மாத்தி யோசி….. ஷு விலை ரொம்ப ஜாஸ்தி!

உத்தரகண்ட் டேராடூனில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி மீது கிஷன்லால் என்ற வாலிபர் ஷூவை வீசியிருக்கிறார்.

அமெரிக்காவின் ஸ்டைல் அங்கிருந்து இந்தியாவிற்கும் இறக்குமதி ஆகிவிட்டது. உலகம் முழுவதும் உணர்வுகள் ஒன்றுதானே.

சும்மா சும்மா இந்த அரசியல்வாதிகள் மீது ஷூவை வீசி……. சே…. அந்த ஷூ வுக்குன்னு இருந்த மரியாதையே போயிடுச்சு.

என்னைக்கு அந்த அரபுக்காரன் தன் ஷூவைக் கழட்டிப் புஷ் மீது வீசி எரிஞ்சானோ….. அன்னையிலிருந்து இன்னைக்கு வரை செருப்பு வீசுவது ரொம்பப் பேஷன் ஆகிப்போச்சு.

இந்தச் செயல் அநாகரீகமானதாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் வெறுப்பும், கோபமும் ஆராயப்பட வேண்டிய ஒன்று.

நேரு குடும்பம் இந்த நாட்டுக்கு அறுபத்து நான்கு ஆண்டு காலமாகச் செய்து வரும் துரோகத்தைத் தாங்க முடியாத மக்களில் ஒருவரின் கொந்தளிப்பான வெளிப்பாடுதான் இது.

இனியாவது அந்தக் குடும்பம் திருந்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கைதான் அது என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

வெள்ளையனிடம் இருந்து பிடுங்கிய சுதந்திரத்தை, வெள்ளைக்காரியிடம் விற்றுவிட்டோம் என்கிற கதையாக நம் கதை ஆகிவிடக்கூடாது…..

காலனி ஆதிக்கத்தில் இருந்து மீண்ட நாம்….. இன்னும் காலணி ஆதிக்கத்தில் இருந்து மீளமுடியாமைக்குக் காரணம் இதுதான்.

ஆனாலும் கூட…. இப்படியெல்லாம் செஞ்சா மட்டும் அவரு கோவிச்சிக்கிட்டு இத்தாலிக்கு ஓடிப் போயிடுவாருன்னு யாராவது நினைச்சீங்கன்னா, அது உங்க தப்பு………

ராகுல் பிரதமர் ஆனால் இந்தியா வல்லரசு ஆகிவிடுமாம்…… வல்லரசு என்ன இத்தாலியில் விலைக்குக் கிடைக்கிற கடலைமிட்டாயா?

வீசியவன் மேல் கோபம்தான் வருகிறது…… எவண்டா அவன், ஒரு ஷூவைக் கூடச் சரியாகக் குறி பார்த்து வீசத் தெரியாமல்…. என்று!

ஷூ வீசுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்…..

ஷூ வீசுபவர்கள், தயவுசெய்து தங்களது கால்களில் இருக்கும் ஷூவைக் கழட்டி வீசவேண்டாம்.

வீட்டில் இருக்கும் பழசான, பிஞ்சி போனதாப் பார்த்து எடுத்துகிட்டுப் போய் வீசுங்க.

வீட்டைச் சுத்தம் செஞ்சாப்லயும் இருக்கும், கிரிக்கெட் பந்தைப் பவுண்டரியிலேருந்து வீசிப் பழகினமாதிரி நல்ல பிராக்டிசாகவும் இருக்கும்….

ஆனால், சீரியசாக நினைத்துப் பார்த்தால்….. நம்மைக் கம்பீரமாக நடக்க வைக்க உதவும் ஷூவை, இப்படி அவமனப்படுத்தலாமா? என்றும் கோபப்படத் தோன்றுகிறது.

அதைப் பூஜை அறையில் வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை….. புழுதியில் வீசாமலாவது இருக்கலாமல்லவா?

Advertisements

4 comments on “மாத்தி யோசி….. ஷு விலை ரொம்ப ஜாஸ்தி!

  1. நாட்டைப் பாழாக்கும் நாதாரி கும்பலுக்கு நாச்சுன்னு ஒரு செருப்படி..

  2. இராம் அவர்களுடைய வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!

  3. //அதைப் பூஜை அறையில் வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை….. புழுதியில் வீசாமலாவது இருக்கலாமல்லவா?//

    புழுதி இல்ல நண்பா
    சாக்கடை

  4. புழுதி இல்ல நண்பா…சாக்கடை!

    ஷெரிப்பின் கமெண்ட் ரசிக்கும்படி இருந்தது….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s