இந்தப் பொண்டாட்டிங்க இம்சை தாங்கமுடிலைடா நாராயணா……….

என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…. என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டான்னு…. ஜனகராஜ் ஒரு படத்துல சத்தம் போட்டுக் கத்திச் சந்தோசப்படுவாரு.

மனைவி ஊருக்குப் போறது ஒருவகையில சந்தோஷமா இருந்தாலும்….. போனதுக்கப்புறம் கொடுக்கற உளவியல் டார்ச்சருக்காகவே அவங்க எங்கேயும் போகாம இருந்தாலே போதும்னு தோணுது.

நாலு நாள் புரோக்ராம்தான்…. தீபாவளி முடிஞ்சதும் புதன்கிழமை வந்துடப்போறாங்க….. அதுக்குள்ளதான் எவ்வளவு அலட்டல்? பில்ட்டப்பு?

சாதாரண நாளிலேயே வீட்டுல சாப்பிடறது கிடையாது. ஓட்டல் சாப்பாடுதான். ஆனா இப்ப மட்டும் என்னமோ புதுசா சாப்பாட்டுக்கு என்னங்க பண்ணுவீங்க. அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்களானு ஃபீல் வேற.

நல்லா கவனிச்சிக்கங்க ஒரு டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணி ஊத்தனும் மறந்துடாதீங்க. வெளிய போகும் போது கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர ஆஃப் பண்ணிட்டு போங்க.(இவங்களுக்கெல்லாம் ஊருக்குப் போகும்போது மட்டும்தான்தான் சிலிண்டருக்கு ரெகுலேட்டர்னு ஒன்னு இருக்கறதே தெரியுங்கறது அடுத்த விஷயம்).

கதவெல்லாம் நல்லா பூட்டியிருக்கான்னு ஒருதடவைக்கு ரெண்டுதடவை கன்ஃபார்ம் பண்ணிட்டுப் போங்க. எப்படியோ போய் தொலையுதுன்னு தலையைத் தலையை ஆட்டிக்கிட்டு இருக்காதீங்க.

இப்படி ஊருக்குப் போனதிலேயிருந்து இதுவரைக்கும் இதே விஷயத்தை நாலு தடவை கேட்டாச்சு..

அது என்னமோ தெரியலை…. இந்தப் பொண்டாட்டிங்களுக்கு மட்டும், கணவனுக்குக் கல்யாணம் ஆனபிறகுதான் மூளையே மொளைக்கும்னு நினைச்சிக்கறாங்க போல.

இந்தப் பொண்டாட்டிங்க இம்சை தாங்கமுடிலைடா நாராயணா……….

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s