காதல்….. சிகரெட் வாங்கறதவிட ரொம்பச் சின்ன விஷயமா?

இதோ…. காதலர் தினம் வந்தாச்சு.

லவ் பண்ணறவங்க, பண்ணப் போறவங்க……. எல்லோரோட இதயமும் எகிறிக் குதிச்சுக்கிட்டிருக்கும்.
எங்கெங்கே எல்லாம் சுத்தலாம்னு பிளான் பண்ண, இந்நேரம் ஒரு பெரிய பிரளயமே நடந்து முடிஞ்சிருக்கும்.

கடற்கரை, பூங்கா, காதலுக்கு சப்போர்ட் பண்ணற நண்பர்களோட வீடு,, ஒருத்தரும் எட்டிப்பாக்காத சந்து பொந்து, சினிமாத் தியேட்டர், உல்லாசவிடுதிகள்……. இப்படி எல்லா இடங்களும் அலசப்பட்டிருக்கும்.

யாராவது சிலர்மட்டும் கோயில் குளம்னு நினைச்சுப் பாத்துருப்பாங்க.

அப்பா பாத்துருவாரோ, அண்ணன் வந்திடுவானோ, யாராவது எக்குத்தக்காப் பாத்துட்டு வீட்டுக்குச் சொல்லிடுவாங்களோ?….
இப்படி எத்தனை பய உணர்ச்சிகளை எல்லாம் தாண்டித் திட்டமிட வேண்டியிருக்கிறது.

இதுல இன்னொரு பெரிய கஷ்டம் என்னன்னா…. காதலர் தினம் செவ்வாய்க் கிழமை நாளாப்பாத்து வந்துருச்சு. காலேஜு பள்ளிக்கூடம்னு கட் அடிக்கிற வேல வேற சேந்துருச்சு. இது ஒரு பெரிய ரோதனை.

பசங்களாவது பரவாயில்லை, எதையோ சொல்லி, எப்படியோ சமாளிச்சுக்கிடலாம். பொண்ணுங்களோட நெலமைதான் ரொம்பப் பாவம்.
ஆனாலும், பயந்து பயந்து ஒருவிதப் பதட்டத்தோடு செயல்படற த்ரில்லே தனி சுகம்தான்..

அதுசரி… காதல்னா சும்மாவா? இது கூட இல்லாட்டி அதுக்குப்பேரு காதல்னு எப்படி சொல்றது?

எங்க காலத்துல இப்படியெல்லாம் காதலர் தினம்னு ஒண்ணு இல்லாம போச்சேன்னு வருத்தமாவும் இருக்கு.

இத்தனை வருஷமாகியும், இதுவரை ஒரு காதலர் தினம் கூடக் கொண்டாட நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்பதை நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

சுதந்திர தினம், குடியரசு தினம்னு சொல்லிச் சொல்லியே எங்க காலம் ஓடிப்போச்சு. இப்பத்தானே என்னென்னமோ தினமெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க.

அன்னையர் தினம், நண்பர்கள் தினம், ஏன்…. எய்டஸ்சுக்குக் கூட ஒரு தினம்னா பாருங்களேன்.

அதே நேரம், இன்னொரு திசையிலிருந்து எழுகிற எதிர்ப்பலைகளையும் நாம் எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

நமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, கட்டுப்பாட்டைச் சீரழிக்கத்துடிக்கும் – இறக்குமதியான ஒரு கருமத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

பாலுணர்வை மட்டுமே மையமாக வைத்துக் கொண்டாடப்படும் இந்தக் காதலர் தினம் தேவைதானா?
ஏற்கனவே கெட்டுக் குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கும் இளசுகளுக்கு, இது இன்னொரு வாய்ப்பாகி விடாதா?

இப்படியும் சில கேள்விகள்….

பாரதம் போற்றியதாகச் சொல்லப்படும் பன்பாட்டை விட்டுப் படிதாண்டி….. நீண்ட நாட்களாகிவிட்டது.

பத்தாவது படிக்கும்போதே கழிவறையில் சென்று பிள்ளை பெற்றுப் போடும் அளவிற்கு, மாணவிகளில் ஒரு பகுதி இங்கு தயாராகிவிட்டது.

கடலை மிட்டாய் வாங்கித் தின்பது போல, உடலைப் பரிமாறிக் கொள்வது கூட இங்கு எளிதாகி விட்டது.

அப்போதெல்லாம் காதல்ங்கிறது கைக்கெட்டாத பெரிய விஷயமா இருந்தது. ஆனா….  இப்போ அது சிகரெட் வாங்கறதவிட ரொம்பச் சின்னவிஷயமாகிப் போச்சு.

பள்ளிகூடம், காலேஜ்ல நடக்கறதெல்லாம் பாத்துப்பாத்து மரத்துப்போச்சு மனசு.
வயசுக்கு வரதுக்கு முன்னாடியே வலைய வீசுதுங்க… அல்லது வலையில விழுதுங்க.
பசங்களபத்திக் கேக்கவே வேணாம். என்னமா ஜல்ஜா வேலையெல்லாம் பண்றாங்க. கேட்டா… கேர்ள்பிரண்டாம்….பாய்பிரண்டாம். ம்ம்….என்னத்தச் சொல்ல?

நல்ல நாளும் அதுவுமாகவே மெரீனா கடற்கரையில் எல்லாக் கன்றாவிகளையும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
ஓரங்கட்டுதலும், உரசுதலும், கொஞ்சிக் குலவுதலும், கூத்தடித்தலும் என எல்லாமே நடக்கிறது….. குழந்தை பெறுவது ஒன்றைத்தவிர!

காதலர் தினத்தன்று கேட்கவே வேண்டியதில்லை…. என்னென்ன கூத்தெல்லாம் நடக்குமோ?

இன்றைய காதல்……
“பஸ் டிக்கெட்டில் முன்னுரை எழுதி, சினிமா டிக்கெட்டில் நிலைகொண்டு, ஓட்டல் பில்லில் நிறைவாகி, மருத்துவ பில்லோடு முடிவடைகிறது” — என்று நச்சுன்னு அடித்திருக்கிறார், சென்னை மாநிலக் கல்லூரியின் பேராசிரியர் சேக்மீரான்.

அதுமாதிரியே…..
நம்ம நடிகை திரிஷாவோட கருத்துலயும் ஞாயம் இருக்குங்கிறதை நாம ஏத்துக்கத்தான் வேணும்.

“பொதுவா, நல்ல… உண்மையான காதலர்களுக்கு எல்லா நாளும் வாலன்டைன்ஸ் டேதான். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவங்கவங்க பிளாட்பாரத்தில படுத்துக்கிட்டு, ஒருவேளை சாப்பாடு, தண்ணி கூட இல்லாம கஷ்டப் பட்டுக்கிட்டிருக்காங்க.

இதுல காதலர் தினத்தை வேறு தனியாக் கொண்டாடனுமா?… இது மக்களோட கோபத்தைத்தான் கிளறும். என்னைப் பொறுத்தவரை காதலர் தினமெல்லாம் வீணான வேலைதான்…!”

எங்கே பொண்ணுங்களா….. லவ் கிவ் பண்ணி பசங்கள ஏமாத்தினவங்க மட்டும்

கையத் தூக்குங்க பாக்கலாம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s