என்னிடம் அல்ல, உன்னுடன் இருப்பவர்களிடம் !

வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம்..

சிலர் மட்டுமே நம்மை என்னவோ செய்கிறார்கள்…

சிலரோடு மட்டுமே நமக்குப் பேச முடிகிறது…  

சிலரை மட்டுமே நம்மால் நேசிக்க முடிகிறது…

அந்த நேசத்தைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறோம்….

ஆனால்-

சுதந்திரமும்,  புரிதலுமே அந்த நேசத்தைத் தக்க வைக்கும் என்பதை அறியாத சிலர்….

தங்களையும் தொலைத்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தொலைத்து விடுகிறார்கள்.

இந்நிலையில்…..

ஏமாந்து விட்டேனே  என்கிற கவலையை விட-

ஏமாற்றிவிட்டாயே என்கிற கவலைதான்

என்னைத் தினம் தினம் கொல்கிறது. 

உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை. …

பொய்யாக வேஷமிட என்னாலும் முடியவில்லை.

இனியாவது-

உண்மையாய் நடந்து கொள்….

என்னிடம் அல்ல,  உன்னுடன் இருப்பவர்களிடம் !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s