உன்னுடைய கற்பை யாருப்பா சோதிக்கிறது?

 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த, பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர், சடையன்,30; மனைவி அலமேலு,27.

இவர்களுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன; ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது.

சடையன் வெளிநாடு சென்று, சமீபத்தில்தான் ஊர் திரும்பினார். மனைவி மீது சந்தேகமடைந்த அவர், தனது மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், மனைவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்து, அவரது கற்பை சோதித்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த அலமேலு, திருக்கோவிலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அலமேலுவின் கணவர் சடையன், மாமியார் பெரியாயி, கொழுந்தனார் மணிகண்டன்,28, உறவினர்கள் ராமர், திருமலை, சக்கரை ஆகியோர் மீது, இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிந்து, சடையனைக் கைது செய்தார்.

இப்படிப்பட்ட ஜென்மங்களையெல்லாம் என்னதான் செய்வது?

அந்த மனிதன்ர் என்ன சடையனா ?- மடையனா?

ஒருவேளை- ராமன் தனது மனைவி சீதையை அப்படித்தானே சோதித்தார் என்பதால்…. இவரும் அதைச் செய்திருப்பாரோ?

ஏய்யா தக்காளி…  உனக்கு அவ்ளோ பயம் இருந்தா எதுக்குலே உன் பொண்டாட்டியத் தனியே விட்டுட்டு வெளிநாடு போனே?  ஒருவேளை அவள் அப்படிப் பட்டவளா, இருந்தா பக்கத்துலயே உக்கார்ந்து காவல் காக்க வேண்டியது தானே…..

அதுசரி-  நீ வெளிநாடெல்லாம் போயிட்டு வந்திருக்கியே……

உன்னுடைய கற்பை யாருப்பா  சோதிக்கிறது?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s