ஒரு தலைமுறையையே உலுக்கிய அந்தப் புகைப்படம்….

girl

ஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது.

தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அந்த ஆண்டுக்கான ‘புலிட்சார் விருது’ பெற்ற இப்படத்தை எடுத்தவர் ‘Nick Ut’ என்னும் வியட்நாமியப் புகைப்படக்காரர்.

இப்போர் அதன் உச்ச கட்டத்தை அடைந்துக்கொண்டிருந்த காலக்கட்டதில் ஜூன் 8, 1972-இல் ‘Trang Bang’ என்னும் சிறு கிராமத்தின் மீது தெற்கு வியட்நாம் படையால் போடப்பட்ட ‘நேபம்'(napalm) குண்டால் துளைக்கப்பட்ட இடிபாடுகளிலிருந்துதான் அந்த ஒன்பது வயதுச் சிறுமி ஓடி வந்தாள்.

அச்சிறுமியின் பெயர் ‘Phan Thi Kim Phuc’. அவளோடு அவளுடைய சகோதரர்களும் உறவினர் குழந்தைகளும் ஓடிவருகிறார்கள். குண்டுகளால் உண்டான தீ, அவளின் உடைகளை எரித்து அவளின் தோல்களிலும் பரவி இருந்தது. அவளின் கண்ணங்கள் மற்றும் உதடுகள் கூட தீயினால் கருகி இருந்தது. ஓடி வரும் போது “too hot, too hot” என்று அவள் தாய் மொழியில் கத்திக்கொண்டு வந்தாளாம்.

அப்போது அங்கே இருந்த புகைப்படக்காரர் ‘நிக்'(Nick Ut) அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார். படைவீரர்கள் அவளுக்கு தண்ணீர் கொடுத்திருக்கிறார்கள். அவளின் தோல்கள் தீயினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. புகைப்படக்காரர் நிக் அவளை தன் காரில் ஏற்றிக் கொண்டு அருகிலிருந்த இராணுவ மருத்துவ முகாமிற்குச் சென்றிருக்கிறார். அங்கே அவளுக்கு முதலுதவி தரப்பட்டு, பதினாலு மாதங்கள் சிகிச்சையில் பதினேழு தையல்கள் போடப்பட்டன.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி, பிழைக்க மாட்டாள் என்றுதான் முதலில் மருத்துவர்கள் சொன்னார்களாம். பதினாங்கு மாத கால மருத்துவதிற்குப் பிறகு பிழைத்து அவள் தன் கிராமத்திற்கு திரும்பினாள். அவள் மருத்துவமனையில் இருந்த போதும் அதன் பின் கிராமத்திலும் அவளை சென்று பார்த்து வந்திருக்கிறார் புகைப்படக்காரர் நிக். மூன்று வருடங்களுக்கு பின் போர் முடிவடைந்த போது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

சில வருடங்களுக்கு பிறகு ஒரு ஜெர்மன் பத்திரிக்கையாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்பெண் மீண்டும் செய்தி ஆனாள். அதன் பின் வியட்நாம் அரசாங்கம் அவளை ‘போரின் அடையாளச் சின்னமாக’ பயன்படுத்த துவங்கியது. அதனால் அவளின் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவிற்கு படிக்கச் சென்றாள். அங்கே தன் சக மாணவனோடு நட்பு ஏற்பட்டு அவனை திருமணம் செய்துக்கொண்டாள். பிறகு கனடா நாட்டு குடியுரிமைப் பெற்று அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

இடையே பல கூட்டங்களில் கலந்துக்கொண்டு போரின் அவலங்களை உலகத்திற்கு எடுத்துச் சொன்னாள். ஒருமுறை அவளின் இந்த நிலைக்கு காரணமான குண்டு வீச்சை நடத்திய இராணுவ அதிகாரி, அவளை சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அவளை அவர் பார்த்த நொடியிலிருந்து தொடர்ந்து தன்னை மன்னிக்குப்படி கேட்டுக்கொண்டே இருந்தாராம். அவள் அவரின் கையை பிடித்து நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்றுச் சொன்னப் பிறகுதான் அவர் நிம்மதி அடைந்ததாக அவரே சொல்லுகிறார்.

‘ஒரு தலைமுறையையே உலுக்கிய அந்தப் புகைப்படம் அமெரிக்க மக்களை வியட்நாம் போருக்கு எதிராக ஒன்று திரள உதவியது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமானப் புகைப்படங்களில் ஒன்றாக அது இன்று கருதப்படுகிறது’

ஏதும் அறிய அந்த ஒன்பது வயதுச் சிறுமியின் மீது படர்ந்த அந்தத் தீ இன்றும் பல இடங்களில் படர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. போரின் கொடுர முகத்திற்கு சாட்சியாக அந்தப் பெண் நம்மோடு வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்.

ஆனாலும், அதிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை!

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s