பாவம், உடன்பிறப்புகள்தான் பரிதாபத்திற்கு உரியவர்கள்!

இந்தப் பதிவை நான் தவிர்க்கவேண்டும் என்பதற்காகத்தான், இவ்வளவு நாட்களும் தள்ளிப்போட்டுப் பார்த்தேன்.

ஒரு முறை படிப்பதற்கே வெறுப்பாக இருக்கிற விஷயத்தை……

விமர்சனம் என்கிற பெயரால் மீண்டும் மீண்டும் படிக்கவைப்பதா? என்றுதான் யோசித்தேன்.

கனிமொழியின் 44-வது பிறந்தநாள் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்- அவருக்கென இருக்கிற வட்டங்களும் சதுரங்களும்.

ஆனால் கனிமொழியோ, தனது பிறந்தநாளின் பெரும்பாலான நேரத்தை நீதிமன்றத்திலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த நேரத்தில் இந்த விழாத் தேவைதானா? என்று பலரும் பல கோணங்களில் விமர்சித்திருக்கிறார்கள்.

அதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்றுதான் நான் கருதுகிறேன்.

சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரனுக்கே தனது பிறந்தநாளைச் சந்தோஷமாகக் கொண்டாடி மகிழ உரிமை இருக்கும்போது, கனிமொழிக்கு மட்டும் அந்த உரிமை இல்லாமல் போய்விட்டதாக யாராவது கருதினால்….. அது அறியாமையின் உச்சம் என்றுதான் அர்த்தம்.

ஆனாலும், இது கொஞ்சம் அதிகப்படி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

திகாரை விட்டு வெளியே வந்ததற்கே திருவிழாவை ஏற்பாடு செய்தவர்களால், பிறந்தநாள் அன்றைக்குப் பேசாமல் இருக்கமுடியுமா?

கனிமொழியின் மனதுக்குள் நுழைய முயற்சிப்பதற்கான கைங்கரியங்களில் இது ஒரு வகை. அவ்வளவுதான்.

தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் யாருமே கலந்துகொள்ளாமல், ஏன் அதைப் புறக்கணித்தார்கள் என்பதெல்லாம் இப்போதைக்குத் தேவையில்லாத கேள்வி.

ஆனால், அந்தப் பிறந்தநாள் விழாவில்…..

கலைஞரின் துணைவியாரும் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் பேசிய பேச்சுத்தான், ஆதிகாலத்துக் கருப்பு சிவப்பு வேஷ்டியினரின் முகத்தில் அமிலத்தைத் தெளித்திருக்கிறது.

“கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி ஒன்றுமே தெரியாது” என்று அவர் பேசியதை, அங்கிருந்த கட்சிக்காரர்களிலேயே எத்தனைபேர் ஏற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

“கலைஞர் டி.வி.யின் வாசல் படியைக் கூட இதுவரை என் மகள் மிதித்தது கிடையாது”- “”அவர் ஒருமுறை கூட ஆ.ராசாவின் அலுவலகத்திற்குள் சென்றது கிடையாது”- இதுவும் அம்மையார் சொன்னதுதான்.

கனகாவைக் கற்பழித்து விட்டதாகக் கணேசன் மீது வழக்கு. அப்போது இன்ஸ்பெக்டரிடம் கணேசன் சொன்னானாம் “அய்யா…. இதுவரையிலும் ஒரு தடவை கூடக் கனகாவோட வீட்டு வாசலில் நான் கால் வைத்தது கிடையாது. கேஸ் பொய்யின்னானாம்”.

இன்ஸ்பெக்டரு விட்டாரு பாரு ஒரு அடி… “ஏண்டா ராஸ்கல், செய்யறதையும் செஞ்சிட்டுப் பேச்சு வேற பேசறியா பேச்சு? வீட்டுக்குப் போனாத்தான் கற்பழிக்க முடியுமா? வேற இடத்திலவச்சு ஒண்ணுமே பண்ண முடியாதா?”

தய்வு செய்து இந்த இரண்டுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கவேண்டாம்.

“மிசா” காலம்னு ஒண்ணு வந்தது தெரியுமா? சோனியாவோட மாமியார் கொண்டுவந்தாங்க.

அந்த மிசாவில உள்ளே போயிட்டு வந்த உடன்பிறப்புக்களில் யாராவது உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா…. கேட்டுப்பாருங்க.

உயிரோடு இருக்கும்போதே அனுபவித்த ஒரிஜனல் நரகம்னா அதுதான். எமலோகம் என்பதெல்லாம் இரண்டாவது பட்சம்தான்.

ஸ்டாலினிடம் கேட்டாலே அந்தக் கொடுமைகளைப் பற்றி அழகாகச் சொல்லுவாரே…..

அந்த ஸ்டாலினைக் காப்பாற்றத் தன்னுயிரையே ஈந்த சிட்டிபாபுவைத் தெரியுமா?

