இந்தியா விற்பனைக்கு…… ஏலம் முடிந்தது!

”நீர்தான் கட்டபொம்மன் என்பவரோ?”
”நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?”
என எங்கேயோ கேட்ட குரல்கள் மீண்டும் இனி பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் ஒலிக்கத் துவங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை யாரும். சினிமாவில்தான் பார்ட் 2 சீசன் வரவேண்டுமா என்ன? இந்திய அரசியலிலும் இது பார்ட் 2 சீசன்தான். என்ன அன்றைக்கு ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி…. இன்றைக்கோ கிழக்கு…மேற்கு….தெற்கு எனச் சகல திசைகளிலும் நம்மை ஆப்படிக்க வரும் வால்மார்ட், டெஸ்கோ எனும் இத்யாதிகள்.

டீசல் விலை ஏற்றம் ஏன்? மண்ணெண்னை விலை ஏற்றம் ஏன்? அத்யாவசியப் பண்டங்களின் விலை ஏற்றம் ஏன்? என்றெல்லாம் கேட்டால் “எலே கச்சா எண்ணெய்க்கு அவன் வெல ஏத்தீட்டானில்ல….பொறவு என்ன செய்ய?” என்கிறது அது.

இதுக்குப் பேசாமல் ஒரு மளிகைக் கடைக்காரரையே பிரதமராக ஆக்கியிருக்கலாம்.(அவர் இவரை விடவும் நிச்சயம் சிறப்பாக இருப்பார் என்பது வேறு விஷயம்).

w-2

அமெரிக்காவின் வால்மார்ட் எத்தனை விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியது….
எத்தனை வணிகர்களை தெருவில் நிறுத்தியது….
எத்தனை சிறு முதலாளிகளை தலையில் துண்டைப் போட வைத்தது….

இதெல்லாம் இந்தப் பொருளாதார மேதைக்குத் தெரியாது என்று நினைத்தால் நம்மை விட  விவரம் கெட்ட சுப்ரமண்யன்சாமி வேறு யாரும் இருக்க முடியாது.
ஆனால் இதுகளையெல்லாம் முன்னேற்றவா அவர் ஆக்ஸ்போர்டிலும், கேம்பிரிட்ஜிலும் படித்து குப்பை கொட்டிவிட்டு வந்தார்? போங்கப்பு.

wall-1
வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோகப் போகிறது என்று அர்த்தம்.
வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகப்போகிறது என்று அர்த்தம்.
வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் மத்தியதர வர்க்கம் கற்பனை செய்தாலும் வாங்கிவிட முடியாத அளவுக்கு உச்சத்தில் போய் நிற்கப்போகிறது என்று அர்த்தம்.

அவ்வளவு ஏன்…. ’மீதி அஞ்சு ரூபா நாளைக்குத் தர்றேன் அண்ணாச்சி….’ என்கிற உரிமையோடு வீடு திரும்பி மறுநாள் உறவோடு திருப்பித் தரும் வாழ்க்கை முறை மாறி பிளாஸ்டிக் டப்பாக்களில் இரசாயணங்களால் பதப்படுத்தப்பட்ட பண்டங்களை சொன்ன விலைக்கு வாங்கவும் முடியாமல்…. வாங்கினால் உண்ணவும் முடியாமல்…. உண்டது செரிக்கவும் செய்யாமல்… சீரழியப்போகும் வாழ்க்கை முறை வருவதற்கான அறிகுறிதான் இந்த வால்மார்ட்.

ஆக….
ஏறக்குறைய எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டிற்கான அச்சாரம் போட்டாயிற்று. ஒன்றிரண்டைத் தவிர.

ஒரு முறை நீதியரசர் கிருஷ்ணய்யர் சொன்னதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. ”அவர்கள் சொல்வதும் சரிதான். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அந்நியர்கள் சீரழிப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவே முடியாது. ஏனென்றால் அந்த உரிமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது.”

கற்பழிக்கவே சங்கோஜப்படாத நம்மவர்களுக்கு- கலாச்சாரத்தை அழிப்பது பெரிய விஷயமா என்ன?

 

Advertisements

One comment on “இந்தியா விற்பனைக்கு…… ஏலம் முடிந்தது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s