சண்டே ஸ்நாக்ஸ்… ரசிப்பதற்கு மட்டுமே!

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள். அதில் கடைசி மருமகன் நம்ம கரூர் கருப்புசாமி.

அவளுக்குத் தன் மருமகன் 3 பேரும் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டுப் படகுப் பிரயாணம் போனாள்.  நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.

அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது. “மாமியாரின் அன்புப் பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.

அவரும் ஒரு மாருதி கார் வென்றார். ” மாமியாரின் அன்புப் பரிசாக..”

மூன்றாவது நம்ம கருப்புசாமிக்கும் இந்த சோதனை நடந்தது.

அவர் கடைசி வரை மாமியாரைக் காப்பாத்தவே இல்ல..

மாமியார் கடைசியா பரிதாபமா “‘லுக்கு” விட்டப்ப- நம்ம கருப்புசாமி சொன்னார்,

“போய்த் தொலை… எனக்குக் காரும் வேணாம், ஒண்ணும் வேணாம்…. சாவுற வரைக்கும் சைக்கிள்லயே போயிக்கிறேன்… நீ என்ன பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?”

மாமியார் செத்துட்டா.

ஆனாலும்- மறுநாள் காலையில் கருப்புசாமியின் வீட்டு வாசலில் ஒரு பளபளக்கும் வெளிநாட்டுக் கார் நின்னுச்சு..

“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோடு…!

color

தூங்குவதற்கு முன் கணவன் மனைவியிடம் சொல்வது…

அமெரிக்காவில் “good night my love “

இங்கிலாந்தில் “sleep well my love “

ஆஸ்திரேலியாவில் “sweet dreams my love “

இந்தியாவில் —- கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூட்டியாச்சா???????

color

 

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக்கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!
colorஓடோடி வந்து காவல் நிலையத்துக்குள் நுழைந்த கருப்புசாமி அங்கிருந்த காவலரிடம்,

“இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் ல‌ வையுங்க..” என்று கெஞ்சினார்.

காவலருக்கோ ஆச்சரியம்…

“ஏன்.. என்ன ஆச்சு..?… நான் எதுக்காக உங்களை லாக்‍கப்ல வைக்கணும்… அப்படி என்ன தப்பு பண்ணுனீங்க?”

“என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..”

“ஓ…செத்துட்டாங்களா..?”

“இல்லே ஐயா… கோபமா என்னை துரத்திகிட்டு வந்துகிட்டு இருக்கா.. அவள் கையில நான் மாட்டிடக்கூடாது…அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!
color

 

வியர்க்க விறுவிறுக்க தபால் அலுவலகம் நோக்கி வேகமாக ஓடி வந்தார் கருப்புசாமி. 

அங்கே இருந்த போஸ்ட் மாஸ்டரிடம், 

“என் மனைவி மீண்டும் காணாமல் போய் விட்டாள்… நீங்கள் தான் எப்படியாவது எனக்கு உதவ வேண்டும்” என்றார்.

போஸ்ட் மாஸ்டருக்குக் கோபம் வந்துவிட்டது. 

“உன் மனைவி காணாமல் போய் விட்டால் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் கொடு. இது தபால் அலுவலகம்…இங்கே வந்து ஏன் சொல்கிறாய்?

அதற்குக் கருப்புசாமி சொன்னார்,

“அது எனக்குத் தெரியும் சார்! போன தடவை காணாமல் போன போது போலிஸ் ஸ்டேசனில்தான் புகார் கொடுத்தேன். அவர்கள் உடனே கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்”

color

 

பேருந்து பயணத்தில் இரண்டு பெண்கள். நடு இரவு. மார்கழி பனி.

இருவருக்குள்ளும் பயங்கர வாய்த் தகராறு.

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி…இன்னொரு­த்தி ஜன்னலை திறக்க சொல்லி!

ஒருத்தி சொன்னாள், “பனிக்காற்று எனக்கு ஒத்துக் கொள்ளாது…ஜன்னலை திறந்தால் நான் செத்துவிடுவேன்”

மற்றவள் சொன்னாள், “எனக்கு மூச்சு திணறுகிறது… இப்போது ஜன்னலை திறக்காவிட்டால் மூச்சு திணறி செத்து விடுவேன்”

யாராலும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. 

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்,

“ஐயா…முதலில் ஜன்னலை மூடுங்கள்…ஒருத்தி செத்து விடுவாள்..பிறகு ஜன்னலை திறங்கள்… இன்னொருத்தியும் செத்துவிடுவாள்… அதன்பின் நாம் நிம்மதியாக வீடு போய் சேரலாம்”

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

“எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது?” என்று அந்த பெரியவரிடம் கேட்க அவர் சொன்னார்,

“அந்த ரெண்டு பேருக்கும் நான்தாங்க புருஷன்”

“ஐயா…தெய்வம்யா நீங்க…உங்க பேரு என்னங்கையா?”

“கரூர் கருப்புசாமி!”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s