எலி ஏன் அம்மணமாக ஓடியது?….

எலி ஏன் அம்மணமாக ஓடியது என்று இப்போது ஓரளவிற்குப் புரிந்து விட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரூ சிறப்புக் கோர்ட்டில் ஆஜரான சசிகலா….

ஜெயலலிதாவுக்குச் சொத்துக்குவிப்பில் அவ்வளவாகப் பங்கில்லை என்று பதிவு செய்திருக்கிறார்.

கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், அவ்வப்போது கண்ணீர் விட்டு அழுதும், கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்தவாறும் பதில் சொல்லியிருக்கிறார்.

எதை நினைத்து அவர் அழுதார் என்பதற்கான காரணம், அவரே சொன்னால் தவிர எவருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை.

ஆனாலும், அந்த அழுகைக்குள் அமிழ்ந்து கிடக்கிற அர்த்தங்கள்….. புரியவேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

விசாரணையின் போது ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த சசிகலா-

“ஜெயலலிதாவும், நானும் பங்குதாரர்களாக இருந்து வந்தது உண்மைதான். ஆனால், நிறுவனங்களை நான்தான் நிர்வகித்து வந்தேன். இதில் நடந்த விஷயங்கள் எதுவும் ஜெயாவுக்குத் தெரியாது.

இதில் அவ்வளவாக அவர் நாட்டம் காட்டியதும் இல்லை. இதற்கு நான்தான் முழுப்பொறுப்பாக இருந்தேன். சொத்து வாங்கிய விவரம் அவருக்குத் தெரியாது” என்று கூறியிருக்கிறார்.

நாங்க நம்பிட்டோம்….

மேலோட்டமாகப் பார்த்தால் இதன் அர்த்தம் புரியாது. ஆனால், சட்டரீதியாகப் பார்த்தால்….. சாமார்த்தியமான பதில் இது.

சில கேள்விகள் கேட்கப்பட்ட போது மனம் தளர்ந்த நிலையில் காணப்பட்டும், சில நேரங்களில் கண்களில் இருந்து வந்த கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டும், பரிதவிப்புடன் பதிலளித்திருக்கிறார்.

அடடா….. நட்பென்றால் இதுவல்லவோ நட்பு. பிசிராந்தையாரும் கோப்பெரும்சோழனும் கூட இவர்களிடம் இருந்தல்லவா நட்பைக் கற்று கொள்ள வேண்டும்?

இதையெல்லாம் பார்த்துவிட்டு, என்னதான் நடக்கிறது என்று தெரியாமலும், புரியாமலும்….. திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறார்கள் கழகக் கண்மணிகள்.

பலருடைய மனதுக்குள்ளும் பலவிதமான கேள்விகள்……

ஜெ.ஜெ..டி.வி-யின் மெகா சீரியல் ஆரம்பமாகி விட்டதா?

அல்லது, எல்லாமே பாட்டி சொல்லிக் கொடுத்த மாதிரியேதான் போயிக்கிட்டு இருக்கா?.

கேக்கறவன் கேனையனாக இருந்தால்… எருமை எரோப்ளேன் ஓட்டறேன் என்று சொல்லுமாம்……

இந்த வழக்கு எத்தனை வருசமா நடக்குது? இதை ஆரம்பதிலேயே சொல்லிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே?

இதைச் சொல்ல உங்களுக்கு 11 வருடங்களா? இதை ஏன் நீங்கள் ஜெயலலிதாவுடன் இருக்கும் போதே சொல்லவில்லை?

நான் அடிக்கற மாதிரி அடிப்பேன், நீ அழற மாதிரி அழு என்பது இதுதானா?

அப்படியே ஜெயலலிதாவுக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது என்றாலும், அவர் பெயரை உபயோகதித்துத்தானே சொத்துக்களை வாங்கியிருப்பீர்கள்?

இது எதுவுமே தெரியாமலா இவ்வளவு வருடங்கள் ஒருவர் இருப்பார்? தனது வீட்டில் நடப்பதையே தெரிந்து கொள்ளாமல், ஆர்வம் காட்டாமல் இருக்கும் ஒருவர் எப்படித் தமிழகத்தில் நடப்பதைத் தெரிந்து கொள்வார்?

சசிகலாவிடம் நாம் கேட்க விரும்புவதெல்லாம்…..

ஜெயலலிதா யாருன்னாவது உங்களுக்குத் தெரியுமா மேடம்?

(சசிகலாவின் வாக்குமூலத்துக்கும், நடராஜனின் கைதுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கவேண்டாம்).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s