வினோதினி…. நீ ஏம்மா டெல்லியில பிறக்கல?

அன்பு சகோதரி வினோதினிக்கு…..

உன்னுடைய மரணசெய்தி அறிந்ததும் ஜாதி,மத,இன உணர்வுகளையெல்லாம் தாண்டி சகமனிதன் என்ற முறையில் எங்களுடைய உள்ளம் கலங்கித் துடிக்கிறது….

முதல்கனமாக சகஇந்தியன் என்றமுறையிலும், தமிழன் என்ற முறையிலும் உன்னுடைய இந்த நிலையை எண்ணி வெட்கித் தலைகுனிகிறேன்.

ஆசிட்வீச்சில் சிதைந்தது உன்னுடைய அழகியமுகம் மட்டுமல்ல….  ஒட்டுமொத்த இந்தியர்களின் மனசாட்சியும்தான் என்று எண்ணும்போது உள்ளம் உறுத்துகிறது…

மரணப்படுக்கையில் கிடக்கும்போதுகூட குற்றவாளிக்கு தண்டனை கொடுங்கள் என்று குமுறினாயே……

நம் நாட்டு சட்டங்களில் உள்ள ஓட்டைகளின் வழியாக உன்னைக் கடித்த விஷப்பாம்பு எளிதாக தப்பிவிடும் என்று எந்த முகத்தைவைத்துகொண்டு நான் உன்னிடம் சொல்வது….

தமிழர்களுக்கு விஸ்வரூபத்தை பற்றியும்…..  நமிதா எந்தக் கட்சியில் சேருவார் என்பது பற்றியும் பேசவே நேரம் போதவில்லை, பிறகு எப்படி அவர்கள் உன்னைப் பற்றி சிந்திப்பார்கள்….

உன்விஷயத்தில் மத்திய,மாநில அரசுகளின் அலட்சியபோக்கு எங்கள் மனதில் அரசின் மீது இருந்த கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையையும் இழக்கச்செய்துவிட்டது…

இனி வார்த்தைகள் இல்லை…உன்னுடைய இழப்பை தாங்கும் சக்தியை உனது பெற்றோருக்குக் கொடுக்கவும்,  இனி ஒரு பெண்ணிற்கு இதுபோன்ற அவலம் ஏற்ப்படாது இருக்கவேண்டுமென்றும்….  வேண்டுவது தவிர வேறு வழி தெரியவில்லை.

டெல்லிப் பெண்ணுக்காக மெரீனாக் கடலில் குதிக்கப் பாய்ந்து வந்த இந்தப் பெண் போராளிகளை,  தமிழச்சி வினோதினியின் உடல் வைக்கப்பட்ட இடத்தில் பார்க்க முடியவில்லை…. 

இந்தப் போராளிகளை யாராவது எங்காவது பார்த்தால்….  வினோதினினு ஒரு பொண்ணு ஆசிட் வீசப்பட்டு செத்துப்போச்சுனு சொல்லுங்கப்பா…..

பாவம், தமிழர்களின் பிரச்னைகளைப் ப்பற்றிய தகவல் எதுவும் இவங்க கண்ணுல படலை போல…. 

வினோதினி….  நீ ஏம்மா டெல்லியில பிறக்கல?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s