சொர்க்கத்துக்கு இப்படியும் போகலாமா?

சொர்க்க வாசல்னு சொன்னா….

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஞாபகம் வரும்.

அதில் நல்லதும் வரும், கொஞ்சம் கெட்டதும் வரும்.

ஆனால், இங்கே என்ன நடந்ததுச்சின்னு நீங்களே பாருங்க.

வைகுண்ட ஏகாதசி நாளில் மரணம் அடைபவர்கள் யாராக இருந்தாலும், நேராக சொர்க்கத்துக்குப் போகலாம் என்று கணவன் சொல்ல…..

அந்தக் கதையைக் கேட்ட மனைவி- உடனே தூக்குக் கயிற்றில் தொங்கி உயிரை விட்டிருக்கிறார்.

நம்மோடு இருந்து பிரிந்துபோன, கர்நாடக மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் என்ற ஊரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கொள்ளேகால், 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது அங்கே சேர்ந்துவிட்டது.

சரஸ்வதி என்ற அந்தப் பெண்மணி உறுதியாக சொர்க்கத்துக்குத்தான் போயிருப்பார் என்கிற நம்பிக்கையில், குடும்பத்தினரின் சோகம் குறைவாகவும், கட்டுக்குள்ளும் இருப்பதாகக் காவல்துறை சொல்கிறது.

இதே ஏகாதசி நம்பிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முதிய தம்பதி ஸ்ரீபெரும்புதூரில் மணக்கோலத்தில் விஷம் அருந்தி உயிர்விடுத்த சம்பவம் நிகழ்ந்தது.

பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கும்போது, அதன்வழியாக நடந்து செல்ல முண்டியடிக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முக மலர்ச்சியைப் பார்த்தால்….. உண்மையான சொர்க்கத்துக்குள்ளேயே அடியெடுத்து வைப்பதைப் போன்ற பரவசம் முகத்தில் ததும்புவதைக் காணலாம்.

மேலே இருப்பவன் நமது பெயரைக் குறித்து வைத்துக் கொள்வான், அங்கே போகும்போது அனாவசியமான கேள்விகள் எல்லாம் கேட்காமல் கதவைத் திறந்து நம்மை உள்ளே அனுமதித்துவிடுவான் என்றெல்லாம் இன்னும்கூட மனதார நம்புகின்றனர் பெரும்பாலான பக்தர்கள்.

பக்தி மார்க்கத்தின் அடிப்படையே நம்பிக்கைதான். அதனால்தான் ஐதீகம் என்ற பெயரில் சொல்லப்படும் ஏராளமான தத்துவக் கதைகள் காலம் கடந்தும் கூட இன்றளவும் உயிரோட்டமாக வலம் வருகின்றன.

கேள்விகளுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட நம்பிக்கை இருப்பவர்களிடம், அதையே சாக்காக வைத்து மூளைச்சலவை செய்யும் குற்றமும் நிறைய நடக்கிறது.

தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்படும் பல குற்றவாளிகள், ஆயுதம், பலப்பிரயோகம் அல்லது சுடுசொல் உதவியுடன் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவரும்.

மூளைச்சலவையில் அப்படி எந்த அணுகுமுறைக்கும் இடமில்லை.

வைத்திருக்கிற நம்பிக்கையையே மெல்ல மெல்ல வெறியாக மாற்றும் கலை அது.

மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளின் அடிப்படையிலான மூளைச்சலவை என்பது……

தனிநபர் பலியையும் தாண்டி, ஒரு தற்கொலைப் படைகயையே உருவாக்கும் அலவுக்கு வலிமை வாய்ந்தது.

இந்த மாதிரியான விஷயங்களில் போதுமான அளவு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிகாலம் நம்மை மன்னிக்காது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s