அது ஒரு தனி சுகம்!

எங்க ஊரரின் மையத்தில் இருக்கும் சத்திரத்து மைதானத்தில் கரகாட்டம் நடக்கும்.

ஆட்டத்தைக் காணக் கூட்டம் பிதுங்கி வழியும். பெண்கள் கூட அங்கங்கே உட்கார்ந்தபடி ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

தலையில் கரகம் வைத்துச் சிங்காரித்த கட்டுடல் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் விடலைகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என நடுத்தர வயதினரும் நிரூபித்துக் கொண்டிருப்பார்கள். காவடியின் முக்கியஸ்தர்கள் கூட்டத்தினரை ஒதுக்கியபடியே முன் சென்று வசதியாக அமர்ந்துகொள்வார்கள். 

நாட்டுப்புறப் பாலியல் பாடல்களை இட்டுக் கட்டி இரட்டை அர்த்தத்துடன் பாடியபடியே, மேளக்காரனுக்குப் போட்டியாக ஆட்டக்காரர்கள் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களின் மனத்தில் உறைந்துகிடக்கும் பாலுறவு வேட்கைக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கும். 

இடையிடையே அணங்குகளின் ஆட்டத்தைப் பாராட்டி பரிசாக பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று பணத்தை அவர்கள் மார்புக்கருகே அழுத்தியபடி குத்திவிடுவர். 

ஆட்டக்காரர்கள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. ஆடும் ஆட்டமும், கூட ஆடும் இளைஞனை இடிக்கும் இடியிலும், பாடும் விரசப் பாடலிலும், பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருப்போரின் மடியில் சென்று அமருவதும், நிற்பவரை நேரே சென்று மோதுவதும், முன்னால் உட்கார்ந்திருப்போரின் முகத்தினருகே சென்று குட்டைப்பாவாடை பறக்க வெட்டி வெட்டி ஆடுவதும், இடையிடையே ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்பதுபோல் பேனா, கைக்குட்டைகளைத் தரும்போது ’அவர்கள் விரும்பும்’ இடத்தில் வைத்துத் திருப்பித் தருவதும். . . 

காவடி என்பதையும், காவி வேஷ்டி என்பதையும் மறந்துவிட்டு ஆட்டத்தை ரசித்தால்….. ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்துக் காபரேவில் அனுபவிக்கிற சந்தோஷத்தைவிட… பத்து மடங்கு இது அதிகமாகவே இருக்கும்.

மனதை உறுத்தும் ஒரே விஷயம்- கடவுளின் பெயரால் இந்தக் கூத்து நடப்பதுதான்!

 

 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s