காங்கிரஸ் வெளியேறலாம்…..கதவு திறந்தே இருக்கு!

உள்ளே போவதும், வெளியே போவதும்

உங்களது விருப்பம்!

திரிணாமுல் காங்கிரசுக்கும், தேசியக் காங்கிரசுக்கும் இடையிலான உரசலின் முடிவில்….

தேனிலவு மட்டும் முடிந்துவிட்டதா? அல்லது திருமண பந்தமும் சேர்ந்தா?

இரண்டுமே முறிந்தாலும் கூட, கள்ளத் தொடர்பை காங்கிரஸ் விட்டுவிடுமா?

இந்தக் கேள்விகள்தான் இன்றைய தேதியில் சூடான பஜ்ஜிகளாக, வடக்கு மாநிலங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, பெட்ரோல் விலை உயர்வு, லோக்பால் மசோதா என எலாவற்றிலுமே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது.

இதன் உச்சமாகத்தான்….

காங்கிரஸ் தாராளமாக வெளியேறலாம், கதவு திறந்தே இருக்கிறது என்று கடுப்புடன் மம்தாவும்…..

அடடே, நாங்க எதுக்கு வெளியே போறோம்? அதெல்லாம் முடியாது என்று கூலாகக் காங்கிரசும்…..

ஓட்டுப் போட்ட மக்களுக்குக் கண்ணாமூச்சி காட்டிகொண்டு இருக்கிறார்கள்.

தெற்குப் பகுதியிலும் இதே மாதிரியான விளையாட்டைத்தான் தி.மு.க.வும், காங்கிரசும் விளையாடிக் கொண்டிருந்தன.

முதல் ரவுண்டை முடித்துக்கொண்டுக் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று இவர்கள் உட்காருகிற நேரத்தில், அங்கே அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.

இதே நிலை எல்லா இடத்திலும் நீடிக்குமானால்……

கடைசியில் காயலான் கடைக்குக் கூடப் போகமுடியாத கதையாகக் காங்கிரசின் நிலை ஆகிவிடப்போகிறது.

மன்மோகன் சிங்க் காலத்துடன் மரணசாசனம் எழுதி விடுவார்கள் போல் தெரிகிறது!

Advertisements

2 comments on “காங்கிரஸ் வெளியேறலாம்…..கதவு திறந்தே இருக்கு!

  1. காங்கிரசுக்கு கல்தா கொடுத்து , கம்யுனிஸ்ட்களுக்கு
    ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் ஏன்னா இருக்கிற கட்சிகளில்
    கொஞ்சமாவது நேர்மையாகவும், பெரிசாக ஊழல் இல்லாமலும் ,
    இருக்கிற ஒரே கட்சி ….செம்படை கட்சிதான் .

  2. இரண்டுமே முறிந்தாலும் கூட, கள்ளத் தொடர்பை காங்கிரஸ் விட்டுவிடுமா? ,,,,,,,,,,,,,,,kankirasota thani style athu thaane

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s