அவர்தான் இவ்ர்….

சோனாலி முகர்ஜி.. வயது 26 …..

இவர் சமீபத்தில்,, மத்திய அரசிடம்- “எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.. அல்லது என்னைக் கருணை கொலை செய்ய வேண்டும் ” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஏன் ?

கல்லூரி மாணவியான இவர்,, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தவர்..
துணிச்சல் மிக்கவர்.. இவர் தினமும் கல்லூரிக்குச் செல்லும்போது, மூன்று வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்து தொல்லைகள் கொடுத்ததைத் தாங்கமுடியாமல்-, இனிமேலும் இப்படிச் செய்தால், நான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்திருக்கிறார்.

உடனே கோபம் கொண்ட அந்த இளைஞர்கள், உனது அழகான முகத்தைச் சிதைத்தால்தான் நீ
சரிப்படுவாய் என்று கூறி, ஒர் இரவில்,, (2006 APRIL 22) மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்த
இவர் மீது ஆசிட்டை ஊற்றிச் சென்றுவிட்டனர்..

இன்று இவருடைய முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள்….

கண்பார்வை பறிபோனது. ஒரு பக்கக் காது கேட்காது..
இன்னும் எத்தனையோ வலிகள், அவஸ்தைகளோடு கடந்த ஆறு வருடங்களாக நடைபிணமாக
வாழ்ந்து வருகிறார்.

இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம்…….

இவர் மீது ஆசிட் ஊற்றிய மூவரில் ஒருவரை இளம் குற்றவாளி என்று சொல்லிக் கோர்ட் விடுதலை செய்து விட்டதுதான் கொடுமை.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் கூறுகிறார்……

“குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். நான் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து வேறு ஊருக்குக் குடி பெயர்ந்துவிட்டேன்…. இந்த தேசத்தில் நீதியின் லட்சணத்தைப் பார்த்தீர்களா ?”

இவரின் அன்றைய புகைப்படத்தையும், ஆசிட் வீச்சுக்குப் பிந்தைய புகைப்படத்தையும் இங்கு இணைத்துள்ளேன்..
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

 

Advertisements

2 comments on “அவர்தான் இவ்ர்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s