சட்ட சபையா? கட்டில் அறையா?

பரபரப்புக்குக் கர்நாடகாவில் எப்போதுமே பஞ்சமிருக்காது போல் தெரிகிறது.

இந்த வாரத்துப் பரபரப்பு…… பலான படம் பார்த்த பரவசத்தில் பதவியிழந்த அமைச்சர்கள்.

கர்நாடக சட்டசபைக் கூட்டத்தில், நேற்று மதியம், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, “பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது’ என ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த விவாதத்தைக் கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஓடிய ஆபாசப் படத்தை மிகவும் ஆர்வமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாராம். (யார் நடிச்ச படம் சார்?)

பலான படம் அல்லவா? அவர் மட்டும் பார்க்காமல், அவருக்கு அருகிலிருந்த பெண்கள் நலத்துறை அமைச்சர்(??????) சி.சி.பாட்டீல் , கிருஷ்ணபாலேமர் ஆகிய இருவருக்கும் காட்ட, அவர்களும் உற்சாகமாக ரசித்துப் பார்த்தனராம். (நம்ம ஊர் எம்.எல்.ஏ.க்களுக்குக் கொடுத்த மாதிரி லேப்-டாப் கொடுத்திருந்தா…. பெரிசு பெரிசாப் பார்த்திருக்கலாம்) 

இதை அங்கிருந்த கன்னட “டிவி’ சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பி…. பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டன.

இதுகுறித்து, முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிடுகையில், “அமைச்சர் ஆபாசப் படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகும். அமைச்சர் லட்சுமண் சவதி, இனிமேலும் அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன பதில் சொல்லப்போகின்றனர், என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்று முதல் நெருப்புத்துண்டை எடுத்து வீசினார்.

அமைச்சர் லட்சுமண் சவதி குறிப்பிடுகையில், “மொபைல் போனில் ஆபாசப் படம் எதுவும் நான் பார்க்கவில்லை. என்னிடம் இருந்தது என் மொபைல் போனல்ல. நான் பார்த்தது டாக்குமெண்ட்ரி படம். அமைச்சர் கிருஷ்ண பாலேமர், இந்த மொபைல் போனை என்னிடம் கொடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன, பாருங்கள் என்று என்னிடம் கொடுத்தார். கிருஷ்ண பாலேமருக்கு யாரோ அவரது மொபைல் போனுக்கு “எம்.எம்.எஸ்.,’ அனுப்பியுள்ளனர்” என்றார்.

(என்ன விளக்கம் இது விளக்கெண்ணை விளக்கம்? தப்பு செஞ்சா மட்டும் போதாது… சமாளிக்கவும் தெரியவேணாமா? கட்டுரையோட கடைசியில நான் கொடுத்திருக்கேன் பாருங்க விளக்கத்தை. அதையே சப்பநாயர்கிட்டேக் கொடுத்திடுங்க. ராஜினாமாவெல்லாம் வேணாம்).

இச்சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், 3 அமைச்சர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது.

அரசியல்வாதிகளைப் பொருத்தவரை, அவர்களுக்கு ஆபாசம் என்பது ஒன்றும் புதிதும் அல்ல, வெட்கப்பட வேண்டிய விஷயமும் அல்ல.

கவர்னர் மாளிகையிலேயே அழகி மசாஜ் பண்ணிக்கொண்ட காங்கிரஸ் திவாரி முதல்….. கட்சிப் பாகுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல், எல்லோருமே இதில் அடக்கம்.

எனவே, இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மாறாக, இதற்கு மாற்று வழி ஏதாவது இருந்தால் யோசித்துப் பார்க்கலாம்.

சட்டசபை உறுப்பினர்களை அவ்வபொழுது குஷிப்படுத்தவும், சோம்பல் முறிக்கவும்– நிகழ்ச்சிகளின் இடையிடையே….. “மானாட மயிலாட” பாணியில் சில கேர்ள்ஸ்களை கொஞ்சநேரம் ஆடவிடலாம்…. அரசவை நடனங்கள் என்பது நமது நாட்டுப் பாரம்பரியத்துக்கு உட்பட்டதுதானே?

எவ்வளவு நேரம்தான் வெறும் பேச்சை மட்டுமே கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பது? விளங்காத விஷயத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராமல், போரடிக்காமல் என்ன செய்யும்?

நல்லவேளையா…. ரொம்பப் போரடிக்குதுன்னு ரெண்டு குட்டிகளைத் தள்ளிக்கிட்டு வந்துடாம விட்டகளே….. அதுவரைக்கும் சந்தோஷம்னு போறதை விட்டிட்டு, நடவடிக்கை அது இதுன்னு கத்திக்கிட்டு?

அவங்க என்ன செக்ஸ் படமா பார்த்தாங்க? இல்லையே…..

அந்த அமைச்சர் பெண்கள் நலத்துறை அமைச்சர் என்பதால்…..

பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது குறித்து சட்டசபையில் விளக்கிப் பேசுவதற்காக, தனது செல்போனில் ஆதாரமாகப் பதிவு செய்து வைத்திருந்த பலான படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

தான் சார்ந்த துறை மீது இவ்வளவு அக்கறையோடு செயல்படும் ஒரு அமைச்சரை நாடு இழந்துவிட்டது என்பதுதான் உண்மை.

அய்யா லட்சுமண் சவதி சார்…..

எப்படிச் சாமர்த்தியமாகப் பாய்ண்டைத் திருப்பிப் போட்டிருக்கேன் பாருங்க.

உங்களுக்காக நீதிகேட்டு வாசகர் மன்றத்தில் வாதாடிவிட்டேன், வக்கில் பீசை உடனே அனுப்பிவையுங்க சார்.

அடிக்கடி இனிமே இப்படியெல்லாம் ஏதாவது பண்ணிக்கிட்டே இருங்க சார்…… இல்லேன்னா மக்கள் உங்களைச் சீக்கிரம் மறந்திடுவாங்க.

2 comments on “சட்ட சபையா? கட்டில் அறையா?

  1. இப்படி யோசிக்க ஆரம்பித்தால்….. எல்லாமே மனிதனுடைய சுபாவம்தான்!

    இடம், பொருள், ஏவல் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டீர்களா? நண்பர் மகேந்திரன் அவர்களே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s