ஆட்சியைக் கலைச்சிட்டான்னு தீக்குளிச்சவங்க, கலைஞரைக் கைது பண்ணிட்டான்னு தீக்குளிச்சவங்க….

இப்படித் தன்னைத் தானே அழித்துக் கொண்டு, தனது குடும்பத்தைக் கூடக் கவனிக்காமல் தத்தளிக்க விட்டுவிட்டுப் போனவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

தி.மு.க. ஒண்ணும் தானா வளரலை. தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததினால் மட்டும் வளர்ந்த இயக்கமல்ல இது.

பலபேருடைய உயிரும் இங்கே விதைக்கப்பட்ட பிறகுதான், இது விருட்சமாக மாறியிருக்கிறது.

இந்தச் சரித்திரமெல்லாம் தெரியாமல்….

“திகார் சிறையில் இருந்த கனிமொழி, எவ்வளவு கஷ்டங்களையும், சோதனைகளையும் சந்தித்திருக்கிறார், கனி பட்ட கஷ்டம் உங்களுக்கு எல்லாம் தெரியாது.

சிறையில் எவ்வளவோ வேதனைப்பட்டு இருக்கிறார். சிறையில் ஒரு நாற்காலி கூடக் கிடையாது. தரையில்தான் உட்கார்ந்து இருக்கவேண்டும். படுப்பதற்கு ஒரு பாய் கூடக் கிடையாது.

அவர் இருந்த அறையில் பூச்சிகள் நிறைய இருந்தன. ஒரு முறை நான் சென்று பார்த்தபோது, பூச்சி கடித்து அவரது உடம்பில் பல இடங்களில் தடித்து இருந்தது. சொல்ல முடியாத அளவுக்குப் பூச்சிகளால் அவர் அவதிப்பட்டார்

அவர் கட்சிக்காகத்தான் இவ்வளவு தண்டனைகளையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டார்!”

-இப்படியெல்லாம் உருக்கமாகப் பேசி, எல்லோரையும் அதிர வைத்திருக்கிறார்.

கட்சிக்காகத்தான் சிறையில் இருந்தார் என்றால்….. கட்சி வேறு கிடையாது, குடும்பம் வேறு கிடையாது, இரண்டுமே ஒன்றுதான் என்று சொல்லாமல் சொல்கிறாரா?

கட்சிக்காகத்தான் சிறையில் இருந்தார் என்றால்….. ஸ்பெக்ட்ரத்தில் அடித்த காசை எல்லாம், கட்சியில் இருக்கும் கடைசித் தொண்டனுக்கா கொடுத்தார் கனிமொழி?

கட்சிக்காகத்தான் ஜெயிலில் இருந்தாராம், அதற்காகக் கட்சிப் பதவி கொடுக்க வேண்டுமாம்….

எம்.பி..பதவி கொடுத்ததுக்கே, காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்தமாதிரி இந்த மேய் மேஞ்சிட்டீங்க. இன்னும் கட்சிப்பதவி வேற கொடுத்துட்டா…. எது தாங்குமோ தாங்காதோ, நாடு தாங்காதப்பா!

பாவம், உடன்பிறப்புகள்தான் பரிதாபத்திற்கு உரியவர்கள்!

3 comments on “பாவம், உடன்பிறப்புகள்தான் பரிதாபத்திற்கு உரியவர்கள்!

  1. எம்.பி..பதவி கொடுத்ததுக்கே, காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்தமாதிரி இந்த மேய் மேஞ்சிட்டீங்க. இன்னும் கட்சிப்பதவி வேற கொடுத்துட்டா…. எது தாங்குமோ தாங்காதோ, நாடு தாங்காதப்பா! //
    சரியான நெத்தியடி ……சபாஷ்
    ஊருக்குதான் தந்தை பெரியாரின் உபதேசங்கள் …ஆனால்
    தன் வீட்டில் இல்லை ….படத்த பாருங்க ராஜாத்தியம்மா செய்றத

  2. கடவுள் மறுப்பு , கருணாநிதியின் கொள்கை ,அவரது கொள்கையை அவரது வீட்டார் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை .இது பகுத்தரிவு .அதை அவர் வீட்டாரிடம் திணித்தால் அவர் ஆணாதிக்க சிந்தனை உள்ளவராகவே கருதப்படுவார் .அவர் சிறந்த பகுத்தரிவுவாதி .நாங்க ஆட்சிக்கு வந்தால் மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து சும்மாவே இருப்பவர்கள் மீது உங்கள் கவனம் இருக்கட்டும் .கருணாநிதி ,கனிமொழி போன்ற விஷயங்கள் இப்போதைக்கு வேண்டாம்.ஜெயா பற்றி பெங்களூரு வக்கீல் ஆச்சார்யா சொன்னதை நினைவில் கொள்க .2 கோடி க்காக எவ்வளவு
    அசிங்கம் .இப்ப என்ன வேண்டுமோ அதை கேளுங்க ,காலத்தை வீணாக்க வேண்டாம் நண்பா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s