இருட்டுல ஏதோ இலவசமா தராங்களாம்….. போய் வரிசையில நில்லுங்கப்பா!

இனிமேல் நமக்கு……
எட்டு மணிநேரம் பவர் கட்டாம்!

வாக்களித்த மக்களுக்கு
வாய்க்கரிசி போடாமல்…..
அரசாங்கம் ஓயாதா என்று
அலறுகிறார்கள் குடிமக்கள்.

காணாமல் போய்விட்ட
கரண்டுத்துறை அமைச்சரைக்
கண்டுபிடிக்க முடியாமல்
கவர்மெண்டே தடுமாறும்போது….

பாவம்-
யாரைக் குறை சொல்ல?

வாக்காளப் பெருமக்களே!

பஸ் கட்டனத்தை
உயர்த்தினாங்க…..
பொறுத்துக்கிட்டீங்க!

பால் விலையை
உயர்த்தினாங்க……
பொறுத்துக்கிட்டீங்க!

மின் வெட்டை
உயர்த்தினா மட்டும்…..
ஏன் கோபப்படறீங்க?

எதையுமே இருப்பதைவிடக்
குறைச்சாத்தானே…..
கோபப்படனும்?

பரிட்சை வருதே,
படிக்க முடியலையேன்னு…….
பசங்க கோப்பபடறாங்க!

உருப்படியா ஒருமணி நேரம்கூடத்
தண்ணிபாய்ச்ச முடியலையேன்னு…..
உழவர்கள் கோப்பப்படறாங்க!

உற்பத்தியும் நின்னுபோச்சு
ஒண்ணுமே பண்ண முடியலையேன்னு…..
தொழிலதிபர்களும் கோப்பப்படறாங்க!

இருட்டுக்குள்ளே குழந்தையை வச்சுக்கிட்டு
எந்த வேலையையும் செய்யமுடியலேன்னு…..
வீட்டுப்பெண்களும் கோப்பப்படறாங்க!

——–

ஆனா…..
என்னோட கோபம் நியாயமானது.

எட்டு மணி நேரம் கட்டுன்னு சொன்னா…..
இனிமேல் டாஸ்மாக்ல கூலிங் பீரே கிடைக்காதா?

என்ன கொடுமை சார் இது?
எப்படி இதை ஏற்றுக்கொள்வது?


அம்மா புரட்சித்தலைவித் தாயே!

மூன்று மணி நேரம் பவர் கட் என்றுதானே
மு.க. ஆட்சியயையே மாற்றினோம்……

எட்டு மணி நேரம் பவர் கட் என்றால்
என்ன தண்டணை தரலாம்?

———–

உங்களுக்குக் கோபம் வந்தால் மட்டும்……
மாதம் ஒருமுறை மந்திரிசபை மாற்றம்!

ஆனால்-

எங்களுக்குக் கோபம் வந்து
என்ன ஆகப்போகிறது?
அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதானே
ஆட்சி மாற்றம் செய்ய முடியும்?

———————

அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில்……

அரசின் அரசாங்க முத்திரையில் இருக்கும்
கோபுரச் சின்னத்தை எடுத்து விட்டு,
அரிக்கேன் விளக்கை மாற்றுவதற்கு
அவசரச் சட்டம் இயற்றுங்கள்.

சிச்சுவேசன் சாங் போல….
சிச்சுவேசன் முத்திரையாக நச்சுன்னு இருக்கும்!

4 comments on “இருட்டுல ஏதோ இலவசமா தராங்களாம்….. போய் வரிசையில நில்லுங்கப்பா!

  1. ஷெரிப்பின் பாராட்டுக்கு நன்றி!

    மகேந்திரன் அவர்களின் பதிவிற்கும் நன்றி!

    லல்லுவின் லொள்ளோடு கேள்வி கேட்டிருக்கும் சூர்யஜீவாவிற்கும் மிக்க நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s