நித்தியானந்தா விவகாரத்திற்குப் பிறகு எந்தக் காவிச் சாமியாரைப் பார்த்தாலும் எங்களுக்குத் தப்பாகவே தெரிகிறது என்றார்களாம்” (சரியான சவுக்கடி….. அப்பாவிற்குப் பிள்ளைகள் தப்பாமல் பிறந்திருக்கின்றன!)

இந்து மதமே இந்த மாதிரி சாமியார்களால் கறைபட்டு விட்டதே என்று கவலைப்பட்ட மதன் பட்டேல், இப்படி ஒரு படத்தை உடனே எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகவும், அதற்கு அடிப்படை அவரது மகள்களின் ஆசீர்வாத மறுப்பே என்றும் பெங்களூருவில் பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு ஆந்திரா, கர்நாடகாவில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. நித்யானந்தாவின் ஆசிரம நடவடிக்கைகள் அனைத்தும் இப்படத்தின் மூலம் அம்பலமாகும் என்று பேசுகின்றனர். படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.. (நம்மாளுங்க மட்டும் விடுவாங்களா என்ன?).

அப்பிடின்னா…… சின்னதிரையில பாத்து ரசிச்ச அந்தக் கூத்தையெல்லாம், மறுபடியும் பெரிய திரையில பாக்கலாம்னு சொல்லுங்க!

பெட்ரூம் ஆட்டத்தில் பெரிய ஆள் யார்?

காவி நிறத்தில் மீண்டும ஒரு களங்கம் படிந்திருக்கிறது — சுவாமி நித்யானந்தாவின் காமக்களியாட்டத்தின் மூலம்.

கரை வேட்டி கட்டிய அரசியல்வாதிகளுக்கும்

காவித் துணி உடுத்திய ஆன்மிகவாதிகளுக்கும்

கடுமையான போட்டி…..

பெட்ரூம் ஆட்டத்தில் பெரிய ஆள் யார் என்பதில்.

 

கலி காலமோ…கரும காலமோ…. நாளுக்கு நாள் இதுபோன்ற அசிங்கமான செயதிகள் அதிகமாக வெளிவர ஆரம்பித்து விட்டன.

முதலில் பிரேமானந்தா,பின்பு ஜெயந்தரர், பிறகு கடவுளுக்கே நேரடி ஒளிபரப்புச்செய்த காஞ்சிபுரம் தேவநாதன், இப்போ நித்தியானந்தா …. எங்கே போகிறது ஆன்மிகஉலகம்?

ஆனால் இதில் இரண்டுபேருக்கும் கம்பெனி கொடுத்துக் காசுபார்த்து விடுகிறார்கள் சில குறிப்பிட்ட சினிமா நடிகைகள்.

கடவுளைக் கற்களாக்கி, மனிதர்களைக் கடவுளாக்கி

வணங்குவதை நிறுத்தாத வரை இந்த மாதிரி பரதேசிகள் உருவாகத்தான் செய்வார்கள்.

பிரம்மச்சரிய விரதத்தை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இவர் பேசிப் புரியவைத்ததைவிட, பெட்ரூம் வித்தை காட்டி இவர் நடித்திருக்கும் படம் நன்றாகப் புரிகிறது.

காவி உடையைக் கழற்றாமலேயே கூட அவர் ஒரு தமிழ் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள்…. நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகையிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார். உற்சாகமாக ஏதோ பேசிக் கொண்டு நடிகையை தழுவிக் கொள்கிறார். பிறகு… ஆனந்த ஜோதியில் ஐக்கியமாகிறார்கள்.

நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். அப்புறம்…  எதுவும் இல்லாமலும் வருகிறார்.

சி.டி.யில் பதிவாகியுள்ள சில காட்சிகள் ஆபாசத்தின் உச்சகட்ட உச்சமாக உள்ளது.

இந்த நித்தியாவுடன் இருக்கும் பெட்டை நடிகை யார் என்று தெரிகிறதா?

நடிகை ரஞ்சிதா… பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர்.

( ரஞ்சிதா ஏற்கனவே கல்யாணம் பண்ணிகிட்ட ஒரு டம்மி பீசு……அதப்போயி ? )

புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீயும் மனிதன்தான்… உனக்கும் உணர்ச்சிகள் இருக்கத்தான் செய்யும்…. ஆண் பெண் உறவு என்பது ஆண்டவனாலேயே அங்கீகரிக்கப்பட்ட விஷயம்…. அது ஒன்றும் தீண்டத் தகாததல்ல.வாழ்க்கை ஒரு சுகமானது என்றால் அதிலொரு துளி இதுவும்தான். பிறகு ஏனப்பா இந்த வேஷமெல்லாம்?

