பஸ்ஸில் இருந்த ஓட்டையை விடவும், சட்டத்தில் இருக்கும் ஓட்டை மிகவும் பெரியது!

சென்னையில்- பள்ளி மாணவி பலியான சோக சம்பவம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஒரு பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சேலையூரில் இருந்து முடிச்சூருக்குp புறப்பட்ட பள்ளி வாகனம் முடிச்சூர் E.B. காலனி பேருந்து நிறுத்தம் அருகே யு டர்ன் போட்டு மின்னல் வேகத்தில் சென்றது.

உள்ளே இருந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் சீட் மாறி விளையாடிக்கொண்டிருந்தனர். அந்தப் பஸ்சின் நடுவில் பெரிய ஓட்டை இருந்திருக்கிறது.

பஸ் சென்ற வேகத்தில், ஸ்ருதி என்ற சிறுமி நிலைதடுமாறி அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஸ்ருதி மீது ஏறி இறங்கியது. அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உடல் நசுங்கி ஸ்ருதி இறந்தாள்.

பூ ஒன்று மலரும் முன்னதாகவே, பொறுப்பற்ற சிலரால் அநியாயமாகப் பொசுக்கப்பட்டு விட்டது.

யார் இங்கே குற்றவாளி?

பஸ்ஸுக்குள் ஓட்டையை வைத்திருந்த பஸ் ஓனரா?

ஓட்டையிருந்தால் எனக்கென்ன என்று ஓட்டிச் சாவை ஏற்படுத்திய ஓட்டுனரா?

காசைக் கறப்பதோடு நமது கடமை முடிந்தது என- பஸ்ஸைப் பற்றிக் கவலைப்படாத பள்ளி நிர்வாகமா?

அல்லது- இந்த ஓட்டைப் பஸ்ஸுக்கும் கூடக் காசை வாங்கிக்கொண்டு, பதினான்கு நாட்களுக்கு முன்பு அந்தப் பேருந்துக்கு FC வழங்கிய போக்குவரத்து அலுவலரா?

இது எதையுமே இதுவரையிலும் கண்டுகொள்ளாமல் இருந்த அரசும், அமைச்சருமா?

எல்லோருமே….. தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள்தான்!

இந்தப் பலிக்குப் பிறகு- போக்குவரத்துத் துறை அமைச்சர், தனது சொந்த மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளில் ஆய்வு செய்திருக்கிறார்.

அமைச்சர் செய்ததற்குப் பெயர் ஆய்வு அல்ல….. ஸ்டண்ட்!

.கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? எதையுமே முன்னதாக ஆராய்ந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல்…..

எல்லாமே முடிந்தபிறகு….. வேஷம் கட்டுவதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

கோர்ட் மட்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்காமல் விட்டிருந்தால்…… இந்த விவகாரம் மண்ணில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு இருக்கும்.

சமீப ஒரு வருட கால அளவில்- தமிழ் நாட்டில் சாலை விபத்துகள் எக்கச்சக்கம் ஆகி விட்டது. இவர் அமைச்சராக இருந்து என்னதான் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

பாட்டியின் அமைச்சரவையில் எந்த ஒரு அமைச்சரும் தண்டம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

முதலில் வண்டிகளைப் பரிசோதனை செய்கிற ஆர்.டி.ஓ அலுவலகம் ஒழுங்காக இருக்க வேண்டும். அங்குதான் பிரச்சினைகளே உருவாகிறது.

தவறான வண்டிகளை அனுமதிப்பது, வண்டி ஓட்டத் தெரியாதவனுக்கு லைசென்ஸ் கொடுப்பது என்று பல ஊழல்கள் நடைபெறுகிறது.

அமைச்சர் இதெயெல்லாம் தடுப்பார் என்று நாமும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், பெரும்பாலான ஆர்.டி.ஓ.க்கள் அமைச்சருக்குப் பணம் கொடுத்து விட்டுத்தான் அந்த இடத்துக்கே வருவதாகச் சொல்கிறார்கள்.

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது……

பஸ்ஸில் இருந்த ஓட்டையை விடவும்- நமது சட்டத்தில் உள்ள ஓட்டை…… மிகவும் பெரியது!

One comment on “பஸ்ஸில் இருந்த ஓட்டையை விடவும், சட்டத்தில் இருக்கும் ஓட்டை மிகவும் பெரியது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s