கையைப்பிடிச்சு இழுத்தே வராதவளா, கண்ணடிச்சுக் கூப்பிட்ட்தும் வந்திடப்போறா?

சமீப காலமாக, ஆந்திர பிரதேசத்தில் அதிகமான அளவில் பாலியல் பலாத்காரக் குற்றங்கள் பதிவாகி வருகின்றன.

அப்படிப்பட்ட குற்றங்கள் அதிகமாக நடப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்க ஆரம்பித்தால்…..

ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் காரணங்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ஆனால், இப்போது அவற்றையெல்லாம் தாண்டி அந்த மாநிலத்தின் காவல்துறைத் தலைவர் சொல்லியிருக்கிற காரணம்- கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆண்களின் இச்சையைத் தூண்டக்கூடிய அளவுக்கு, கவர்ச்சியான ஆடைகளைப் பெண்கள் அணிவதுதான் இந்தக் குற்றங்களுக்கெல்லாம் காரணம் என்று அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் அணியும் ஆடைகளுக்கும், பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக- அவ்வப்போது யாராவது சொல்வதும், அதனால் சலசலப்பு ஏற்படுவதும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உடல் உறுப்புகளை மறைப்பதற்காக மட்டுமே ஆடை அணியப்படுகிறது என்கிற பழைய சித்தாந்தமே இந்த நாடுகளில் இன்னும் வேரூன்றி இருப்பதால்….

அழகான உடலமைப்பைப் பெருமையுடன் விளம்பரப்படுத்திக் கொள்ளவும் ஆடை பயன்படுகிறது என்ற நவீன சித்தாந்தத்தை ஜீரணித்துக் கொள்ளும் பக்குவம் இன்னும் இந்த மண்ணுக்கு வரவில்லை.

டி.ஜி.பி. சொல்லியிருக்கிற இதே கருத்தை, அவருக்கு முன்பாகவே பல முக்கியப் பிரமுகர்களும், அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துடைய மகளிர் அமைப்புகள் பல இதற்கெல்லாம் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், தனிப்பட்ட முறையில் பல பெண்கள், குறிப்பாகப் பெண் பிள்ளைகளைப் பெற்ற குடும்பத் தலைவிகள்…. இந்தக் கருத்தை ஆமோதித்து வரவேற்பதையும் ஊடகங்களின் வாயிலாகப் பார்க்கமுடிகிறது.

மாறிவரும் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை, அரைகுறை ஆடைகள் என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதில்லை. எனவே, இந்த மாதிரியான சூழ்நிலையில் டி.ஜி.பி.யின் பேச்சு அவர்களைப் போன்றோருக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.

ஆனால், அந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்து கிடக்கிற ஒரு முரண்பாட்டை, நாம் முழுவதுமாக ஒதுக்கிவிடவும் முடியாது.

டி.ஜி.பி.யின் கருத்துப்படி, அரைகுறை ஆடையோ அல்லது கவர்ச்சிகரமான ஆடையோ அணிகிற பெண்கள்தான், இப்படிப்பட குற்றங்களுக்குக் காரணம் என்றால்…..

அடக்க ஒடுக்கமாகவும், இழுத்துப் போர்த்திக் கொண்டும் ஆடை அணிந்த எந்தப் பெண்ணுமே இப்படிப்பட்ட குற்றங்களுக்குப் பலியானதில்லையா என்கிற கேள்விக்கு என்ன பதிலை அவரால் சொல்ல முடியும்?

அலுவலகங்கள் அனைத்தையுமே மூடிவிட்டால் ஊழலே நடக்க வாய்ப்பில்லை, அதன் மூலமாக ஒட்டுமொத்த ஊழலையும் ஒழித்துவிடலாம் என்பது மாதிரியான சிந்தனைதான் இது.

பெண்கள் தனியாக இரவில் வெளியே எங்கும் செல்லக்கூடாது, அதிகமாக நகைகள் அணிந்து போகக்கூடாது, எடுப்பாக உடை அனிவதைத் தவிர்க்க வேண்டும், இரவுநேர சினிமாக் காட்சிகளை ஒதுக்க வேண்டும்…… என்றெல்லாம் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் சொன்ன அறிவுரையைக் கேட்டு நாம் அப்படியே நெகிழ்ந்து போகவில்லையா என்ன?