கதவைத் திற காற்று வரட்டும்னு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தீங்க சரி…..

ஆனா நீங்க கதவைத் திறந்தா மட்டும் காத்து வராம வேறு என்னமோ கன்றாவிஎல்லாம் வருதே!! அனைத்துக்கும் ஆசைப்படுன்னு இதைத்தான் சொன்னீங்களா சாமி?

எங்களுக்குத்தான் புரியலையோ?

திருட்டுச் சாமியார்களைவிட …  திவாரிகளே பரவாயில்லை போல் தெரிகிறது !


மானாட மயிலாட…ரெக்கார்ட் டான்ஸ்?

ரெக்கார்டு டான்ஸ் தெரியுமா ரெக்கார்டு டான்ஸ்…
கோயில் திருவிழாக்களில்…அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில்….
இந்த மாதிரியான‌ பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.
மிதமிஞ்சிய ஒப்பனைகளுடனும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை, கேபரே டான்ஸ், டிஸ்கோ டான்ஸ், ரெக்கார்ட் டான்ஸ், ஆடலும் பாடலும் என பல பெயர்களில் அழைத்து ரசிக்கிறோம்.
நேரடியக ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள், முடியாதவர்கள் மானாட மயிலாட, ராணி ஆறு ராஜா யாரு போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம். அந்த சுகத்தைப்பார்த்து ரசிக்கலாம்.
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட டான்ஸ்களைப் பார்க்கவேண்டும் என்றால், முக்காடு போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு பயந்து பயந்து பார்க்கவேண்டும். இப்போது நிலைமை அப்படியில்லை. கோயில் திருவிழா உட்பட எங்கும் எதிலும் இது இல்லாமல் எதுவும் இல்லை.
எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் டிரவுசர் போட்ட சிறுவனாக விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது, எங்கள் ஊர் சத்திரத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடந்தது. டான்ஸ் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் படுதாவுக்குள் தலையை நுழைத்துப் பார்த்தபிறகுதான் தெரிந்தது..ஓஹோ…இது “அந்த வகையான‌” டான்ஸ் என்பது.
அத்ற்குப்பிறகு இப்போதெல்லாம் அது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது.ஒரே ஒரு மாற்றம்,ரெக்கார்ட் டான்ஸ் என்பது ஆடலும் பாடலும் என பெயர் மாறிவிட்டது.
எங்க ஏரியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இது கொஞ்சம் பிரபலம். ஒருமுறை நான் எனது நண்பர்களுடன் ஊருக்குச்சென்றிருந்தபொழுது இதைப்பார்க்க நேர்ந்தது.
அது என்ன ரெக்கார்ட் டான்ஸ்?
