நடக்கிற காரியமா அது?

நாட்டுல ஆயிரமாயிரம் தீராத பிரச்னைகள்….. தீர்க்கமுடியாத பிரச்னைகள்.

கை கழுவும் போது இருக்கிற கரண்டு, சாப்பிட உட்காரும்போது காணாம போயிடுது.
முதல் இட்லிக்கு வந்துட்டு, இரண்டாவது இட்லிக்குப் போயிடுது……
காணாமப் போன கரண்டைக் கண்டுபிடிக்க, நம்ம கவர்மெண்டுக்கும் நேரம் இல்லை,

ஆனா- நம்ம அம்மாவோட கவர்மெண்டு என்ன செஞ்சுக்கிட்டு இருக்கு தெரியுமா?

தீபாவளிப் பண்டிகை வேற நெருங்கிடுச்சா…. டாஸ்மாக்கோட பேரக்குழந்தைகளும், நாட்டோட குடிமகன்களும் திருவிழா நேரத்துல- சரக்குக் கிடைக்காமத் தடுமாறிப் போயிடக் கூடாதல்லவா?

அதனால- டாஸ்மாக் நிர்வாகம், வழக்கமா அனுப்புறதைவிட, 40 சதவீதம் கூடுதலாகச் சரக்குகளைக் கடைகளுக்கு அனுப்பி வருகிறது.

தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (புரட்சித்தலைவியின் புரட்சி?)

ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்துவருகிறது தமிழ்நாடு.

கடந்த 2003ல்- 3,250 கோடியாக இருந்த மது விற்பனை, 2011 – 12ம் நிதி ஆண்டில், 20 ஆயிரத்து 180 கோடியாக உயர்ந்தது. நடப்பு, 2012- 13ம் நிதியாண்டுக்கு, 23 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (2020-ல் இந்தியா வல்லரசுதான்!)

“டாஸ்மாக்’ கடைகளின் தினசரி விற்பனை, 72.25 கோடியாகவும், ஞாயிறு, விசேஷ தினங்களில் விற்பனை, 85 கோடியாகவும் உள்ளது.

ஒரு நாளைக்கு 70 கோடி ரூபாய்க்குச் சரக்கு விற்பனை…

அதாவது ஒரு நாளைக்கு தலா மூன்று மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவனைகளை அமைக்க முடியும்… அப்படி என்றால் தமிழ்நாடு முழுக்க முக்கிய நகரங்களில் ஒரே மாதத்தில் தலை சிறந்த மருத்துவமனைகளை நிறுவ முடியும்..

அடுத்த மாதத்தில் தமிழ்நாடு முழுக்க உள்ள பேருந்து நிலையங்களிலும், சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களின் முக்கிய வீதிகளிலும் தேவையான பொதுக் கழிப்பிடங்களை ஏற்படுத்த முடியும்…  நாய் போன்று சுவற்றில் அடிப்பதை இதன் மூலம் தவிர்க்க முடியும்…

அடுத்த மாத வருமானத்தில் அனைத்து ஊராட்சியிலும் தேவையான நோய் தடுப்பு மருந்துகளை மற்றும் பாம்பு கடிக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுக்க முடியும்…

இப்படியே இரண்டு வருடங்களில்  மலைக்க வைக்கக் கூடிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும்….

ஆனால்- இதற்கெல்லாம்…..

ஒழுங்கான நிர்வாகம் கொடுக்கக் கூடியவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமே.

நடக்கிற காரியமா அது?

Advertisements

3 comments on “நடக்கிற காரியமா அது?

  1. கோட்டைக்கு கேட்குமா?
    அவுங்க‌ பார்லிமெண்டுக்கு போற‌ க‌ன‌வுல‌ இருக்காக‌.
    பைய‌ன் வ‌யித்தில‌ சொருகி இருக்கிற‌ ப‌ட‌ம்,
    த‌மிழ‌க நில‌மையை போல‌ பார்க்க‌ ச‌கிக்க‌லையே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s