இரவு பன்னிரெண்டு மணிக்கு எப்போது ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளோடு தனியாக வேளியே சென்றுவிட்டுப் பத்திரமாக வீடு திரும்ப முடிகிறதோ, அன்றைக்குத்தான் இந்தியா முழுமையான சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம் என்று காந்தி சொன்னர்.

ஆனால், இரவு நேரத்தில் சினிமாவுக்குக் கூடப் போகாதீங்க என்று கமிஷனர் சொல்கிறார்.

கமிஷனர் சொல்வதைப் பார்த்தால்…. காந்தி சொன்னது எந்தக் காலத்திலும் நடக்காது என்றே தோன்றுகிறது.

ஆடை மட்டும்தான் இதற்குக் கரணம் என்பது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் சமாதானமாக மட்டுமே இருக்க முடியும்.

பாடம் நடத்துகிற டீச்சரைக் கூட பக்கவாட்டில் இருந்து பார்த்து ரசித்துக் கமெண்ட் அடிக்கிற மாணவனிலிருந்து…..

பால் கொடுத்துக் கொண்டிருக்கிற தாய் ஒருத்தியின் மார்பைக்கூட வக்கிரகமாகப் பார்த்து வெறிகளைகிற வயோதிகன் வரை….

ஆண்கள் அனைவருமே நியாயவாதிகள் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல.

ஊர் முழுக்க மேய்கிற விபச்சாரியைக் கூட, உனக்குத் தேவை என்றாலும் அவளுடைய அனுமதி இல்லாமல் தொட்டால் அதுவும் குற்றமே.

அவிழ்த்துப் போடுகிற விபச்சாரிக்கே அந்த அளவுக்குப் பாதுகாப்பு இருக்கும்போது, கவர்ச்சியான உடை அணிந்திருந்தாள் என்பதால்தான் கையைப் பிடித்து இழுத்தேன் என்று காரணம் சொல்வது…..

நக்கற நாய்க்குச் செக்குன்னும் தெரியாது, சிவலிங்கமுன்னும் தெரியாது என்பதைத்தான் ஞாபகப் படுத்துகிறது.

ஆனால், அதே சமய்த்தில்….. பொண்ணுங்க மேலே சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுக்களையும் புறந்தள்ளிவிட முடியாது.

சந்து பொந்துன்னு எல்லா இடத்திலேயும் இவ்வளவு டாஸ்மாக் கடையைத் தொறந்துவைக்காம இருந்திருந்தா……

இந்த அளவுக்குக் குடிகாரர்களோட எண்ணிக்கையும் எகிறியிருக்காது அல்லவா?

சொல்ல வருகிற விஷயம் என்னன்னு புரியுதுங்களா அம்மணிகளே?

காட்டுமிராண்டித்தனமாக இருந்த அந்தக் காலத்திலேயே கூட, செடி இலை தழைகளைக் கட்டி அந்தரங்கத்தை மறைச்சிருந்தாங்க…..

ஆனா நீங்க?…..

Advertisements

5 comments on “கையைப்பிடிச்சு இழுத்தே வராதவளா, கண்ணடிச்சுக் கூப்பிட்ட்தும் வந்திடப்போறா?

 1. கவர்ச்சி உடையும் ஒரு காரணமே தவிர, கவர்ச்சி உடை மட்டுமே காரணமல்ல நண்பரே!

