தலை…. தலைதான்!

 

 நடிகர் விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டுப் போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர். உதவி கேட்ட அவரிடம்
விஜயகாந்த், இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க, நீ வேறயா என்று சொல்லவும், அந்த உதவி இயக்குனர் மருத்துவச் செலவுக்குத் தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது, தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே. முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததையாவது கொடுங்கள் என்று சொல்ல….  கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம்.

      மனம் தளராத அந்த உதவி இயக்குனர், மருந்து வாங்க 500 ரூபாய் கேட்டாராம். அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த். நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் அஜித்திடம் அழைத்துப் போனாராம். படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கி விட்டு நடிக்கப் போய் விட்டாராம். அவரும் அப்படி எதுவும் பேசாமல் போனதும் மனம் வெந்து  போய்விட்டார்களாம். ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை . அஜித் இவர்கள் கதை சொல்லத்தான்
வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்துக் கொடுத்து விட்டு வந்தாராம்..

        மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்குப் பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல, கோபத்தில் துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்லக் கூடாதா, நான் கதை சொல்லத்தான் வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து,  எவ்வளவு தேவை என்று கேட்டாராம். விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம். கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட்டவும், எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக நானே தருகிறேன். ஆனால் இதைப் பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.

         அஜித்தின் இந்த மனிதநேயம்…. எத்தனை பேருக்கு….. குறிப்பாக- சினிமா உலகத்தில் வரும்?

        தலை…. தலைதான்!

Advertisements

2 comments on “தலை…. தலைதான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s