கற்பழிப்பு – இங்கு பொழுதுபோக்கா? விளையாட்டா?

 

டில்லியில் சமீபத்தில் ஓர் பாலியல் வன்முறை சம்பவம் நடந்து- நாடே பரபரப்பாகி….

இறந்துபோன அந்த மாணவியின் உடல் எரிந்து கொண்டிருக்கும் போதே…..  இன்னொரு பெண் இரு நடத்துனர்களால் குடிபோதையில் பாலியல் கொடுமைக்குஆளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்துக்கும்  மேற்பட்ட பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டுல நடந்திருக்கின்றன.  அதுல ரெண்டு சிறுமிகள் சம்பந்தப்பட்டது.

கற்புக்கு இனிமேல் உத்தரவாதமில்லை என்கிற அளவுக்கு கவர்மெண்டுகள் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இப்படி- நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்…..

“பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள- கல்வியுடன் தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்”” என்று கூறுகிறார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவரோ இன்னொருபடி மேலேபோய் – “நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக… பெண்கள் நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது…” என்று புத்திமதி சொல்கிறார்.

இதன் பொருள் என்னவாம்?

கையைக் காலை வெட்டிவிடுவான் என்று தெரிந்தால் கராத்தே கற்றுக்கொள்…..

கற்பழிப்பான் என்று தெரிந்தால் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்…..

இப்படி எல்லாத்தையும் நாங்களே செஞ்சுக்கனும்னா….

அரசாங்கமும் ஆள்பவர்களும் எதற்கு, புடுங்கறதுக்கா?

வெட்கமே இருக்காதா இப்படியெல்லாம் பேசுவதற்கு? 

பிராந்திக்கடை மாதிரி வீதிக்கு வீதி பிராத்தல் செண்டரை ஓப்பன் பண்ணறது ஒண்ணுதான் பாக்கி…..

“கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு நிவாரண உதவித்தொகையாக முதலில் 20,000 வழங்கப்படும்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிக்கிறார்.

உடனே எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து மம்தாவைப் பார்த்து, “உங்களுக்கு விலை எவ்வளவு? உங்களைக் கற்பழித்தாலும் 20,000-ம் தானா?” என்று கேட்கிறார்.

கற்பழிப்பு என்பது-

குற்றவாளிகளுக்கு பொழுதுபோக்காகவும்….

அரசியல்வாதிகளுக்கு விளையாட்டுப் பொருளாகவும்…. ஆகிவிட்டது.

நமக்கு மட்டும்தான்…. வலி, வேதனை எல்லாம்!

 

 

Advertisements

One comment on “கற்பழிப்பு – இங்கு பொழுதுபோக்கா? விளையாட்டா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s