விடை கிடைக்க வழியில்லாமல் விழி பிதுங்க வைக்கும் கேள்விகள்!

Encounter…..

இந்த ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தையை
அகராதியில் பல நாட்களாகத் தேடியும்…..

கிடைத்த வார்த்தையில் எனக்குத் திருப்தியில்லை.

இப்போது சரியான வார்த்தை கிடைத்துவிட்டது…..

அநியாயப் படுகொலை!

—————————————————–

இந்த என்கவுண்டரில்…… விடை கிடைக்க வழியில்லாமல் விழி பிதுங்க வைக்கும் கேள்விகள்!

* இரவு 12 மணிக்குத்தான் தகவல் கிடைத்தது எனப் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களோ இரவு 10 மணிக்கே போலீசார் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், அப்போதிலிருந்தே சாலைகளில் ஆங்காங்கே நின்றிருந்தவர்களைப் போலீசார் அப்புறப்படுத்த உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

* வீட்டைப் போலீசார் சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும்,. அந்தச் சப்தம் கேட்டு பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் வந்ததாகவும், அதன் பின்புதான், பாதுகாப்பிற்காகக் கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அந்த வீட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்களில் சிலரோ, தங்களுக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

* கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டின் வெளியில் இருந்து ஜன்னல் வழியாகத்தான் போலீசார் சுட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், ஹாலில் உள்ள சுவரில் மட்டுமே குண்டு துளைத்ததற்கான இரண்டு சுவடுகள் காணப்படுகின்றன. வீட்டில் இருந்த டி.வி, வாஷிங் மெஷின் போன்றவற்றில் குண்டு துளைக்காதது ஏன்? சரமாரியாகத் துப்பாக்கிசூடு நடத்தும் போது, பல இடங்களில் குண்டுகள் தெறித்திருக்கும். ஆனால், அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

* சம்பவம் நடந்த வீட்டின் தரையில் மட்டுமே ரத்தகறைகள் உள்ளன. கொள்ளையர்கள் ரத்தகாயங்களுடன் அங்கும் இங்கும் துடித்திருந்தால் சுவரில் ஒரு சொட்டு ரத்தம் கூடவா பட்டிருக்காது? ஆனால், அப்படி எந்தத் தடயமும் அங்கு இல்லை.

* வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டுதான் வீட்டிற்குள் புகுந்தோம் என போலீசார் கூறியுள்ளனர். ஆனால், முன் கதவின் தாழ்ப்பாள் கூட உடைய வில்லையே… எப்படி?

* இரவு ஒரு மணிக்கு என்கவுண்டர் நடக்கும்பொழுது கூட, கொள்ளையர்கள் ஜீன்ஸ் பான்ட் மற்று ஷூ அணிந்து இருந்தார்களா??

இந்நிலையில்……

என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவிலும் அவர் இதுபோன்ற கடுமையான சந்தேகங்களையே சுட்டிக்காட்டியுள்ளார்….

“சம்பவம் நடந்த இடத்துக்கு நான் நேரில் சென்றேன். அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தேன். 22ம் தேதி இரவு 10 மணிக்கே போலீசார் வந்து, வீட்டுக்குள் இருக்குமாறும், கதவு மற்றும் ஜன்னல்களை மூடுமாறும், விளக்குகளை அணைத்துவிடுமாறும் கூறியதாகச் சிலர் தெரிவித்தனர்.

ஆனால், நள்ளிரவில்தான் சந்தேகப்படும் நபர்களைப் பற்றிய தகவல் கிடைத்ததாகக் கமிஷனர் கூறியுள்ளார். அந்தப் பகுதியை இரவு 10 மணிக்கே தங்கள் வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்து விட்டதாக, அப்பகுதி மக்கள் என்னிடம் கூறினர்.

வீடியோவில் காட்டப்பட்ட சந்தேகப்படும் நபர், வங்கியில் பொம்மைத் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். வீடியோவில் காட்டப்பட்ட நபரைப் போலவே,, வேளச்சேரி குடியிருப்புப் பகுதியில் வசிப்பவரும் உள்ளார் எனப் போலீசாருக்குத் தகவல் வந்துள்ளது.

