பிப்ரவரி 3-ல் கொலைவெறி 3 ?

“அடிடா அவளை…. உதைடா அவளை” என்கிற அற்புதமான தமிழ்ப் பாடலையும் தாண்டி-

“ஒய் திஸ் கொலைவெறி, கொலைவெறிடி?” என்கிற பாடல்…..

உலகம் முழுவதும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

செம்மொழித் தமிழுக்கு இந்தப் பாடலின் மூலம் மேலும் சிறப்புச் சேர்த்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

என்னமாய் இனிய வார்த்தைகள்? என்னமாய் தமிழ் உச்சரிப்பு? என்னமாய் இலக்கிய நயம்?

(வைரமுத்தும், வாலியும் என்ன பாட்டு எழுதுகிறார்கள்? கண்ணதாசனே இப்படி எழுதவில்லையே?)

எதற்கும் மசியாத மண்ணாங்கட்டி மன்மோகன் சிங்கே, தனுஷை அழைத்துப் பாராட்டி விருந்து வைத்தார் என்றால் சும்மாவா?

எந்தப் பாட்டும் பிடிக்காத அவருக்கே இந்தப் பாட்டு மட்டும் பிடித்திருக்கிறது என்றால்?…. தனுஷ் பெரிய ஆள்தான்.

இயக்குநராக மனைவி இருக்கும்போதே…. ஸ்ருதிஹாசனோடு சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், சுட்டுக்கொண்டு இருப்பதாகவும் ஒரு பரபரப்பைக் கிளப்பி…..

படத்திற்கான விளம்பரத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக விரிவுபடுத்திக் கொண்டார்கள்.

பிப்ரவரி 3-ம் தேதி வெள்ளிக்கிழமை படம் வெளியாவதாகச் சொல்கிறார்கள்…..

அன்றைய தினத்தை, அரசு விடுமுறை தினமாக அறிவித்து விட்டால்….. படம் பார்க்க வசதியாக இருக்கும்.

அப்படியே அந்தப் பாடலை, ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்திலும் சேர்க்கவேண்டும்!

தமிழ் படங்களின் பாடல்களில் இணையதளங்களில் அதிகமாகப் பார்க்கப்பட்ட பாடல், இந்த ஒய் திஸ் கொலைவெறி பாடலாகத்தான் இருக்கும்.

சுமார் 3 கோடிக்கும் அதிமானவர்கள் இந்தப் பாடலைத் தேடிப்பிடித்துப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

எந்த அளவுக்கு இந்தப் பாடல் மக்களைச் சேர்ந்திருக்கிறதோ, அதே அளவுக்கு இந்தப் பாடலை எதிர்ப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

‘இது போன்ற பாடல்கள் ஆண்களின் உளவியல் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றன…..

இதுவும் ஒரு வன்முறை போன்றதுதான். இந்த வன்முறையை மீடியா மூலம் விளம்பரப்படுத்தி, அதை மக்களை ரசிக்க வைக்கிற ஒரு வகைத் தந்திரம். இது மிகவும் ஆபத்தானதும் கூட.

அடிடா அவளை, கொலைவெறிடி என்றெல்லாம் பாடுகிற பாட்டு…. ஏதுமறியாச் சிறுவர்களிடம் பெண்களை மதிக்கணும்ங்கிற முக்கியமான விஷயத்தை எப்படி வளர்க்கும்?

இது போன்ற பாடல்கள் ஹிட் அல்ல… சமுதாயக் கேடு!”


Advertisements

3 comments on “பிப்ரவரி 3-ல் கொலைவெறி 3 ?

  1. \\வைரமுத்தும், வாலியும் என்ன பாட்டு எழுதுகிறார்கள்? \\முக்காலா முக்காபுலா லேலா… டேக் இட் ஈசி ஊர்வசி…. என்று எழுதினார்கள்…

  2. இதற்கு வெட்கப்பட வேண்டியவர்கள்…..

    நாமா? அவர்களா? தமிழா?……

    தெரியவில்லை.

  3. // அடிடா அவளை, கொலைவெறிடி என்றெல்லாம் பாடுகிற பாட்டு…. ஏதுமறியாச் சிறுவர்களிடம் பெண்களை மதிக்கணும்ங்கிற முக்கியமான விஷயத்தை எப்படி வளர்க்கும்? //
    எது எதுக்கோ உப்பு சப்பில்லாத காரணுங்களுக்காக போராடும் நம் மக்கள்
    இந்த பாட்டை தடை செய்யவேண்டும் என்று போராடமாட்டார்களா ?!
    // இது போன்ற பாடல்கள் ஹிட் அல்ல… சமுதாயக் கேடு!”//
    தமிழ் மொழியை கெடுப்பவர்கள் ……..
    தமிழினத்தின் பெருமையை கெடுப்பவர்கள் ……..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s