வாத்தியங்கள் உயிர் பெற்று எழுந்தவுடன் முத்ல் பாடலாக ஒரு சாமி பாட்டு வந்தது. மாரியாத்தா பாட்டு அல்லது ஒரு விநாயகர் துதி என ஏதோ ஒரு பாட்டுக்குக் கும்பலாக வந்து ஆடிவிட்டுப்போனார்கள்.
அடுத்து…சிகப்பு கலந்த‌ பச்சை கலர் ஜிகினா உடை அணிந்து ஒருத்தி வந்து ஒரு டப்பாங்குத்து சினிமாப் பாட்டுக்கு ஜோடியாக ஆடிவிட்டுப்போனாள்.
சிறிது நேர‌ இடைவெளியில் அடுத்த பாட்டுத் துவங்கியவுடன் வேறொருத்தி வந்து ஃபுல் கவர் செய்த டிரஸ்ஸோடு இடுப்பைக்கூடக் காட்டாமல் இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆடிவிட்டுப் போனாள்.
சே…இது ஒரு ஆட்டமா இடுப்பக்கூடக் காட்டாம? என‌அருகில் இருப்பவரிடம் விசாரித்தால், கொஞ்சம் பொறுங்கள்,நேரம் போகப்போக எல்லா ஆட்டமும் இருக்கிறது என முகம் மலரப் பதில்வந்தது.
எல்லோருக்கும் காதெல்லாம் ஜிவ் என்று ஆகி,கண்ணெல்லாம் கிர் என்று மாறி மேற்படி ஆட்டத்தை காண அடுத்து வரும் யுவதி யாரோ என வழிமேல் விழி வைத்து காத்திருந்தோம்.
அதற்குப்பிறகும் ஒரு நான்கு ஐந்து பாட்டுக்கு வேறு வேறு பேர் வந்து ஆடிவிட்டு போனார்கள், ஒன்றும்
பிரயோஜன‌மில்லை.
என்னய்யா கூத்து நடத்துறீங்க என எல்லோருமே சவுண்டு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அத்ற்குப்பிறகு எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு மைக் பிடித்த ஒருவர் பெண்கள் எல்லோரும் வீட்டுக்குப்போகவும் என பகிரங்கமாகவே அறிவிப்புசெய்தார்.
தலையில் ஒரு கர்சிப் கட்டி எங்களை மூடிக்கொன்டு நாங்கள் பழைய இடத்திலேயே விளக்கு அணைத்தவுடன் போய் அமர்ந்து கொண்டோம். ஆட்டம் தொடங்கியவுடன் முதலில் வந்தவள் தன் மேல்பாகம் முழுவதையும் ஒரு நான்கு செகண்டுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் காட்டிசென்றாள்.
ஒரே ஆரவாரம்,கை தட்டல்கள்…
அடுத்த வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் கழற்றி முழுவதும் மேலாடையை துறந்து ஆட அந்த இடத்தில் ஜிவென்று சூடு ஏற ஆரம்பித்தது.
இந்த இடத்தின் “ஹைலைட்” அவள் ஆடிய கொஞ்ச நேர நிர்வாண நடனம் அல்ல. அவள் ஆடிய பொழுது ஒரு நூறு ருபாய் தாளை வைத்துகொண்டு சில ஊர் பெரியமனிதர்கள் அவளை  அழைத்ததும், பின்புஅவள் ஜாக்கெட்டிலும் பாவாடையிலும் அந்தப் பண‌த்தைக் குத்துவதற்கு பட்டபாடும்தான்.
சமயங்களில் பாதுகாப்பு வளையமாக கருவேல விஷ முட்களை மேடையைச்சுற்றிப்
போட்டுவைத்திருப்பார்கள். மேடைக்குப் பாதுகாப்பு… பெண்களுக்கு? அவள் மானத்துக்கு? காற்றில் தாவணி விலகினால் கூட தன்னையும்மீறிப் பதறிப்போகிற பண்பாட்டு வளர்ப்புமுறை..சிதறிப்போக என்ன காரணம்?