 2. // அவிழ்த்துப் போடுகிற விபச்சாரிக்கே அந்த அளவுக்குப் பாதுகாப்பு இருக்கும்போது, கவர்ச்சியான உடை அணிந்திருந்தாள் என்பதால்தான் கையைப் பிடித்து இழுத்தேன் என்று காரணம் சொல்வது…..
  நக்கற நாய்க்குச் செக்குன்னும் தெரியாது, சிவலிங்கமுன்னும் தெரியாது என்பதைத்தான் ஞாபகப் படுத்துகிறது. //
  நக்கற நாய்க்கு, ரோட்டில் போவது ஐட்டமா அல்லது குடும்பமா என்று தெரியுமா?? கவர்ச்சியான உடைதானே காரணம் …. மறைக்க வேண்டியதை சரியான முறையில் மறைத்துக்கொண்டு இருந்தால் விபரீதம் நிகழுமா ?? முன்னேறிய உலகம் என்று சொல்லிக்கொண்டு உடை விசயத்தில் மட்டும் அநாகரீக முறையில் உடுத்திக்கொண்டு மீண்டும் ஏவாள் காலத்துக்கே போனால் , விபரீதம் நிகழாமலா போகும் ??
  நாகரிக உலகம் என்று சொல்லிக்கொண்டு TIGHT ஆக ஜீன்ஸ் , டீஷர்ட்
  உடுத்திக்கொண்டு அங்க அவயங்களின் அளவுகளை காட்டினாலும்,
  சும்மா போரவர்கூட சில்மிஷம் செய்வாரே ..
  வீட்டை பெருக்க உதவும் ” துடைப்பம்” கே சேலை கட்டி வைத்தால் ,
  சபலம் அடையற காலமிது……
  மானம் கப்பல் ஏறியபிறகுதான் அறிவு வரணுமா ? அதுக்கு முன்னாடியே
  உடை விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க கூடாதா ???
  பார்பவர்களின் கண்ணை உறுத்தாத மாதிரி கண்ணியமாக உடை உடுத்திக் கொண்டுபோனால் , விபரீதம் நிகழுமா ??? நிகழாது …..
  நமக்கு எது தேவை ??
  சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து உணர்ந்தால், எல்லாம் சரியாகிவிடும் ….

 3. நாசரின் கருத்துக்கு நன்றி!

  1. மறைக்க வேண்டியதை சரியான முறையில் மறைத்துக்கொண்டு இருந்தால் விபரீதம் நிகழுமா ??

  2. வீட்டை பெருக்க உதவும் ” துடைப்பம்” கே சேலை கட்டி வைத்தால் ,
  சபலம் அடையற காலமிது……

  3. பார்பவர்களின் கண்ணை உறுத்தாத மாதிரி கண்ணியமாக உடை உடுத்திக் கொண்டுபோனால் , விபரீதம் நிகழுமா ??? நிகழாது …..

  இது நீங்கள் எழுதிய கருத்து.

  ஆகமொத்தத்தில்…. ஆண்களிடம் கட்டுப்பாடு கிடையாது என்று சொல்ல வருகிறீர்களா?

  வாய்ப்புக் கிடைத்தால் எதுவும் செய்வோம் என்பதன் வெளிப்பாடாக இதை எடுத்துக் கொள்ளலாமா?

  பிச்சைக்காரியின் ஜாக்கெட் கிழிசலில் தெரியும் அவயங்களைக் கூட ஓரக் கண்ணால் ரசித்துப் பார்க்கிற உலகமா இது?

  நமக்குள் இல்லாத கட்டுப்பாட்டுக்கு…. இது ஒரு சப்பைக் காரணம்.

  உடை விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க கூடாதா ???….. என்று அவர்களுக்கு அறிவுரை சொல்கிற தகுதி…..

  உணர்வு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இல்லாத நமக்கு இருக்கிறதா? என்பதுதான் கேள்வி.

  தெருவில் நடந்து போகிறீர்கள்…. ஒரு வீட்டின் கதவு திறந்து கிடக்கிறது. உடனே உள்ளே நுழைந்து உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு போய்விடுவீர்களா?

  நம்மை நிரபராதி என்று பொய்யாகக் காட்டிக்கொள்வதற்காக, நாம் எடுக்கிற ஆயுதமாகவே இந்த அறிவுரை இருக்கும்.

 4. we never heard a boy or man was harresed by women for exposed dressing. When the women do mind or care about how the men dress , why the men should get disturbed by dressing of women.This is nothig but perversion and male chavunistic.

  If you shut your ASS and eyes … there wont be any problem for you as well as for men who get aroused by sexy dressing.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s