இந்தத் தகவலை வைத்துக் கொண்டு, கொள்ளை வழக்கை விசாரிக்கும் எந்தப் பொறுப்பான அதிகாரியும், சந்தேகப்படும் நபர்களைக் கொல்வதற்கு முயற்சிக்க மாட்டார்கள்.

ஒரு குற்றத்தைப் புலன்விசாரணை செய்யப் போலீசார் விரும்பவில்லை. சந்தேகப்படும் நபர்களைக் கொல்லத்தான் நினைக்கின்றனர். இதைச் செய்து விட்டு, தற்காத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்ததாக கூறுகின்றனர்.

கொள்ளை வழக்கை சட்டப்படி விசாரிப்பதற்குப் பதில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் போலீசார் நுழைந்து, ஐந்து இளைஞர்களைக் கொன்றுள்ளனர். போலீசாருக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டடை நடந்ததாகக் கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த வீட்டில் இருந்த டிவி, வாஷிங் மெஷினில், குண்டு பட்டதற்கான தடயம் எதுவும் இல்லை.

சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி, அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் புகார் அனுப்பினேன். அவர்களே இவ்வாறு வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.”

இதுதான் மனுவின் சாராம்சம்.

இதுதவிர, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, ஊழல் மற்றும் அடக்கு முறைக்கு எதிரான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் ஏ.பி.சூரிய பிரகாசம், பொதுச்செயலர் அசோக் சக்ரவர்த்தி ஆகியோர் அனுப்பியுள்ள மனுவில்….

“நீதித்துறையின் அதிகாரத்தைப் போலீஸ் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஐந்து பேருக்கு போலீசார் மரண தண்டனை வழங்கியுள்ளனர்.

அந்த இளைஞர்களிடம் எந்த விசாரணையையும் நடத்தாமல், அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்காமல் கொன்றுள்ளனர். இது நீதித்துறையின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்கிற கருத்தைப் போலீசார் தெரிவிப்பது போல் உள்ளது.

குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறோம் என்கிற போர்வையில், யாரையும் போலீசார் கொன்று விடலாம் என்கிற முடிவு கண்டிக்கத்தக்கத்.. எனவே, இந்தக் கடிதத்தையே பொதுநல மனுவாகக் கருதி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் வெளியிட்டது ஒரு போட்டோ மட்டும்தான். அந்த அறையில், கூட இருந்தவர்கள் அப்பாவி உறவினர்கள் அல்லது ரூம் மேட் ஆகக் கூட இருக்கலாம். அவர்கள் எல்லோரையும் சுட்டுக் கொன்றது அநியாயம்……

ஒரு வீட்டுக்குள் அடைந்து கிடக்கிற ஐந்து பேரில், ஒருவரைக்கூட உயிருடன் பிடிக்கமுடியாத கையாலாகாத்தனத்துக்கு யார் பொறுப்பு? (கண்ணீர்ப் புகை, மயக்க மருந்து வீச்சு… போன்ற வியூகங்களை எப்போதுதான் இவர்கள் கற்றுக் கொள்ளப்போகிறார்கள்?)

“நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால்- ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்ற சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு….. சம்மட்டியால் அடித்து நொறுக்கப் பட்டிருக்கிறது!

நல்லவேளை 5 பேரோட போச்சுனு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான். அம்மா பிறந்த நாளுக்குக் காவல்துறையின் பரிசுன்னு சொல்லி 64 பேரைப் போட்டுத்தள்ளாம விட்டாங்களே….. அது ஒரு ஆறுதல்!

5 comments on “விடை கிடைக்க வழியில்லாமல் விழி பிதுங்க வைக்கும் கேள்விகள்!

 1. kindly visit the below site for face book likes,twitter followers,back links to your site & you tube likes at low cost…
  http://www.fullsocialfans.com.
  We offer guaranteed Facebook fan packages to kick start your Facebook marketing campaign.
  Whether you currently have zero fans or thousands of fans,
  Full Social Fans can send additional targeted and real fans to your fan page,
  increase your social proof and fan page activity.
  All real and targeted fans
  100% safe, manual methods
  See new fans in as little as 24 hours!
  No password or admin access required
  Weekly updates and support
  Guaranteed delivery or your money back!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s