அரிக்கேன் விளக்கும்…. அரசின் சட்டங்களும்!

கரூரில் தொழிலதிபர்களுடன் தொழில் மேம்பாடு குறித்த சந்திப்புக் கூட்டம்…….

அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி.தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில்….

கரூரில் நிலவும் சாயப்பட்டறை பிரச்னை குறித்து, கரூர் பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராமசாமி பேசினார்.

அவர் பேசும்போது, “கரூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் திட்டத்தை சாயப்பட்டறைகளில் அமல்படுத்தச் சொல்லி அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடிவிட்டது.

சாயப்பட்டறைகள் வைக்க முதலில் நீர்நிலைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால்தான் அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு 5 கிலோ மீட்டர் தள்ளித்தான் அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து சாயப்பட்டறைகள் தனியாகவோ அல்லது இணைந்தோ சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும் என்று அரசால் கூறப்பட்டது. இத்தனை சட்டங்களையும் சாயப்பட்டறைகள் பின்பற்றின.

ஆனால், இப்போது ஜீரோ டிஸ்சார்ஜ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியில் எங்கும் விடமுடியாது. அதை மீண்டும் ஆலையே பயன்படுத்திக்கொள்ளும் முறைதான் ஜீரோ டிஸ்சார்ஜ் திட்டம்.

இந்தத் திட்டத்தின்படி, சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஜீரோ டிஸ்சார்ஜ் திட்டத்திற்குப் பின்னர்- சுத்திகரிக்கப்பட்ட நீர் ஒரு சொட்டுக் கூட வெளியில் வராது. இந்த நடைமுறையைப் பின்பற்ற நாங்கள் அனைவரும் தயாராகவே உள்ளோம்.

ஆனால்- நீர்நிலைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் சாயப்பட்டறைகளும், 5 கிலோ மீட்டருக்குள் இருக்கும் சாயப்பட்டறைகளும் தங்களது சாயமிடுதல் அளவைக் கூட்டிக்கொள்ளக் கூடாது, ஏற்கனவே பட்டறைகள் அனுமதி பெற்றபோது என்ன அளவுக்கு அனுமதி பெற்றார்களோ, அதே அளவில்தான் சாயமிடுதல் வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுவதுதான் ஏன் என்று தெரியவில்லை…

அதிகப்படியாக சாயமிடுதல் பணி நடந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றுவதில்லை என்கிறபோது, சாயமிடுதலில் தேவையில்லாமல் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று தெரியவில்லை. எப்போதோ போட்ட அரசு உத்தரவுகளையே ஏன் இன்னும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை” எனறு பேசினார்.

தொடர்ந்து அவர் பேசியதுதான் சரியான ஹைலைட் சமாச்சாரம்….

“அரசு அலுவலகங்கலில் பெட்ரோல் கார் மட்டும் இருந்த காலத்தில், பெட்ரோல் போட மட்டும் முதலில் உத்தரவு பெற்றிருப்பார்கள். பிறகு டீசல் கார்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், டீசல் போட்டாலும் பில் மட்டும் பெட்ரோல் என்றே வாங்கிவந்து கோப்புகளில் வைப்பார்கள். காரணம் கேட்டால், அரசு விதிப்படி பெட்ரோல் வாங்கமட்டுமே ஏற்கனவே அனுமதி தரப்பட்டிருக்கிறது. என்வே டீசல் பில்லை ஏற்க இயலாது என்று கூறுவர்.

அதுபோலவே, வாட்ச்மேனுக்கு அரிக்கேன் விளக்குக்கு மண்ணெண்ணை வாங்க மட்டுமே அனுமதி இருந்தது. பின்னர் டார்ச் லைட் வந்தபிறகு, அதற்கு செல் வாங்கும்போதுகூட, மண்ணெண்ணை வாங்கியதாகவே பில் வாங்கிக்கொண்டு, அதற்குப் பதிலாகப் பேட்டரி செல் வாங்கிப் பயன்படுத்தினர்.

காலத்திற்கு ஏற்பப் புதிய சட்டங்களைப் போடும் அரசு, பழைய சட்டதிட்டங்களையும் மாற்றவேண்டும். எனவே, சாயப்பட்டறைகள் இருக்கும் இடத்தில் அவற்றின் சாயமிடுதல் அளவை உயர்த்திக்கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்க வேண்டும்” என்றார்.

அமைச்சர்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் சீரியசாகச் சிந்திக்க வேண்டிய விஷயம் இது!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s