வெரி குட் போலீஸ் மாமா…. அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை:போலீஸ் நிலையம்….. தமிழக-ஆந்திர எல்லையில் இந்த போலீஸ் நிலையம் அமைந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் திருட்டு மணல், ரேஷன் அரிசி மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தப்படும் மலிவுவிலை மது, செம்மரக்கட்டை ஆகியவை இந்த வழியாகத்தான் கடத்தப்படும்.

இதற்காக, இங்கு பணியாற்றும் போலீசாரை சம்பந்தப்பட்டவர்கள் நன்கு “கவனிப்பதால்’….. போலீசார் காட்டிலும் நல்ல மழை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் ஜாலியாகப் பயமின்றி செயல்படுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்- சமீபத்தில் ஒருநாள் இரவு நேரத்தில், போலீஸ் தலைமைக் காவலர் வாசு மற்றும் போலீஸ் பாபு இருவருக்கும் இடையே பணத்தைப் பங்கு பிரிப்பதில் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே மோதல் ஏற்பட்டுவிட்டது.

வாய்த்தகராறு உச்சத்தை அடைந்தது. உடனிருந்த போலீசார் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இருவரும் போலீஸ் நிலையத்திலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டனர். வேடிக்கை பாக்க மக்கள் திரண்டும், வெட்கப்படாமல் சண்டை தொடர்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.,ரூபேஷ்குமார்மீனா, சம்பந்தப்பட்ட வாசு, பாபு ஆகிய இரு போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டு இருக்கிறாராம்.

இவ்வளவு பெரிய ஒரு அசிங்கத்தைச் செய்தவர்களை பணியிடை நீக்கம் செய்யாமல், வெறும் பணிமாற்றம்தானா? என்ன ஒரு கேவலம் இது?

காவல் துறையினர் கடத்தலுக்கு உடந்தையாக லஞ்சம் வாங்கினார்கள். அதைப் பிரிப்பதில் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டார்கள். அவர்கள் பெயர் மற்றும் காவல் நிலையம் போன்ற அனைத்து விஷயங்களும் வீதிக்கு வந்து விட்டது. அப்படிப்பட்டவர்களைப் பணியிடை நீக்கம் செய்திருந்தால்….. காவல் துறையின் கண்ணியம் மீது மதிப்பு வந்திருக்கும்.

வாங்கியது லஞ்சமாம்….. அதனைப் பிரிப்பதில் சண்டை போட்டுக்கொண்டது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் இடத்தில் இருக்கும் போலீசாராம்….. இவர்களுக்குத் தண்டனை இடமாற்றமாம்……. சபாஷ்!.

எஸ்.பி.அவர்களே….. நீங்கள் இன்னொரு காரியம் செய்திருக்கலாம்.

இவர்களை ஏன் ஆயுதப்படைக்கு மாற்ற வேண்டும்? இவர்கள்தான் நன்றாகச் சண்டை போடுகிறார்களே? பிறகு என்ன தயக்கம்? இப்படிப்பட்டவர்களை- ஜம்மு & காஷ்மீர் அல்லது வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளுடன் சண்டை போடுவதற்கு அனுப்ப வேண்டியதுதானே?

நல்ல நாடு…. நல்ல சட்டம்…. நல்ல மக்கள்!

Advertisements

2 comments on “வெரி குட் போலீஸ் மாமா…. அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s