குடும்பத்தில் பணப்பிரச்னை,வறுமை, கணவன் அல்லது காதலனால்
ஏமாற்றப்படுதல், சினிமா கனவு இதில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் இந்த‌ ஆடும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என துப்பறிந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் குற்றம் சொல்ல வேண்டியதிருக்கும்.
இவர்கள்…ஏழைகள் என்பதால் ரெக்கார்ட் டான்ஸ்காரிகள். ஆனால் கலை என்ற பெயரில் சினிமாவில் பெண்களை ஏகத்துக்கும் அவுத்துக் காட்டுகின்றார்களே..அவர்கள் மட்டும் நடிகைகள். என்ன வித்தியாசமோ? வேறுபாடோ?

பாக்கறதுக்கு “நேரு மாமா” சாடையில இருந்துக்கிட்டு ?…….

ஏற்கனவே ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினை தீபற்றி எரிந்து கொண்டிக்கும் நிலையில், அம்மாநில கவர்னர் என்.டி.திவாரி மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரோகித் சர்மா என்ற வாலிபர் என் தந்தை என்.டி.திவாரி என்று கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் தொடர்ந்த வழக்கை டெல்லி கோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இந்த நிலையில் ஆந்திர ஜோதி, ஏபிஎன் தொலைக்காட்சி சானல் கவர்னர் என்.டி.திவாரி போன்ற தோற்றம் உடைய ஒருவர் 3 பெண்களுடன் செக்ஸ் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ள காட்சிகளை
ஒளிபரப்பியது. என்.டி.திவாரி மாதிரி இருப்பவர் படுத்து இருப்பது போலவும், அவர் அருகில் 3பெண்கள் நிர்வாணமாக இருப்பது போலவும் காட்சிகள் இருந்தன. அதில் 2பெண்களுக்கு 20வயதுக்குள்தான் இருக்கும்.
ஒரு பெண் அவர் மீது படுத்து இருப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது. ஒரு பெண் அவருக்கு முத்தம் கொடுப்பது போலவும், மற்றோரு பெண் அவர் காலுக்கு அடியில் உட்கார்ந்து இருப்பது போல காட்சிகள் ஓடின.
ஏபிஎன்- ஆந்திர ஜோதி தொலைக்காட்சி சானல் அந்த செக்ஸ் காட்சிகளை பல தடவை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது. அதோடு அந்த பெண்கள் யார் என்ற தகவல்களையும் வெளியிட்டது. என்.டி. திவாரியின் சொந்த மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண் காண்டிராக்டர் ஆந்திராவில் சில கனிம சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க கவர்னரின் தயவை நாடி, இந்த 3 பெண்களையும் செக்ஸ் உல்லாசத்துக்கு அனுப்பியதாக அந்த தொலைக்காட்சி கூறியது.
அது மட்டுமின்றி கவர்னர் மாளிகை உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் ராதிகா, விபசார பெண்களை சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் என்.டி.திவாரி செக்ஸ் அனுபவித்து விட்டு, கனிம சுரங்கம் குத்தகை பெற உதவிகள் செய்யாததால், இந்த காட்சிகளை ராதிகாவே வெளியிட்டு அம்பலப்படுத்தி இருப்பதாக ஆந்திரா  தொலைக்காட்சி கூறியுள்ளது. இந்த தகவல்களை கேட்டதும்
ஆந்திர மக்களும், அரசியல் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
கவர்னர் பவனுக்கு தினசரி கில்மா பார்ட்டிகள் வந்து , தங்கி தாத்தா கழுத்தில் தொங்கி போயுள்ளன. கீழே வி.ஐ.பி விசிட்டர்கள் காத்துக்கிடக்க…… மேலே ஓடி விளையாடு தாத்தா பாணியில் 83 வயதுள்ள சுதந்திர போராட்ட வீரரான என்.டி.திவாரி கில்மா பார்ட்டிகளுடன் ஜல்சா.
இவை தான் ஒரு தனியார் சேனலுக்கு கிடைத்து டமால் ஆகிவிட்டது.
ஓவர் டென்சன ஓரமா ஒதுக்கி வச்சுட்டு ?………..

தினமலர் VS நடிகைகள்…..

தினமலர் பத்திரிகையில் நடிகைகளைப்பற்றி வெளியிடப்பட்ட செய்தி – ஒரு அநாகரிகமான, அவதூறான வகையை மட்டுமே சார்ந்ததாகும்.
அந்தச் செய்தி உண்மையா, இல்லையா என்பதல்ல விஷயம். ஒரு செய்தி உண்மையே ஆனாலும், அதைப் பதிப்பிப்பதன்மூலம் பிறருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றால், அந்தச் செய்தியால் பொது நன்மை ஏதும் இல்லை என்றால், அப்போதுகூட மானநஷ்ட வழக்கு விதிக்கமுடியும். பொது நன்மை என்ற விஷயத்தின் பின்னால் நின்றுகொண்டு மட்டுமே தனிநபர்கள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடமுடியும்.
அப்படிப் பார்க்கும்போது தினமலர் செய்தி முழு வதந்தி மட்டுமல்ல, முழு அவதூறும்கூட. பாதிக்கப்பட்ட அனைத்து நடிகைகளும் ஒவ்வொருவராக அந்தப் பத்திரிகையின்மீது வழக்கு தொடர்ந்து, பெருமளவு நஷ்ட ஈடு கேட்டிருக்கலாம். அதன் விளைவாக நடக்கும் வழக்குகளில் மேலும் பல ‘அசிங்கங்கள்’ வெளிவரலாம். அப்படி வருவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அல்லது மறைப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள் தாரளமாக வழக்கு தொடர்ந்திருக்கலாம். தினமலர் நிச்சயம் தோற்றிருக்கும்; நிறையப் பணத்தையும் இழந்திருக்கும்.
அப்படிச் செய்யாமல், நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு, கூட்டத்தில் நடிகர்கள் தங்கள் சுயரூபத்தைகாட்டினார்கள்.  நடிகர் சூர்யா “இந்த மாதிரி செய்தி எழுதுபவர்கள் ஈனப்பயல்கள்” என்றும், நடிகர் சத்யராஜ் “தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள்?” என்றும், நடிகை ஸ்ரீபிரியா ” தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா?” என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
அவர்கள் தொழில் அப்படி. அவுத்துப்போட்டால்தானே வாரிக்கட்டமுடியும்! அதற்காக பத்திரிகை விபச்சாரத்தையும் அங்கீகரித்துவிட முடியாது. சில நேரங்களில் சினிமாவையும் மீறி விடுகிறது பத்திரிகை விபச்சாரம்….