தெய்வம் என்றால் அது தெய்வம் , சிலை என்றால் அது சிலைதான்!

அதென்ன காரணமோ தெரியவில்லை….. அய்யப்பன் மேல் மட்டும் அப்படி ஒரு ஈர்ப்பு சில பெண்களுக்கு.

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அங்கு அனுமதி இல்லை என்று தெரிந்தும் கூட…. அவ்வப்போது தடையை மீறி யாராவது ஒருவர் மாறுவேடத்தில் உள்ளே நுழைய முயற்சிப்பதும், அவர்களைக் கண்டுபிடித்துப் போலீசார் திருப்பி அனுப்புவதும் தொடர் கதையாகிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு…

பிரபல ஜோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவ பிரசன்னம் (சோழிகள் கொண்டு ஜோதிடம் கணிப்பது) பார்க்கப்பட்டது. அதில், அய்யப்ப சன்னிதிக்குள் பெண் நுழைந்ததால் தீட்டுப்பட்டுள்ளது என்று ஜோதிடர் கூறியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால், அவ்வாறு எதுவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கன்னடத் திரைப்பட நடிகை ஜெயமாலா என்பவர், “திரைப்படப் படப்பிடிப்புக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றபோது, தவறி விழுந்து மூல விக்கிரகத்தைத் தொட்டு வணங்கியதாகவும், ஜோதிடர் தெரிவித்த கருத்து உண்மைதான்’ என்றும் தெரிவித்தார்.

அப்புறம் என்ன? இளம்பெண் நுழைந்ததால் தீட்டு…. பரிகாரபூஜை….

கோவிலுக்குச் செல்லும் 18ம்படி, மூலஸ்தானம் உள்ள பகுதிகளில் இந்தப் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. சந்நிதானத்தில் புண்ணிய யாகம் நடத்தி, சந்நிதானமும் அதன் சுற்றுப்பகுதிகளும் சுத்தி செய்யப்பட்டன.
அதன்பிறகு பக்தர்கள் வழக்கம்போலத் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதை அடுத்து இந்தப் பிரச்னை குறித்துக் கோட்டயம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை துவக்கினர். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திரன், “இந்த வழக்கு சட்டப்பூர்வமாக செல்லாது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான சாட்சியங்களோ, போதுமான ஆதாரங்களோ இல்லை. குற்றப்பிரிவு போலீசார் அளித்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது. எனவே, இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தீர்ப்பளித்திருக்கிறார்.

நல்லவேளை உயர்நீதிமன்றம் சாட்சிகள் இல்லையென்று தீர்ப்பளித்து விட்டது. இல்லையென்றால் அந்த நடிகை தவறி விழுந்து தன் கால்களை தொட்டது உண்மையா இல்லையா என்று சாட்சிசொல்ல அய்யப்பனும் சாட்சி கூண்டுக்கு வரவேண்டியிருந்திருக்கும்……

இப்படி ஒரு பூதாகரமான பிரச்சினையைக் கிளப்பி விட்டுவிட்டு, அய்யப்பன் அவரு பாட்டுக்குக் குத்த வெச்சு உக்காந்துகிட்டு இருக்கிறதுதான் ஏன்னு புரியலே.
ஒருவேளை….. ஆண்டவன் சந்நிதியில் ஆண் பெண் பேதமில்லை…. அவர்களையும் அனுமதியுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரோ?

இப்போதுதான் பரிகாரம் இருக்கிறதே…… வாரம் ஒரு நாள் பெண்களை அனுமதித்துவிட்டு மறுநாள் பரிகார பூஜையைச் செய்துவிட்டுப் போகவேண்டியதுதானே?

கேட்டால்….. மாதவிடாய்…. தீட்டு என்பார்கள். தம் அடிப்பது, தண்ணியடிப்பதை விடவா இது தீட்டு?
மாலை போட்டு, விரதம் இருந்து, இருமுடி கட்டிப் போகிறவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள்…… வரும்போதே சரக்கை வாங்கிகொண்டுதான் திரும்பி வருகிறார்கள். அதை விடவா இது தீட்டு?

மாதவிடாய் என்பது இயற்கை தந்தது. இறைவனே தந்தது என்று கூடச் சொல்லலாம். அது பெண்மையின், தாய்மையின் அடையாளம்.
உடம்பை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு, மனதுக்குள் அழுக்கைச் சுமந்துகொண்டு தரிசிப்பவர்களைவிட…… அழுக்குப்பட்ட உடம்பை வைத்துக்கொண்டு, ஆத்மப் பரிசுத்தமான மனதுடன் தரிசிப்பவர்கள்…… மேலானவர்கள்.

அய்யப்பனுக்கும், நம்பூதிமார்களுக்கும் இது புரியவேண்டும்!

Advertisements

One comment on “தெய்வம் என்றால் அது தெய்வம் , சிலை என்றால் அது சிலைதான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s