காசுதான் முக்கியம். கௌரவமோ, கற்போ அல்ல!

கனவுத் தொழிற்சாலை என்று கௌரவமாக அழைக்கப்படுகிறது சினிமாத் தொழில்……

அது- கேமராவுக்கு முன்னால் மற்றும் கேமராவுக்குப் பின்னால் என்று இரண்டு முகம் கொண்டது.

பளிச் காட்சிகள், நல்ல கதை, சூப்பர் ஒளிப்பதிவு, அருமையான எடிட்டிங், அசத்தலான கிராபிக்ஸ் என……

70 எம்.எம் திரையிலும் கூட ரசிக்க வைக்கக்கூடிய விஷயங்கள் கேமராவின் முன் பக்கம்.

ஆனால்- கேமராவின் பின்பக்கமும் இது போலவே நல்லதான விஷயங்களும், நாகரிகமான விஷயங்களும்தான் இருக்கின்றவா என்றால்……

இல்லை என்கிற கசப்பான விடைதான் பதிலாகக் கிடைக்கும்.

இருள் கவ்விக் கிடக்கும் அந்தப் பகுதியிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த விஷயங்கள் நூறில் ஒரு பங்குதான்.

நடிக்கும் ஆசையில் வந்து சிக்கிகொள்கிற இளம்பெண்கள் மட்டுமல்ல, நடித்துக் கொண்டிருப்போரும் கூட….. அட்ஜஸ்ட் பண்ணிப் போனால் மட்டுமே அங்கே குப்பை கொட்ட முடியும் என்பதுதான் எதார்த்தமான நிலை.

பல நடிகைகள்….. இதைப் பகிரங்கமாகவே, வேதனையோடு வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

என்னதான் திறமையும் கவர்ச்சியும் இருந்தாலும் கூட, அட்ஜஸ்ட்மெண்ட் மட்டும் இல்லாவிட்டால் அங்கு அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக் கிடைக்காது,

இப்படி ஒவ்வொரு நடிகைக்குப் பின்னாலும் ஒவ்வொரு “இழந்த கதை” இருப்பது ஊருக்கே தெரிந்த கதைதான்.

தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ என…. ஆசைப்பட்ட இடங்களில் எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிப்போனால் போதும்…… அந்த வருஷத்தின் நம்பர் ஒன் ஆர்ட்டிஸ்ட் என்கிற ரேஞ்சுக்கு ஆட்டம் காட்டிவிடலாம்.

கோடம்பாக்கத்துப் படுக்கைவிரிப்புகளை உதறிப்பார்த்தால்தான் தெரியும்….. பலப்பல வி.ஐ.பி.க்களின் முகவரிகளும் பஞ்சராகிவிடும்.

ஒன்றை இழந்து, இன்னொன்றைப் பிடிக்கும் சூதாட்டத் தளம்தான் சினிமாக் களம்.

இளமையும் அழகும்தான் இங்கு மூலதனம். இரண்டையும் காட்டினால்…. அதுவே அங்கு ஆளும் இனம்.

பெண்வர்க்கம், ஆண்வர்க்கம் என்கிற பேதமெல்லாம் இங்கு இல்லை. அத்தனை குப்பைகளும் கொட்டிக்கிடக்கும் இடம் அது.

கனவுகள் மட்டுமில்ல…. கற்பும் இங்கு அப்படித்தான். நான் யோக்கியம் என்று அவர்களைச் சொல்லச் சொன்னால்…. நாலைந்து பேர்தான் தேறுவார்கள்.

படத்தில் ஹீரோ வேஷம் போட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்- நிஜத்தில் வில்லனாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

நடிகைகள் இழந்த கதை இது என்றால், நடிகைகளால் இழந்த கதை இதைவிட மோசம்.

ஓஹோ என்று உச்சத்தில் இருந்த ஒரு டெக்ஸ்டைல் தொழிற்சாலையை, ஒழித்துக் கட்டிய நடிகையிலிருந்து….. கப்பல் வியாபாரத்தையே காணாமல் போகச்செய்த நடிகை வரை….. கதைகள் ஏராளம்.

அவர்களுக்குத்தான்- நம் ரசிகர்கள் கோயில் கட்டுகிறார்கள். பாலாபிஷேகம் பண்ணுகிறார்கள்.

அவர்களுக்கு- காசுதான் முக்கியம். கௌரவமோ, கற்போ அல்ல.

ஆனால்- நமக்கு?……..

 

One comment on “காசுதான் முக்கியம். கௌரவமோ, கற்போ அல்ல!

  1. ச‌ரியான அலச‌ல். ப‌ன்னாட்டு வ‌ணிக‌ம் இந்திய‌ ம‌ண்ணைத் தொட்டபின் இன்று, எல்லா தொழில்க‌ளிலும் இப்ப‌டித்தான் ஆகிவிட்ட‌து. நாட்டின் ர‌க‌சிய‌ங்கையே “ஹ‌னிட்ராப்” வ‌ழியாக‌ கற‌க்கிறார்க‌ள். சில்மிஷ போட்டேக்க‌ளை காட்டி ப‌ழைய‌ சிநேகித‌ங்க‌ளை சீர்குலைக்கிறார்க‌ள். காவ‌ல் உய‌ர‌திகாரியே, ஏமாற்றிய‌ சீட்டுக்க‌ம்ப‌னியில் சுய‌லாப‌த்துக்காவும், சுக‌த்திற்காக‌வும், ம‌க்க‌ளின் துய‌ர‌த்தை, அவ‌ர்க‌ள‌து வ‌ழக்கு ப‌ற்றி க‌வ‌லையின்றி திரிகிறார். ஆளும் வ‌ர்க்க‌ம் எல்லாவ‌ற்றையும் சுர‌ண்டி, ச‌ட்ட‌ புற‌ம்பான‌ அனைத்து செய‌ல்க‌ளையும் செய்து, புதுச்ச‌ட்ட‌ங்க‌ளையும் இய‌ற்றுகிற‌து!!. விவேக‌ம், த‌ர்ம‌ நியாங்க‌ள், காசுக்கு முன் தோற்று ஓடி ப‌ல‌ கால‌ம் ஆகிவிட்ட‌து, உத‌ய‌ சூரிய‌ன். மேக‌ங்க‌ள் கூடி சூரிய‌னின் இரங்க‌ல் செய்தி வாசிக்கும் கலி கால‌ம் இது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s