மனைவி அமைவதெல்லாம்……..

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கிறார்கள்…..

இங்கே எத்தனை பேருக்கு இறைவன் அப்படி ஒரு அருமையான வரத்தைக் கொடுத்திருக்கிறான்?

விவாகரத்து வேண்டிக் கோர்ட்டு வாசலில் கும்பல் அலைமோதுகிறதே…. ஏன்?

நீங்கள் பார்க்கிற குடும்பங்களில் எத்தனை பேர் சண்டை சச்சரவில்லாமல் சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள்?

விட்டுக்கொடுத்தலும், புரிந்து நடத்தலும்…. ஏன் இங்கே இல்லாமல் போனது?

எடுத்ததற்கெல்லாம் சண்டை…. ஏன்?

புரிந்துகொண்டால்- வாழ்க்கை இனிக்கும்.

இல்லையென்றால்?….. இப்படித்தான் நடக்கும்.

கல் நெஞ்சக் காக்கிகளே!…

 

கல் நெஞ்சக் காக்கிகளே!…

கேவலம்-

ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது?

கால் இரண்டும் பின்னிக் கொள்ள

கை மட்டும் அனிச்சையாகப்

பெண்மையின் மானத்தைக் காக்கிறது……

ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவனுக்கு

இப்படி ஒரு பேடித்தனம் வராது!

நெனைப்புத் தான் பொழப்பக் கெடுக்குமாம்…

 

 

ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்:

என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.

பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?

இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா.

அவளைத் திட்டும்போதெல்லாம் ‘உனக்கு ஒரு கழுதையைத்தான் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருந்தார்”

அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்’.

நெனைப்புத் தான் பொழப்பக் கெடுக்குமாம்…