எல்லாம் நம்மோட தலை எழுத்து!

நினைவிலிருந்து விலகிக் கிடக்கிற சில விஷயங்களை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருகிற பொழுது……

அரசியல் கசக்கிறது. அரசியல்வாதிகள் மீது வெறுப்பு வருகிறது. இவ்வளவு கேவலமானவர்களா இவர்கள்? என்று எட்டி உதைக்கத் தோன்றுகிறது.

இந்த மண்ணில்தான்…..

உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த கக்கன் என்ற மாமனிதர், பதவி விலகிய மறுகணம் சென்னை மாநகரப் பேருந்தில் வீடு திரும்பினார்……

அவர் நோய்வாய்ப் பட்டபோது, மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் கீழே பாயில் படுத்திருந்ததைப் பார்த்த எம்.ஜி.ஆர். பதறிப்போய் நல்ல வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்……

பிரதமர் பதவியிலிருந்து விலகியபோது, கோட்டையிலிருந்து வீடு செல்வதற்குக்கூடத் தனது அரசு வாகனத்தைத் தவிர்த்து டாக்சியில் சென்றார் ராஜாஜி…..

பதவி விலகியபிறகு, மும்பையில் தன்னால் சரியாக வாடகைகூடக் கொடுக்கமுடியாத சிறு அடுக்குமாடிக் குடியிருப்பில், தனது துணிகளைக் கூட தானே துவைத்து எளிய முறையில் வாழ்ந்தார் மொரார்ஜி…..

எளிமையான அரசியலுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய கர்மவீரர் காமராசர்…..

இவை எல்லாவற்றையும் நாம் எளிதாக மறந்துவிட்டு, ஓட்டுக்குத் துட்டு வாங்க ஆரம்பித்துவிட்டோம்.

இப்போது இன்னொரு செய்தி…..

நாட்டின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஒரு பங்களா கட்டப்பட்டு வருகிறதாம். அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அங்கு சென்று தங்க முடிவு செய்துள்ளாராம்.

இந்நிலையில், அவருக்கு விதிமுறைகளின்படி ஒதுக்கப்படவேண்டிய நிலத்தை விட, ஆறு மடங்கு அதிகமாக ராணுவ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

புனே நகரில் காட்கி கன்டோன்மென்ட் பகுதியில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, இரண்டு லட்சத்து 61 ஆயிரம் சதுரடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, அவர் பங்களா கட்டி வருகிறார். அவருக்கு அரசு விதிமுறைகளின்படி, 4,500 சதுரடியில், அரசு பங்களாவோ அல்லது 2,000 சதுரடியில் அரசு வழங்கும் வாடகை வீடோதான் வழங்கப்படவேண்டும்.

ஆனால், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக, ஆறு மடங்கு அளவில் ராணுவ நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு, முன்னாள் ராணுவத்தினர் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் போதுமான நிலம் இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு மட்டும் இப்படி அநியாயமாக நிலம் ஒதுக்குவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதன் முதலாக ஒரு பெண் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து பதவியை அலங்கரிப்பார் என்று நினைத்தோம். ஆனால், இவர் மரபை மீறித் தனது பதவியை மிகவும் கேவலமாக நாறடித்துக் கொண்டு இருக்கிறார்.

உடை, புத்தகம் என இரண்டே இரண்டு சூட்கேசுகளுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறிய அப்துல் கலாமுக்குப் பதிலாக….. இப்படிப்பட்ட ஒரு நில அபகரிப்பாளரைத் தேடிப்பிடித்து நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

தகுதி இல்லாதவர்களை எல்லாம் தலைமைப் பொறுப்பில் வைத்தால் இப்படித்தான் நடக்கும். தகுதி அற்றவர்கள் பதவியில் ஒட்டிக்கொள்ளும் போது அவர்கள் நேர்மையாக நடந்து கொள்வது இல்லை தங்களின் எஜமானர்களைத் திருப்தி படுத்துவதுதான் அவர்களின் முதல் வேலை.. அதைப் பூர்த்தி செய்த பின், தனக்கான கொள்ளையைத் தொடர்வார்கள். இது பிரதிபா விஷயத்தில் நன்கு பொருந்தும்.

நம்ம நாட்ல இந்த ஜனாதிபதிகளால ஏதாவது ஒரு மயிரளவாவது நன்மை இருக்கா??? தெரிஞ்சவங்க சொல்லுங்க?

நாட்டில் முதல் குடிமகன்னு சொல்றாங்க ஆனால், அவர்களால சுயமாக ஒரு அறிக்கை விடக்கூட யோக்கியதை இல்லை. வெறும் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை மாதிரி ஆட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு எதுக்கு இந்தப் பதவி?

சும்மா ஊரு சுத்திப்பாக்க மட்டுமா இந்தப்பதவி? இந்தத் தடவை இந்தியாவிலிருந்து அதிகமான முறை வெளிநாடு சுற்றிப்பார்க்கப் போனவர்களில் இவங்கதான் முதலிடம்.

குடும்பம் குட்டியென நூறுபேர் புடை சூழ, பல நாடுகுளுக்கும் சென்று ஜாலியாக இவர் சுற்றிப்பார்க்க ஆன செலவு இதுவரை 220 கோடி……

எத்தனை கேள்விகள் கேட்டாலும், இந்த ரோஷம் கெட்ட ஜென்மங்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் பங்களா கட்டிக் கொண்டுதான் இருக்கும்……..

புதுசாக் குடி போகும்போது ஏதாவது சோறு கீறு போடுவாங்களான்னு நாமும் பார்த்துக்கொண்டுதானிருப்போம்…….

எல்லாம் நம்மோட தலை எழுத்து.

Advertisements

4 comments on “எல்லாம் நம்மோட தலை எழுத்து!

 1. // நாட்டில் முதல் குடிமகன்னு சொல்றாங்க ஆனால், அவர்களால சுயமாக ஒரு அறிக்கை விடக்கூட யோக்கியதை இல்லை. வெறும் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை மாதிரி ஆட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு எதுக்கு இந்தப் பதவி? //

  என்னாப்பா நடக்குது நாட்டுல …! ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு இவ்வளவு செலவா ?
  லோக்பால் இல் ஜனாதிபதியையும் , கவர்னர்களையும் சேர்த்து கொள்ளனும்
  அப்பத்தான் இதுக்கெல்லாம் வழி பிறக்கும் ..

 2. ஊருக்கும் வெட்கமில்லை
  இந்த உலகுக்கும் வெட்கமில்லை
  யாருக்கும் வெட்கமில்லை
  இதிலே அவருக்கு வெட்கமென்ன?

  எங்கேயாவது மனிதன் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்
  இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்

  ———கண்ணதாசன்.

 3. தகுதி இல்லாதவர்களை எல்லாம் தலைமைப் பொறுப்பில் வைத்தால் இப்படித்தான் நடக்கும். தகுதி அற்றவர்கள் பதவியில் ஒட்டிக்கொள்ளும் போது அவர்கள் நேர்மையாக நடந்து கொள்வது இல்லை தங்களின் எஜமானர்களைத் திருப்தி படுத்துவதுதான் அவர்களின் முதல் வேலை.. அதைப் பூர்த்தி செய்த பின், தனக்கான கொள்ளையைத்
  தொடர்வார்கள். இது பிரதிபா விஷயத்தில் நன்கு பொருந்தும்.

  ithu ellaa arasiyalvaathikaLukkm porunthum . nanbarin “rouththiram” nanku purikiRathu. ellorukkum intha uNarvu varavendum

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s