பத்திரமா உங்க அக்கவுண்டைப் பாத்துக்கோங்க சார்!

உங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் திடீரென பல ஆயிரம் கோடி ரூபாய் இருப்புக் காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

சூப்பர் அதிர்ச்சி அடைந்து அப்படியே மயக்கம் போட்டிருப்பீர்கள்தானே…..

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் வங்கி சேமிப்பு கணக்கில், இப்படிதான் பல ஆயிரம் கோடி ரூபாய் இருப்புக் காட்டியது.

பார்த்தவருக்கு அதன் பூஜ்யங்களை எண்ணி எண்ணியே தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலோட சைபர் அளவுக்கு அவருடைய கணக்கிலும் நிறைய சைபர்கள்.

எவ்வளவு பணம் இருப்புக் காட்டியது தெரியுமா?

49,000,00,00,000 ரூபாய். பூஜ்யங்களை எண்ணி எண்ணி மண்டை காய்கிறதா? 49,000 கோடி ரூபாய்!

அந்தக் கூத்தைப் படியுங்கள்…..

பாரிஜாத் சஹா….. ஒரு பள்ளி ஆசிரியர். மேற்கு வங்கத்தில் உள்ள பாலுர்கட் என்ற சிறிய நகரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். மாதச் சம்பளம் ரூ 35000.

சமீபத்தில் தனது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக் கணக்கில் எவ்வளவு உள்ளது என்று இன்டர்நெட்டில் பார்த்துள்ளார். ரூபாய் 49,570,08,17,538 இருப்பதாகத் திரையில் காட்ட, அப்படியே ஷாக்கடித்து நின்றுவிட்டார் மனிதர்.

தனது கணக்குத்தானா அது என்று சந்தேகம் வந்து விட்டது அவருக்கு.. மீண்டும், மீண்டும் இருப்பைப் பரிசோதித்தார். ஓராண்டுக் கணக்கு முழுவதும் மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டார். எல்லாம் சரியாகவே இருந்தது. கடைசி என்ட்ரி மட்டும்தான் தலை சுற்றியது.

தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார் அந்தப் படுதிடமான ஆசாமி. டென்ஷனே ஆகவில்லை. ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்று உணர்ந்து, அதை நினைத்து இப்படிக் கூட வங்கி ஊழியர்கள் இருப்பார்களா என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

ஆஹா, வந்த வரை லாபம் என்று கமுக்கமாக இருக்கவில்லை சஹா. அடுத்த கணமே அந்த வங்கியில் தனக்குத் தெரிந்த அதிகாரிக்குப் போன் செய்தார்.

‘என்ன சார், வங்கியில் ஏகப்பட்ட பணம் இருக்கிறது போல; எனது கணக்கிற்கு இஷ்டத்திற்கு வாரி விட்டுட்டீங்க”… என்று கிண்டல் அடித்தார்.

“என்னுடைய கணக்கில் ரூ 49,000 கோடி வந்துள்ளது.. சீக்கிரமாக உங்களுடைய தவறைச் சரி செய்யுங்கள். என் பணம் ரூ 10,000 அதில் உள்ளது. நான் அதை எடுக்க வேண்டும்,” என்றாராம்.

விஷயம் வெளியில் கசிந்ததும், உளளூர்த் தொலைக்காட்சிகள் முதல் சி.என்.என், பி.பி.சி. வரை போட்டி போட்டுக் கொண்டு சஹாவைப் பேட்டி எடுத்துத் தள்ளின.

அவர்களிடம் சஹா கூறுகையில், “இவ்வளவு பணம் என் கணக்கிலிருப்பது தெரிந்ததும் எனக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. முதலில் இந்தத் தவறை சரி செய்யச் சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றியது” என்றார்.

ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல அலுவலகமும், மும்பைத் தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன. கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடக்கிறது. ஆனால், இந்த ரூ 49,000 கோடி வந்த வழி இதுவரையிலும் அவர்களுக்குத் தெரியவில்லையாம்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கீடு செய்த தொகை 57 ஆயிரத்து 500 கோடி ரூபாய்…. கிட்டத்தட்ட. அந்தத் தொகையை நெருங்கி விட்டது ஆசிரியர் சாஹாவின் வங்கி கணக்கு இருப்பு என்றும் பி.பி.சி. கிண்டல் அடித்துள்ளது.

இதைப் படிக்கிற எல்லோரும் பத்திரமா உங்க அக்கவுண்டைப் பாத்துக்கோங்க சார்!

நமக்கு வந்திட்டாப் பரவாயில்லை…. நம்ம அக்கவுண்டுல இருக்கிற கொஞ்சநஞ்சப் பணமும் வேறு அக்கவுண்டுக்குப் போயிடப் போகுது!

2 comments on “பத்திரமா உங்க அக்கவுண்டைப் பாத்துக்கோங்க சார்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s