வெண்டைக்காய் அல்வாவும், விளக்கெண்ணை அரசியலும்!

எப்போது நடக்கும் இந்தச் சம்பவம் என்று எல்லோரும் எதிபார்த்திருந்தது போலவே…..

சட்டசபையில் இன்றைக்கு அந்தச் சம்பவம் அரங்கேறிவிட்டது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே காரசாரமான விவாதம், கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் என சட்டமன்றம் சூடாகிவிட்டது.

பால் விலை உயர்வு மற்றும் பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்ப…..

விலை உயர்வு குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதே என முதல்வர் பதிலளித்திருக்கிறார்.

இந்த விலையேற்றத்தை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரே செய்திருக்கலாமே என்று மீண்டும் சந்திரகுமார் கேள்வி எழுப்ப….

இதற்குப் பதிலளித்த முதல்வர், விலை ஏற்றத்திற்குப் பின்னர்தானே சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் எனக் கூறினார்.

அப்போது எழுந்து பேசிய விஜயகாந்த், இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதானே எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர், தே.மு.தி.க.விற்குத் தனித்துப் போட்டியிடத் திராணி உள்ளதா எனக் கேள்வி எழுப்பி….. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க., டெபாசிட் இழந்ததையும் நினைவுபடுத்தினார்.

இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருந்த போது, சட்டசபையில் இரு தரப்பிலுமே கைநீட்டிப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் உத்தரவுப்படி, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,க்களையும் சபைக் காவலர்கள் அவையிலிருந்து வெளியேற்றினர்.

இதற்குப் பின்னர் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வெட்கப்படுகிறேன். விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி வைக்காமலே அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அவர்கள் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததால்தான் தே.மு.தி.க,வுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது எனக் கூறினார்.

உள்ளே வர முடியாதவர்களை வரவழைத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்பதை மறந்து விடாதீர்கள் என்று ஓ.பன்னீர்செலவமும் தனது பங்குக்கு ஓதிவிட்டு அமர்ந்தார்.

வாக்களித்த மக்கள் அனைவரும் வாயைப் பிளந்துகொண்டு இந்த மாதிரியான காமெடிக் காட்சிகளை ரசிப்பது தவிர வேறுவழி தெரியவில்லை.

எதிர்க்கட்சி என்ற முறையில் எந்த எம்.எல்.ஏ. கேள்வி கேட்டாலும், பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டியதுதான் பொறுப்பான ஒரு முதல்வரின் கடமையே தவிர, அதை விட்டுவிட்டு…. வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்றெல்லாம் பேசுவது….. நாகரிகமானதாகத் தெரியவில்லை.

இவர்களுக்கெல்லாம் வாக்களித்து விட்டு, இங்கு மக்கள்தான் வெட்கப்பட்டுக்கொண்டும், வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்….

தனித்துப் போட்டியிட வேண்டாம் என்று உங்களிடம் யார் அழுதார்கள்? அப்போதெல்லாம் விடிய விடியப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு….. இப்போது வந்து என்னால்தான் எல்லாமே நடந்தது என்று சவடால் அடிப்பது எந்தவகையில் சரியானது என்று தெரியவில்லை.

விபச்சாரத்திற்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று தெரியவில்லை.

ஆட்சியிலமர்ந்து ஆறுமாத காலம் தாண்டியும்கூட, ஒழுங்காக இன்னும் ஒரு மந்திரிசபையை அமைக்க முடியவில்லை. மாதம் ஒருமுறை மந்திரிசபை மாற்றம். போகிற போக்கைப் பார்த்தால், மந்திரிக்கு ஆள் பஞ்சம் வந்துவிடும் போலிருக்கிறது.

எப்போதுமே ஜெயலலிதா தகுதிக்கு மரியாதை கொடுப்பது இல்லை. நமக்குத் தெரிந்து, தகுதியை வைத்து அம்மா தேர்வு செய்த மனிதர்களில்- சென்னை மேயர் சைதை துரைசாமி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்.

ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை, சில சமயங்களில் வியக்கவைக்கும். ஆனால், அவருடைய தலைக்கனமோ, பல சமயங்களில் வியர்க்கவைக்கும்.

தகுதி இல்லாதவர்களுக்குப் பெரிய பதவி கிடைத்தால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்கிற முதல்வர்….. அதற்கு முன்னதாக, அவரைச் சுற்றியுள்ள அமைச்சர் பெருமக்களைப் பார்த்துவிட்டு இந்த வார்த்தைகளைச் சொன்னால் நன்றாக இருக்கும்.

தகுதி இல்லாதவர்களுக்குப் பெரிய பதவி கிடைத்தால் இப்படித்தான் இருக்கும் என்று….. நாங்கள்தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும்.

Advertisements

3 comments on “வெண்டைக்காய் அல்வாவும், விளக்கெண்ணை அரசியலும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s