தீபாவளிப் பரிசு?….

 

சிவகாசி மாவட்டத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 45 க்கும் மேற்பட்டவர்கள் பலியானாதாகச் செய்திகள் வருகின்றன.

இந்தத் தீ விபத்தில் 40 அறைகள் தரைமட்டமாயின. விபத்தில் பலியானவர்களில் பலர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்கள், சிவகாசி, மதுரை உள்ளிட்ட மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

தரமற்ற வெடிமருந்து பொருட்கள், அங்கீகாரமற்ற பட்டாசு ஆலைகள் ; தொடரும் விபத்துக்கள் ; யார் காரணம் ?

இதுபோன்ற பட்டாசு ஆலை தீ விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் உள்ளன.

 

தீபாவளியைப் பட்டாசு வெடித்து மற்றவர்கள் கொண்டாடுவதற்காக….. பலர் இன்று தங்களின் இன்னுயிரை நீத்துள்ளனர்.

இறந்தவர்களின் வீடு இழவு வீடாக சோகத்தில் மூழ்கியிருக்க…. நாம் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடுவதா?

மனசாட்சி உள்ள தமிழர்களே…………….

இறந்த அந்த உயிர்களுக்கு மரியாதை தரும்வண்ணம், இந்த ஆண்டாவது தீபாவளியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடாமல் இருங்கள்.

உங்களது குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.  அவர்களைச் சமூக பொறுப்புள்ள மனிதர்களாக உருவாக்குங்கள்!

Advertisements

2 comments on “தீபாவளிப் பரிசு?….

  1. 2008 ல் முடிந்து போன‌ உரிம‌த்தை வைத்துக் கொண்டு இந்த‌ பாஃக்ட்ரி ந‌ட‌ந்து வ‌ந்த‌தாய் அர்சு அதிகாரி இப்போது கூறுகிறார். நாலு வ‌ருஷ‌மாய் இந்த‌ அதிகாரிக‌ளும். அர‌சும் என்ன…. செய்து கொண்டிருந்த‌து? ஊழ‌லின் தாக்க‌ம் தான் ப‌ஸ் ஓட்டை முத‌ல் பீர‌ங்கி வ‌ண்டிவ‌ரை அதிர்ந்து கொண்டிருக்கிற‌து. ம‌க்க‌ள் ஊனையாய், செவிட‌ராய், குருட‌ராய் ம‌ட்டுமே இருக்க‌ ப‌ழ‌கிவிட்ட‌ன‌ர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s