பாதைகளும் பயணங்களும்…… எங்கே போகின்றன?

dans

ஒரு தனியார் பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சி…..

“அடிக்குது குளிரு…. துடிக்குது தளிரு’ என்கிற பாட்டுக்கு அட்டகாசமாக ஆடிக்கொண்டிருந்தது ஒரு சின்னஞ்சிறு குழந்தை.

அந்தப் பாட்டுக்கே உரித்தான விரகதாபத்தை….. நெளிவு சுளிவுகளை….. காமவிரசத்தை…. பயிற்சிக்காகத் தொலைக்காட்சியில் பார்த்தது மாதிரியே- தானும்

மேடையில் கொண்டுவர முயற்சி செய்கிறது

பெற்றோரும், ஆசிரியப் பெருமக்களும், பார்வையாளர்களும் கைதட்டி ஆரவாரித்து, அந்தக் குழந்தையை உற்சாகப்படுத்துகிறார்கள்.

கவர்ச்சி பொங்க இடுப்பை ஆட்டுவதும், மார்பைக் குலுக்குவதும், காமவிரசத்தைக் கண்களில் கொண்டுவந்து காட்டுவதும்….. தவறல்ல என்கிற மாதிரியான தோற்றம் அந்த வயசிலேயே குழந்தையின் மனதில் விதைக்கப்படுகிறது.

செல்போன்களும்,, இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல……. நாகரிகமும் பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது.

பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் ‘மானாட மயிலாட’ நடனமும்….  இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. மாறாக, நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட சினிமாப் படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன.

 பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் ‘தொடர்’களாகி விட்டன.

 நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவைகள் எல்லாம் இன்று நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறி விட்டன.

 பாதைகளும் பயணங்களும்…… எங்கே போகின்றன?

Advertisements

One comment on “பாதைகளும் பயணங்களும்…… எங்கே போகின்றன?

 1. மிக‌ச் ச‌ரியான ப‌திவு.
  எழுப‌துக‌ளில், “ம்..ம‌ச்சானைப் பாத்திக‌ளா”
  பாட்டையே வீட்டில் குடும்ப‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் போது கேட்க
  கூசிய‌ க‌லாச்சார‌ம் கொண்ட‌ இந்த ச‌மூக‌ம், இந்த‌ நாற்ப‌தாண்டுக‌ளில்
  (தொலைகாட்சி வ‌ந்த‌பின்) எங்கோ திசை மாறி த‌றிகெட்டு சிக்க‌லாகி
  விட்டது என்ப‌து மறுக்க‌ முடியாத உண்மை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s