செல்போன் டவரும்- செல்போன் பவரும்!

“ஹலோ…. இந்தப் பக்கம் இசக்கிராசு பேசறேன், அந்தப் பக்கம் பேசறது யாரு?”

சோப்புப் டப்பா சைஸ்ல ஒரு கலர்ப் பொட்டியத் தூக்கிக் காதுக்கிட்ட வச்சுக்கிட்டு, எங்க ஊரு நால்ரோடு முழுக்கக் கேக்கற மாதிரி அவன் கத்திக் கத்திப் பேசினப்பத்தான்…..

இப்படிக் கூட ஒரு போனு இருக்குதான்னே அப்பத்தான் எங்களுக்கெல்லாம் தெரியும். ஆனாலும், அது மேல முழு நம்பிக்கை அப்போ எங்களுக்கு வரல்லே.

வீட்டில ஒயர் கனெக்சனோட இருக்கிற போனே ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குது.. இதுக்கு ஒயரும் இல்லே, ஒண்ணும் இல்லே…. என்னத்தப் பேசப்போகுது? எல்லாம் பட்டணத்துக்காரனோட ஏமாத்துவேலை என்றுதான் நினைக்கத் தோணுச்சு.

பேசுதுன்னாக்கூடப் பரவாயில்ல, நம்பலாம். படமும் எடுக்கும், பாட்டும் பாடும், தபாலும் கூட அனுப்பும்கிறானே….. அவுத்து உடறதுக்கும் ஒரு அளவு வேணாமா?

பஞ்சாயத்துப் பைப்பில தண்ணி பிடிச்சுக்கிட்டிருந்த பவளக்கொடியைப் படம் பிடிச்சுக் காட்டி எங்களை நம்பவச்சான்.

என்னென்னமோ சினிமாப் பாட்டுக்களைச் சத்தமாப் பாடவிட்டு, இப்போ நம்பறீங்களான்னு கேட்டான்.

உங்க வீட்டுப் போன் நம்பரைச் சொல்லுன்னு கேட்டு, கவிதா வீட்டுக்குப் போன் செஞ்சு அவளோட அம்மாகிட்டப் பேசியும் காட்டினான்.

இப்படித்தான் எங்களுக்கெல்லாம் அந்த செல்போன் விநோதமாக அறிமுகமானது.

ஆனா, இன்னைக்கு?….. ஒரு நிமிஷம் செல்போன் இல்லேன்னாக்கூட உயிரே போயிரும்போல இருக்குது.

செல்போன் இல்லாத இடமும் இல்லை, ஆளும் இல்லைங்கிற அளவுக்கு நிலைமை தலைகீழா மாறிப்போச்சு.

அதிலும் இந்த ஸ்கூல் பொண்ணுங்க இருக்காங்களே…. அடேங்கப்பா….. அப்படி என்னதான் பிஸினஸ் பேசுவாங்களோ தெரியல. எப்பப் பாத்தாலும் போனும் காதுமாவே இருக்காங்கப்பா.

ஒரு நாளைக்கு 200 மெசேஜுக்கு மேல அனுப்பக் கூடாதுன்னு டிராய் சொன்னப்ப….. என்னமாக் கோவிச்சுக்கிட்டாங்க?

எப்படியோ எவனோ ஒருத்தன் வலையில விழுந்திடறான். ரீசார்ஜ்க்கும் பிரச்னையில்ல. அவனோட காசிலேயே அவன்கிட்டேயும் பேசிக்கலாம், அடுத்தவன்கிட்டேயும் பேசிக்கலாம்.

மாவு அரைக்கிறதுக்கு அரிசியா கிடைக்க மாட்டேங்குது? அப்புறம் இட்லி சுடறதுக்கு என்ன கஷ்டம்?

பொண்ணுங்கதான் அப்படின்னா….. பசங்க மட்டும் என்ன சும்மாவா? அதை வச்சுக்கிட்டு அவங்க அடிக்கிற லூட்டி இருக்கே, சொல்லி மாளாது.

போன் அழைப்பு அவனுக்கு வந்தாலும், அது போடுற சத்தம் மொத்த ஊருக்குமே கேட்கும். என்னென்ன ரிங் டோன், எவ்வளவு சவுண்டு? எங்கேதான் அந்த ரிங் டோனையெல்லாம் இறக்குமதி பண்னுவாங்களோ தெரியலை.

பஸ்சுல போகும்போது பலரும் பார்த்திருக்கலாம்…. பஸ்சுக்காரங்க டி.வி.யில போடற பாட்டுச் சத்தத்துக்கும் மேல, இவங்களோட செல்போன்ல இருந்து பாடுகிற சத்தம் தூக்கியடிக்கும்.

இதுல பலான படம் வேற பாஸ் ஆகுதாம்……

பால்காரர்ல இருந்து வெறகு பொறுக்கற பாட்டி வரைக்கும்…… எல்லோருமே ஹலோ ஹலோன்னு கத்திக்கிட்டேதான் சுத்துறாங்க.

கஞ்சிக்கு வழியிருக்கோ இல்லையோ, கையில செல்போன் இல்லேன்னா….. கௌரவக் குறைச்சல்னு ஆகிப்போச்சு.

எது எப்படியோ…. உலக அளவுல மொபைல் போன் பயன்படுத்தறவங்க வரிசையில, இந்தியா நாலாவது இடத்தில இருக்காம்.

என்னமோ போங்க….. செல்போன் டவர்னால சிட்டுக்குருவி இனமும், செல்போன் பவர்னால மனித இன்மும்- ஸ்பாயில் ஆகிக்கிட்டு இருக்குதுன்னு புள்ளிவிவரம் சொல்லுதாம். பாத்து நடந்துக்கோங்க!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s